மும்பை இந்தியன்ஸ் வெற்றி! கடினமான தருணங்களை பரிசளித்து அசத்தல்!

IPL 2019, Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை வெற்றி

By: Apr 4, 2019, 12:05:29 AM

IPL 2019 CSK vs MI: ஐபிஎல் 2019 தொடரில், இன்று இரவு மும்பையில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

 

IE Tamil commentary

Indian Premier League, 2019Wankhede Stadium, Mumbai 01 November 2020

Mumbai Indians 170/5 (20.0)

vs

Chennai Super Kings 133/8 (20.0)

Match Ended ( Day - Match 15 ) Mumbai Indians beat Chennai Super Kings by 37 runs

Live Blog
IPL 2019: Mumbai Indians vs Chennai Super Kings
23:56 (IST)03 Apr 2019
மும்பை வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால், மும்பை 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

23:52 (IST)03 Apr 2019
பிராவோ அவுட்!

அதே மலிங்காவின் அதி பயங்கர யார்க்கர் பந்தில் 8 ரன்களில் பிராவோ அவுட்டாக, பாண்ட்யாவின் கடைசி ஓவரில் தீபக் சாஹர் அவுட்..

ம்ம்ம்..ம்ம்ம்.. இன்னும் என்ன எல்லாரும் உட்கார்ந்துகிட்டு இருக்க... கெளம்பு... கெளம்பு...

23:42 (IST)03 Apr 2019
ஜாதவ் அவுட்

மலிங்காவின் அதி பயங்கர ஸ்லோ பந்தில், கேதர் ஜாதவ் 54 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

முடிந்தது சிஎஸ்கே கதை!

23:41 (IST)03 Apr 2019
கிளாஸ் பும்ரா

பும்ராவின் 17வது ஓவரில் மொத்தமாகவே 3 ரன்களே அடிக்கப்பட்டது. பிராவோ, ஜாதவ் களத்தில் இருந்த போதே...

என்ன இருந்தாலும் அவுக உலகின் நம்பர்.1 இல்லையா!! அதான் அப்படி!!

23:31 (IST)03 Apr 2019
கேதர் ஜாதவ் 50

யாருமே இல்லாத களத்தில், தனி ஒருவனாக 46 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். 

நீயாவது அடிச்சியேன்னே... நல்லா இரு!

23:29 (IST)03 Apr 2019
94-5

சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களே எடுத்துள்ளது.

23:25 (IST)03 Apr 2019
தோனி, ஜடேஜா அவுட்

ஹர்திக் பாண்ட்யா ஓவரில், தோனி ஒரு புல் ஷாட் அடிக்க தோனி 12 ரன்களில் அவுட்டாக, அதே ஓவரில் ஜடேஜாவும் 1 ரன்னில் கீப்பர் கேட்ச் ஆனார். 

23:16 (IST)03 Apr 2019
கியரை மாத்துங்க சிஎஸ்கே!

13 ஓவர்கள் முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களே எடுத்திருக்கிறது. 

ஃபர்ஸ்ட் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் சிஎஸ்கே, இனிமேலாவது அட்லீஸ்ட் தேர்ட் கியரில் பயணித்தால் உசிதம்!.

23:09 (IST)03 Apr 2019
தோனி கேம் பிளான் என்ன?

ம்ம்ம்... அப்படியே அடிச்சு விளாசித் தள்ளுறது தான்... ஏங்க நீங்க வேற கடுப்ப கிளப்பிக்கிட்டு...

அவரு, விக்கெட்டே விழாட்டினா கூட, 17 ஓவருக்கு மேல தான் அடிப்பாரு. இங்கே, 3 விக்கெட் வேற விழுந்திருக்கு... சொல்லவா வேணும்!!

23:00 (IST)03 Apr 2019
66-3

10 ஓவர்கள் முடிவில், சென்னை 3 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்துள்ளது.

22:53 (IST)03 Apr 2019
தோனி.. இனி உங்களை நம்பியே இந்த தம்பி...

சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக ஆடிய தோனி, இன்றும் தன்னை அதேபோல் ஜெராக்ஸ் எடுத்தே ஆக வேண்டும். கமான் தோனி... 

