Advertisment

தகாத முறையில் நடந்து கொண்ட இந்திய பயிற்சியாளர்.. லீடிங் பெண் சைக்கிளிஸ்ட் குற்றச்சாட்டு!

இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு(SAI) அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் புகார் சமர்ப்பிக்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்திருக்கிறது.

author-image
WebDesk
New Update
Sports news

Indian woman cyclist has accused the national sprint team chief coach R K Sharma of inappropriate behaviour

ஸ்லோவேனியாவில் நடந்த முகாமின் போது, ​​தேசிய ஸ்பிரிண்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆர்.கே.சர்மா "தகாத முறையில் நடந்து கொண்டதாக லீடிங் இந்திய பெண் சைக்கிளிஸ்ட் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

டில்லியில் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ள ஆசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக நடந்த ஆயத்த முகாமின் ஒரு பகுதியாக சைக்கிளிஸ்ட் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு(SAI) அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் புகார் சமர்ப்பிக்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்திருக்கிறது. சைக்கிள் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (CFI) பரிந்துரையின் பேரில் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டார்.

தடகள வீரரின் புகாரைத் தொடர்ந்து, இந்திய விளையாட்டு ஆணையம் உடனடியாக அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, அவரது பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் சைக்கிள் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (CFI) ஆகியவை குற்றச்சாட்டைக் கண்டறிய இரண்டு தனித்தனி விசாரணைக் குழுக்களை அமைத்துள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையம், புகார்தாரரையும் பயிற்சியாளரையும் அடையாளம் கண்டுள்ளது - அதன் அதிகாரிகள் "புகார்தாரருடன் நிற்கிறார்கள். இந்த விவகாரம் முன்னுரிமை அடிப்படையில் கையாளப்பட்டு வருகிறது, விரைவில் தீர்க்கப்படும், ”என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment