இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்: அக்‌ஷர் படேலுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா சேர்ப்பு !

அக்சர் படேல் காயமடைந்ததால் அவருக்கு பதிலாக முதல் 3-ஒருநாள் போட்டிகளில் ரவிந்திர ஜடேஜாவக்கு இடம்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இப்போட்டி, மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது.

முன்னதாக முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. அதில் இடம்பெற்றிருநத ஷிகர் தவான் அவரது மனைவிக்கு உடல்குறைவு என்பதால், முதல் 3 ஓருநாள் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு மாற்று வீரர் யாரும் அறிவிக்கடவில்லை. தற்போதைய நிலையில். அக்சர் படேல் காயமடைந்ததால் அவருக்கு பதிலாக முதல் 3-ஒருநாள் போட்டிகளில் ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

×Close
×Close