IPL 2018 Final Live Streaming, CSK vs SRH Live Cricket Streaming: மொபைல் போனில் ஏர்டெல் டிவி, ஜியோ டிவி-யில் இலவசமாக ‘லைவ்’ பார்க்கலாம்

IPL 2018 Final Live Streaming, CSK vs SRH Live Cricket Score Streaming சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன் ரைசர்ஸ் போட்டியின் Live Match, Star Sports 1, Hotstar -ல்!

By: Updated: May 27, 2018, 10:27:21 PM

IPL 2018 Final Live Streaming, CSK vs SRH Live Cricket Score Streaming சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான ஐபிஎல்-2018 இறுதிப்போட்டி!

IPL 2018 Final Live Streaming, CSK vs SRH Live Cricket Score Streaming சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான ஐபிஎல்-2018 இறுதிப்போட்டி இன்று (மே 27) இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. மும்பையில் இந்த ஆட்டம் நடக்கிறது.

IPL 2018 Final Live Streaming, CSK vs SRH Live Cricket Streaming: சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான இறுதி ஆட்டம் தொடர்பான ‘லைவ்’ நிகழ்வுகள் எங்கே பார்க்கலாம்!

ஐ.பி.எல். 2018 நிறைவு நிகழ்ச்சி இன்று (மே 27) மாலை தொடங்குகிறது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மோதுகின்றன. உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறார்கள்.

இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. உங்கள் மொபைலில், ‘ஹாட் ஸ்டார்’ செயலியிலும் காணலாம். தவிர, ஜியோ டிவி, ஏர்டெல் டிவி ‘ஆப்’களிலும் பார்க்க முடியும். உங்கள் ஸ்மார்ட் போனில் காண கீழ்கண்ட வழிகள் இருக்கின்றன.

ஸ்டார் இந்தியாவுக்கு சொந்தமான ஹாட் ஸ்டார் ‘ஆப்’, மாதக்கட்டணம் 199-ல் லைவ் நிகழ்ச்சிகளையும் டி.வி. ஷோக்களையும், படங்களையும் பார்க்க அனுமதிக்கிறது. இதற்கு வருடக் கட்டணம் ரூ999 ஆகும். நீங்கள் கிரிக்கெட் விசிறியாக மட்டும் இருந்தால், ஆண்டுக்கு ரூ299 செலுத்தி, ‘ஆல் ஸ்போர்ட்ஸ் பேக்’கில் இணையலாம். அனைத்து டி-20, பார்முலா 1, கபடி, டென்னிஸ், கால்பந்து பிரீமியர் போட்டிகளை அதில் காணலாம். ஹாட் ஸ்டார் செயலியை ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு தளங்களில் பெறலாம்.

IPL 2018 Live Stream: How to watch the IPL final match on Airtel TV app

ஏர்டெல் நிறுவனம், ஹாட் ஸ்டாருடன் ‘டை அப்’ செய்து ஐபிஎல் 2018 டி-20 போட்டிகளை இலவசமாக காட்டுகிறது. இதற்கு ஏர்டெல் மற்றும் ஹாட் ஸ்டார் செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டும். ஏர்டெல் டிவி செயலியை திறந்து, ஐபிஎல் ஆப்ஷனில் நுழைந்தால், ஹாட் ஸ்டார் செயலி மூலமாக ஐபிஎல் இறுதிப் போட்டியை காணலாம்.

IPL 2018 Final Live Cricket Score, CSK vs SRH Live Score: பரபரப்பான ‘லைவ்’ ஸ்கோர்

IPL 2018 Live Stream: How to watch the IPL final match on Jio TV

நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், ஐபிஎல் 2018 அனைத்துப் போட்டிகளையும் இலவசமாக பார்த்திருக்க முடியும். ஆனால் நீங்கள் ஜியோ பிரைம் வாடிக்கையாளராக இருக்க வேண்டும். நீங்களும் ஜியோ டிவி மற்றும் ஹாட் ஸ்டார் செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டும். ஜியோ டிவி செயலியை திறந்து, ஐபிஎல் ஆப்ஷனில் நுழைந்தால், ஹாட் ஸ்டார் செயலியில் லைவ் மேட்ச்சை பார்க்கலாம்.

கூடுதலாக ஜியோ கிரிக்கெட் சீசன் ‘ஆப்’ ஸ்பெஷலாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. 251 ரூபாய்க்கு 102 ஜிபி-யில் 51 நாட்களுக்கு பயன்படும் வகையில் அறிமுகம் ஆகியிருக்கிறது. எனினும் இலவசமாகவே ஜியோ டிவியில் பார்க்கும் வசதி இருப்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.

இதர தகவல்கள்:

சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கிற்கு பந்து வீச போதிய வாய்ப்பு இல்லாதது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன சுவையான பதில்.. ‘என்னிடம் நிறைய கார்கள், பைக்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது’!

: உத்தேச அணி : அநேகமாக இரு அணிகளும் கீழ்கண்ட வீரர்களை களத்தில் இறக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் : பாஃப் டூ பிளிசிஸ், ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ்.டோனி, ரவீந்திர ஜடேஜா, பிராவோ, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், ஷர்துல் தாகூர், நிகிடி

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் : ஷிகர் தவான், விருத்திமான் சகா, கனே வில்லியம்சன், மனிஷ் பாண்டே அல்லது தீபக் ஹூடா, யூசுப் பதான், ஷாகிப் அல் ஹசன், கார்லோஸ் ப்ராத்வைட், ரஷீத்கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், கலீல் அகமது அல்லது சந்தீப் ஷர்மா

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Ipl 2018 live streaming csk vs srh live cricket streaming

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X