ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்!

உலகக் கோப்பை ரேஸில் விஜய் ஷங்கரை பிசிசிஐ டிக் செய்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி இன்று (பிப்.15) அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. வரும் 24-ம் தேதி பெங்களூரில் முதல் டி20 போட்டியும், 27-ம் தேதி விசாகப்பட்டினத்தில் 2-வது போட்டியும் நடைபெறுகிறது.

ஒருநாள் தொடர் மார்ச் 2-ல் ஹைதராபாத்திலும், மார்ச் 5-ம் தேதி நாக்பூரிலும், 3-வது போட்டி 8-ம் தேதி ராஞ்சியிலும், 10-ம் தேதி மொஹாலியிலும், 13-ம் தேதி 5-வது போட்டி டெல்லியிலும் நடக்கிறது.

இந்தத் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய, தேர்வுக் குழு இன்று மும்பையில் கூடியது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு, டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டி20 அணி:

விராட் கோலி(C), ரோஹித் ஷர்மா (vc), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், எம் எஸ் தோனி (WK), ஹர்திக் பாண்ட்யா, க்ருனல் பாண்ட்யா, விஜய் ஷங்கர், யுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மாயன்க் மார்கண்டே.

இந்திய ஒருநாள் அணி (முதல் இரு ஓருநாள் போட்டிகள்):

விராட் கோலி(C), ரோஹித் ஷர்மா (vc), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட், எம் எஸ் தோனி (WK), ஹர்திக் பாண்ட்யா, விஜய் ஷங்கர், யுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், சித்தார்த் கவுல், லோகேஷ் ராகுல்.

இந்திய ஒருநாள் அணி (கடைசி மூன்று ஓருநாள் போட்டிகள்):

விராட் கோலி(C), ரோஹித் ஷர்மா (vc), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட், எம் எஸ் தோனி (WK), ஹர்திக் பாண்ட்யா, விஜய் ஷங்கர், யுவேந்திர சாஹல், புவனேஷ் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல்.

டி20 அணியைப் பொறுத்தவரை, சித்தார்த் கவுல் மீண்டும் அணிக்கும் திரும்பியுள்ளார். அதேபோல், கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கவனம் ஈர்த்த வலது கை லெக் பிரேக் ஸ்பின்னர் மாயன்க் மார்கண்டே முதன் முதலாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இதுவொரு ஆச்சர்ய வருகை என்றே சொல்லவேண்டும். மற்றபடி, தமிழக வீரர் விஜய் ஷங்கர், க்ருனல் பாண்ட்யா ஆகியோருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் அணித் தேர்வு தான் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில், இந்த ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு தான், இங்கிலாந்தில் மே மாதம் தொடங்கவுள்ள 50 உலகக் கோப்பைக்கான இந்திய அணித் தேர்வுக்கு கருத்தில் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமாருக்கு பதில் சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆனால், கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில் சித்தார்த்துக்கு பதிலாக புவனேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

மற்றபடி, மீண்டும் ஒருநாள் அணியில் லோகேஷ் ராகுல் இடம் பெறுகிறார். இவர் ஐந்த போட்டிகளுக்கான அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். ஆகையால், உலகக் கோப்பை திட்டத்தில் லோகேஷ் ராகுல் நீடிப்பது உறுதியாகிவிட்டது. அதைத் தவிர்த்து பார்க்கும் போது, விஜய் ஷங்கருக்கும் ஐந்து போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யாவிற்கு மாற்று ஆல் ரவுண்டராக, உலகக் கோப்பை ரேஸில் விஜய் ஷங்கரை பிசிசிஐ டிக் செய்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.

இதைத் தவிர்த்து, நாம் எதிர்பார்த்தப்படி தான் அணி அமைந்துள்ளது. ஆனால், உலகக் கோப்பை பிளானில் இருந்து ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, கலீல் அகமது ஆகியோர் முற்றிலுமாக நீக்கப்பட்டிருப்பதும் நமது உறுதியாகிறது. குறிப்பாக, ரவீந்திர ஜடேஜா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இது நிச்சயம் பெருத்த ஏமாற்றம் அளிக்கும் என்பதே உண்மை!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close