யோவ்.. கண்ணாயிரம், நான் கமான்-னு சொன்னது தோனியைத் தான்.. உன்ன இல்லை.. இந்தப் பக்கம் வந்திராத.

22:42 (IST)03 Apr 2019
நம்பர்.1 பவுலர் அட்டாக்!

பும்ரா... வேற யாரை சொல்லப் போறேன்!?

22:39 (IST)03 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்...

அண்ணே... நீங்க என்ன சொல்லப் போறீங்க-னு தெரியும்... ஏற்கனவே நொந்து போயிருக்கும்... வேண்டாம்-னே ப்ளீஸ்..

கண்ணாயிரம் - என் கடமையை தடுக்காத தம்பி... இன்று சிஎஸ்கே தோல்வி அடையப் போவது உறுதி!.

22:34 (IST)03 Apr 2019
ரெய்னா அவுட்

பெஹ்ரென்டோர்ஃப் ஓவரை விளாச ரெய்னா, சிக்ஸ் லைனில் பொல்லார்டின் அபாரமான கேட்சால் 16 ரன்களில் அவுட் ஆனார். சிஎஸ்கே-வுக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது.

22:32 (IST)03 Apr 2019
கவனம்..கவனம்...

மும்பை இன்று பெரும்பாலும் ஃபாஸ்ட் பவுலிங்கை கொண்டே அட்டாக் செய்யும். ஏனெனில், பிட்ச் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆகிறது. அது பேட்ஸ்மேனுக்கு சாதகமாக இருந்தாலும் கூட, பும்ரா மற்றும் மலிங்காவின் யார்க்கர்ஸ் சிஎஸ்கே மனங்களை கொன்று புதைத்துவிடும். ஸோ எச்சரிக்கை தேவை...

22:22 (IST)03 Apr 2019
இன்னும் பும்ரா பவுல் பண்ணல... அதுக்குள்ளவே-வா

உலகின் நம்பர்.1 பவுலரான பும்ரா இன்னும் மும்பை அணிக்காக பந்து வீசவில்லை. ஆனால், அதற்குள் சென்னை இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

மலிங்கா, பும்ரா, பெஹ்ரென்டோர்ஃப் ஆகிய இம்மூவருக்கும் சேர்த்து 12 ஓவர்கள்.. மீதமுள்ள 8 ஓவர்களை சிஎஸ்கே சாத்தினால் தான் வெற்றியை பற்றி கனவே காண முடியும்...

இதுவே கள எதார்த்தம்....

22:14 (IST)03 Apr 2019
வாட்சன் அவுட்

அப்டேட் பண்ண விடுங்கடா!! என்னடா ஓவருக்கு ஓவர் அவுட் ஆகுறீங்க!!?

மலிங்காவின் முதல் ஓவரில் ஷேன் வாட்சன் 5 ரன்களில் கேட்ச் ஆக, சிஎஸ்கே தனது இரண்டாவது விக்கெட்டை பறிகொடுத்தது. 

22:09 (IST)03 Apr 2019
ராயுடு அவுட்

ஜேசன் வீசிய முதல் ஓவரிலேயே அம்பதி ராயுடு டக் அவுட் ஆனார். அவர் சந்தித்த முதல் பந்தும் அதுவே!! 

21:51 (IST)03 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

அண்ணே.... உங்க காலை காட்டுன்கண்ணே.... 170 அடிப்பாங்கன்னு சொன்னீங்களே... அடிச்சுட்டாங்களே... Prediction கிங்கு-ன்னே நீங்க

கண்ணாயிரம் - எல்லாம் 'அவன்' செயல்!

21:49 (IST)03 Apr 2019
20.0

ஹர்திக் - 6

21:49 (IST)03 Apr 2019
19.5

ஹர்திக் - 4

21:48 (IST)03 Apr 2019
19.4

ஹர்திக் - 6

21:47 (IST)03 Apr 2019
19.3

பொல்லார்ட் - 3 ரன்

21:46 (IST)03 Apr 2019
19.3

பொல்லார்ட் - 6 (நோபால், ஃப்ரீ ஹிட்)

21:45 (IST)03 Apr 2019
19.2

ஹர்திக் - 1 ரன்

21:45 (IST)03 Apr 2019
19.2

ஹர்திக் - வைட்

21:44 (IST)03 Apr 2019
19.1 - பிராவோ பவுலிங்

பொல்லார்ட் - 1 ரன்

21:42 (IST)03 Apr 2019
உஷார் சிஎஸ்கே!

களத்தில் இரண்டு பெரிய ஹிட்டர்ஸ்களான கீரன் பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா நிற்கின்றனர். இன்னும் ஒரே ஓவர் மீதமுள்ள நிலையில், கன்டெய்ன் செய்யும் பவுலர்களுக்கு ஒரு ஐஸ்க்ரீம் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

21:37 (IST)03 Apr 2019
சூர்யா அவுட்

43 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து, மும்பை சரிவை தடுத்து நிறுத்திய ஹீரோ சூர்யா குமார் யாதவ், பிராவோ ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

இன்னும் கொஞ்சம் அடிச்சிருக்கலாம்...

21:30 (IST)03 Apr 2019
க்ருனால் அவுட்

32 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்த க்ருனால் பாண்ட்யா, மொஹித் ஷர்மா ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

ஆனால், சூர்யகுமாரின் அச்விளாசல் தொடர்கிறது.... மொஹிட் ஷர்மாவின் 17வது ஓவரில் 16 ரன்கள் விளாசல்!

21:26 (IST)03 Apr 2019
103-3

16 ஓவர்கள் முடிவில் மும்பை 3 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.

21:17 (IST)03 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

என்ன ப்ரோ... 170+ அடிப்பாங்கன்னு சொன்னீங்கோ!! இப்போவே 14 ஓவர் ஆச்சு... 82 தான் ஸ்கோர் தெரியும்-ல?

கண்ணாயிரம் - தம்பி... அவசரப்படாத!! இன்னும் 6 ஓவர் இருக்கு, 36 பந்துகள் இருக்கு... கிரிக்கெட்டில் எது எப்போ வேணும்னாலும் மாறும்!! சின்னப் புள்ள நீ.. பேயாம வேடிக்கை மட்டும் பாரு!!

21:10 (IST)03 Apr 2019
க்ருனால் பாண்ட்யா எஸ்கேப்...

ஷர்துள் தாக்குரின் 13வது ஓவரில் க்ருனால் பாண்டாவுக்கு எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. ஆனால், ரிவியூ செய்ததில், பந்து பேட்டை முட்டமித்த பின், கால் பேடை அணைத்திருப்பது தெரிய வந்தது. ஸோ, நாட் அவுட்!

எப்போவாவது தாக்குருக்கு விழும் விக்கெட்டில் கூட மண் விழுந்த மொமன்ட்!!!

21:04 (IST)03 Apr 2019
78-3

13 ஓவர்கள் முடிவில், மும்பை 3 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. 

கணிப்பு கண்ணாயிரம் எங்கே இருந்தாலும் மேடைக்கு வரவும்...

20:50 (IST)03 Apr 2019
இந்தியாவின் டி வில்லியர்ஸ் இன்றாவது சாதிப்பாரா?

வேற யாரு சூர்யகுமார் யாதவ் தான்... மும்பை அணியின் ஒன் டவுன் பேட்ஸ்மேன் தான். இந்தியாவின் டி வில்லியர்ஸ் என்று கண்களை மூடிக் கொண்டு சொல்லிடலாம். தெரியாத ஷாட்ஸ்களே கிடையாது. ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், தற்போது களத்தில் நிற்கிறார்.

ஆனால், லக் ஃபேக்டர் இன்னமும் இவருக்கு கைக் கொடுக்காததால், X-ஃபேக்டராக இருக்க முடியாமல் தடுமாறுகிறார்.

20:44 (IST)03 Apr 2019
யுவராஜ்... யுவராஜ்... போச்சா!!

ரோஹித் அவுட்டான பிறகு, யுவராஜ் சிங் களத்தில் இறங்கினார். தோனி ஸ்டெம்ப் பின்னர் நிற்க, யுவராஜ் பேட் செய்ய, நமக்கு 'தளபதி' ரஜினி, மம்மூகா நியாபகம்-லாம் வந்துட்டு.. ஆனால், என்ன செய்ய, இம்ரான் தாஹிர் ஓவரில், பந்தை சிக்ஸருக்கு பறக்க விட நினைத்த யுவி தூக்கி அடிக்க, டீப்-ல் நின்றுக் கொண்டிருந்த அம்பதி ராயுடு அதை அலேக்காக கேட்ச் செய்ய, யுவி அவுட்...

ஏதோ ரத்தம் பார்த்தவர்-னு சொன்னாங்க.... பொசுக்கு-னு அவுட்டாக்கிட்டாப்ள!!! 

20:39 (IST)03 Apr 2019
ரோஹித் அவுட்

ஜடேஜா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே, மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா, இன்சைட் எட்ஜ் ஆகி, தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

20:27 (IST)03 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்...

கண்ணாயிரம் - அப்புறம் தம்பி... சென்னை நிலைமை என்ன?

ஏதோ போயிட்டுருக்கு...

கண்ணாயிரம் - ஏன் தம்பி அலுத்துக்குற? ரொம்ப அடி வாங்குறாங்களோ?

அண்ணே... தயவு செஞ்சு ஏதும் சொல்லிடாத...

கண்ணாயிரம் - எனக்குன்னு ஒரு கடமை இருக்குதே பா... சரிவிடு... மும்பை இந்த மேட்சுல 170+ அடிப்பது உறுதி. அப்படி ஒருவேளை 190+ போயிட்டாங்க-னா சிஎஸ்கே ஜெயிக்க 99% வாய்ப்பு கிடையாது! 

20:22 (IST)03 Apr 2019
தாக்கூர்... என்னாச்சு?

3வது ஓவரை வீசிய ஷர்துள் தாக்கூர் ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 16 ரன்கள் விளாசப்பட்டது. மும்பை ஆன் தி ஷோ...

(எந்த தியேட்டர்-ல?)

20:16 (IST)03 Apr 2019
டி காக் அவுட்

தீபக் சாஹர் ஓவரில், டி காக் ஸ்கொயர் லெக்-ல் நின்றிருந்த கேதர் ஜாதவ் கைகளில் அழகாக சிக்கியது. 4 ரன்களில் டி காக் அவுட்...

20:11 (IST)03 Apr 2019
சேப்பாக்கா? வான்கடேவா?

போட்டி நடைபெறும் வான்கடே மைதானம் முழுவதும் சிஎஸ்கே ரசிகர்களின் கரகோஷமும், விசில் சத்தமும் அதிர்கிறது. ஒரு நொடி இது சென்னையா? மும்பையா? என்ற சந்தேகம் நமக்குள் எழுந்ததை தவிர்க்க முடிவதில்லை. 

20:01 (IST)03 Apr 2019
களமிறங்கியது மும்பை

களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி... டி காக், ரோஹித் ஷர்மா களத்தில்...

19:49 (IST)03 Apr 2019
வலிமை பெறும் மும்பை அட்டாக்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் ஜேசன் பெஹ்ரென்டோர்ஃப் களமிறங்கி இருப்பது நிச்சயம் அசுர பலமே...

பும்ரா, மலிங்கா, பெஹ்ரென்டோர்ஃப்.... 

சென்னைக்கு கடும் சோதனை காத்திருக்கு!

19:44 (IST)03 Apr 2019
மும்பை பிளேயிங் XI

ரோஹித் ஷர்மா(c), குயிண்டன் டி காக்(w), சூர்யகுமார் யாதவ், யுவ்ராஜ் சிங், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, ராகுல் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா, லசித் மலிங்கா, ஜேசன் பெஹ்ரென்டோர்ஃப்

19:39 (IST)03 Apr 2019
சென்னை பிளேயிங் XI

அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி(w/c), கேதர் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், மொஹித் ஷர்மா, ஷர்துள் தாகூர், இம்ரான் தாஹிர்

19:33 (IST)03 Apr 2019
மும்பை பேட்டிங்

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் ஒரேயொரு மாற்றமாக மிட்சல் சான்ட்னர்-க்கு பதிலாக மொஹித் ஷர்மா களமிறங்குகிறார்.

19:24 (IST)03 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

அண்ணே... நேத்து உங்க கணிப்பை பற்றி ஐநாவுல பேசிக்கிட்டு இருந்தாங்களாம்-னே...

கண்ணாயிரம் - சரி... சரி... அங்க ஓரமா போய் பேசிக்கிட்டு இரு... நா என் வேலையைப் பாக்குறேன்...

இன்றைய மேட்சில் மும்பை ஜெயிக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கு. அதேசமயம், சென்னைக்கும் வாய்ப்பு இருக்கு.. மலிங்கா, என்னைக்குமே சிஎஸ்கே-வுக்கு ஒரு அச்சுறுத்தல் தான். ஸோ, அவர் தான் இன்னைக்கு பும்ராவை காட்டிலும் X-Factor-ஆ இருப்பார். 

19:01 (IST)03 Apr 2019
சென்னை vs மும்பை மோதல் பின்னணி

ஐபிஎல்-ன் தொடக்க காலக் கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கத்துக்குட்டி அணியாகவே வலம் வந்தது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடிப்பதா அல்லது கடைசிக்கு முந்தைய இடத்தை பிடிப்பதா என்பதிலேயே அந்த அணிக்கு மற்ற அணிகளுடன் போட்டி இருந்தது. அதேசமயம், சென்னை முதல் சீசனில் இருந்தே தடுமாறினாலும் பிளே ஆஃப்-க்குள் எப்படியாவது நுழைந்துவிடும். 

2010-ல் எழுச்சி கண்ட மும்பை, இறுதிப் போட்டி வரை முன்னேறியது. நவி மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் உள்ளூர் ரசிகர்கள் முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்க, அங்கு ஆரம்பித்தது இந்த யுத்த வரலாறு. அதன் பிறகு, ஒவ்வொரு தொடரிலும், மும்பையும் சென்னையுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

இரு அணிகளும் தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளதே அதற்கு சாட்சி!

18:35 (IST)03 Apr 2019
பிராவோ காட்டடி நினைவிருக்கா?

சென்னை vs மும்பை மோதல் நமக்கு தெரிந்த ஒன்றே. ஆனால், மும்பையில் விளையாடுவதென்றால் அதில் ஒரு கிக் உண்டு. ஏனெனில், மும்பையை அதன் கோட்டையிலேயே அடிப்பதும், அந்த அணியின் ரசிகர்கள் கண் முன்னே கெத்து காட்டுவதும் அந்த கிக்-கு காரணம். குறிப்பாக, சென்னைக்கு... கடந்த சீசனின் முதல் போட்டி நியாபகம் இருக்கிறதா? தோனி உட்பட, எல்லா அனைத்து பேட்ஸ்மேன்களும் காலியாக, ஒத்த ஆளாக பிராவோ நின்று விளாசியது நினைவிருக்கிறதா? 

இன்னைக்கு என்னென்ன கூத்து நடக்கப் போகுதோ?

18:10 (IST)03 Apr 2019
தல தோனி ரசிகர்களே....

அன்பான வாக்காளர்களே.. உங்கள் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள நமது வேட்பாளருக்கு....ச்சை..ச்சை... சாரிங்கோ.. பொதுக் கூட்டத்தில் பேசுறதா நினைச்சிட்டேன்.... 

ஸோ, இன்னைக்கு ஒரு மெகா மேட்ச் காத்திருக்கு.... சென்னை vs மும்பை... நாமாகவே எதிரி-ன்னு முடிவு பண்ணிக்கிட்ட மும்பையோட இன்னைக்கு மோதப் போறோம்... வழக்கம் போல நான் உங்கள் அன்பரசன் ஞானமணி.... வழக்கம் போல உங்க கணிப்பு கண்ணாயிரத்துடன், மேட்ச் பத்தின அப்டேட்ஸ் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் கமெண்ட்ரிக்கு தயாரா!!?

Web Title:Ipl 2019 csk vs mi live cricket score updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X