Advertisment

ராஜிந்தர் கோயல், மிகச்சிறந்த ஆளுமை வீரர் - கிரிக்கெட் பிரபலங்கள் புகழாரம்

Rajinder Goel : கோயல், தனது ஓய்வுக்கு பிறகு, ஒரே இடத்தில் முடங்கி கிடக்காமல், நாடெங்குமிலும் உள் மைதானங்களுக்கு சென்று, அங்குள்ள திறமை வாய்ந்த வீரர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian cricket, rajinder goel ranji trophy, test cricket, spinner, rajinder goel, rajinder goel career, ,rajinder goel india career, rajinder goel nearly men, rajinder goel 12th man

Indian cricket, rajinder goel ranji trophy, test cricket, spinner, rajinder goel, rajinder goel career, ,rajinder goel india career, rajinder goel nearly men, rajinder goel 12th man

ராஜிந்தர் கோயல், இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர். உடல்நலக்குறைவு காரணமாக, தனது 77வது வயதில் அவர் காலமானார். அவரின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

ராஜிந்தர் கோயல், டொமஸ்டிக் கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறந்து விளங்கிய போதிலும், இந்தியாவுக்காக இதுவரை அவர் ஒரு டெஸ்ட் போட்டிகளில் கூட விளையாடியதில்லை. இருந்தபோதிலும், டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து வீரர்களின் ஆதர்ச குருவாக விளங்கியவர் கோயல் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜிந்தர் கோயல், தனது 43 வயதில் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். அப்போது அவர் 24 ஆண்டுகாலம் கிரிக்கெட் உலகில் தனது பங்களிப்பை செலுத்தியிருந்தார்.இவரது தலைமையிலான அணி 750 வெற்றிகளை பெற்றிருந்த நிலையில், இதில் 637 வெற்றிகள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பெற்றவை ஆகும்.

சஞ்சய் மஞ்சரேக்கர், கோயல், சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் ஒரேசமயத்தில், பாம்பே பேட்ஸ்மேன்ஷிப் ஸ்கூலில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

கோயலின் பந்து வீச்சு துல்லியமானது,எவ்வளவு பெரிய பேட்ஸ்மேன் ஆனாலும், அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது மிக கடினம். நானே சிலமுறை அவரது பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளேன். நான் பார்த்த வியத்தகு வீரர் ராஜிந்தர் கோயல் என்று, சுனில் கவாஸ்கர் அவரது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1974-75ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது 15 பேர் கொண்ட குழுவில் கோயல் இடம்பெற்றிருந்தபோதிலும், பிரசன்னா, வெங்கட்ராகவன் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், அவரால், அணியில் இடம்பெற முடியவில்லை. ஆனால், அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை.

 

publive-image

பேடியின் நெருங்கிய நண்பர்

கோயலின் கிரிக்கெட் பாதையை, பேடியால் தகர்ந்தது என்று பலர் கூறிவந்தபோதிலும், இவர்கள் இருவரும் கடைசிவரை மிகச்சிறந்த நண்பர்களாகவே விளங்கிவந்ததாக பிசிசிஐ முன்னாள் செயலாளர் அனிருத் சவுத்ரி தெரிவித்துள்ளார். ஹரியானா கிரிக்கெட் சங்கத்தின் கோயலின் பங்களிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. அவர் சிறந்த வீரர்களை உருவாக்கினார் என்று சவுத்ரி தெரிவித்துள்ளார்.

கோயல், தனது ஓய்வுக்கு பிறகு, ஒரே இடத்தில் முடங்கி கிடக்காமல், நாடெங்குமிலும் உள் மைதானங்களுக்கு சென்று, அங்குள்ள திறமை வாய்ந்த வீரர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். இவரைப்போல சிறந்த குணம் கொண்டவரை இதுவரை தான் பார்த்ததில்லை என்று சவுத்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

நாடு மிகச்சிறந்த பண்பாளர், கிரிக்கெட் உலகம், மிகச்சிறந்த ஆசானை இழந்துவிட்டதாகல வெங்சர்க்கார் தனது இரங்கல்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - Rajinder Goel, the best of the nearly men

Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment