Advertisment

பயணம் முடிவுக்கு வந்தது... சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த மிதாலி ராஜ்

Mithali Raj Announces Retirement From All Forms Of International Cricket : இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தனது திறமையான ஆட்டத்தின் மூலம் அசத்தி வந்தவர் மிதாலி ராஜ்

author-image
WebDesk
New Update
பயணம் முடிவுக்கு வந்தது... சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த மிதாலி ராஜ்

Mithali Raj Announces Retirement From All Forms Of International Cricket

Indian women's cricket icon Mithali Raj has announced retirement from all forms of cricket with immediate effect: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Advertisment

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தனது திறமையான ஆட்டத்தின் மூலம் அசத்தி வந்தவர் மிதாலி ராஜ். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் போல் தனது 16 வயதில் இந்திய அணிக்காக விளையாட தொடங்கிய மிதாலி ராஜ் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார்.

தமிழை தாய் மொழியாக கொண்ட மிதாலி ராஜ் இதுவரை 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7802 ரன்கள் குவித்துள்ளார் மேலும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் 6 முறை உலககோப்பை தொடரில் விளையாடிய பெருமை மதாலி ராஜையே சாரும். 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி ராஜ் 699 ரன்களும், 89 டி20 போட்டிகளில் விளையாடி 2364 ரன்களும் குவித்துள்ளார்.

கடந்த 1999-ம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அடியெடுத்து வைத்த மிதாலி ராஜ் கடைசியாக கடந்த மார்ச் 27-ந் தேதி நடைபெற்ற தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது கடைசி போட்டியில் விளையாடினார். தற்போது அவர் தனது 23 வருட சர்வதேக கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

வாழ்க்கையில் ஒவ்வொரு பயணமும் முடிவுக்கு வருவதை போல் இந்த பயணமும் முடிவுக்கு வந்துள்ளது. நான் அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். இந்திய அணியை பல வருடங்களாக சிறப்பாக வழி நடத்தியதற்கு பெருமைபடுகிறேன்.

போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட்டில் வேறு வகையில் எனது பங்களிப்பை கொடுப்பேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் மற்றும் எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவுடன் என்னுடைய 2-வது விரைவில் தொடங்குகிறேன் என்று கூறிப்பிட்டுள்ளார்.

மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றதை தொடர்ந்து எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிரிதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Womens Cricket Mithali Raj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment