IPL 2019 CSK vs RCB: கடைசி ஓவரில் 24 ரன்கள் விளாசியும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

RCB vs CSK 2019 Match: பெங்களூரு வெற்றி

Chennai Super Kings vs Royal Challengers Bangalore: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.21) இரவு எட்டு மணிக்கு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் 1 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்தது.

மேலும் படிக்க – KKR vs SRH Playing 11 Live Score: கொல்கத்தா vs ஹைதராபாத் லைவ்

IE Tamil commentary

Indian Premier League, 2019M.Chinnaswamy Stadium, Bengaluru 18 August 2019

Royal Challengers Bangalore 161/7 (20.0)

vs

Chennai Super Kings 160/8 (20.0)

Match Ended ( Day - Match 39 ) Royal Challengers Bangalore beat Chennai Super Kings by 1 run

Live Blog

CSK vs RCB, IPL 2019 CSK vs RCB

23:52 (IST)21 Apr 2019
பெங்களூர் வெற்றி

கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட, தோனி 24 ரன்கள் விளாசியும், ஒரு ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது. 

23:44 (IST)21 Apr 2019
பிராவோ அவுட்

சைனி ஓவரில் 5 ரன்களில் பிராவோ கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவை. 

23:37 (IST)21 Apr 2019
தோனி 50

ஸ்டெய்ன் ஓவரில் ஒரு லாங் ஆஃப் சிக்ஸ் அடித்த தோனி, 35 பந்துகளில் அரைசதம் அடித்தார்.  

ஆனால், ஜெயிக்க முடியுமா?

23:29 (IST)21 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

இப்போதும் சொல்கிறேன் பெங்களூரு தான் ஜெயிக்க அதிக வாய்ப்புள்ளது. கடைசி ஓவரை எப்படியும் ஸ்டெய்ன் தான் வீசுவார். அந்த ஓவரில் தோனியால் 11 ரன்கள் அடிப்பது கூட கடினம் தான். 

அண்ணே! இப்படிலாம் சொல்றீங்களே.. தோனி ரசிகர்கள் காண்டாக மாட்டாங்களா?

என்ன நினைத்தாலும் அதுதான் உண்மை!.

23:27 (IST)21 Apr 2019
105/5

16 ஓவர்கள் முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு 24 பந்துகளில் 57 ரன்கள் தேவை.

23:20 (IST)21 Apr 2019
40க்கு 40

மக்களவை தொகுதி தேர்தல்-னு நினைச்சுடாதீங்க... சிஎஸ்கே ஜெயிக்க பந்துக்கும், ரன்னுக்கு உள்ள இடைவேளை இது!

40 தொகுதியையும் ஜெயிச்சிடலாம்-ல!!?

23:11 (IST)21 Apr 2019
எவனோ சூனியம் வச்சிட்டான்

லைவ் அப்டேட்ஸ் கொடுக்கவே பயமா இருக்கு... ஏதாவது ஒரு பாஸிட்டிவான விஷயத்தை சொன்னால், உடனே நெகட்டிவாக ஒன்று நடந்து விடுகிறது. 

ராயுடு, சாஹல் ஓவரில் 29 ரன்களில் போல்ட்!

23:08 (IST)21 Apr 2019
பார்ட்னர்ஷிப் 50

தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு தோனி - ராயுடு ஜோடி பார்ட்னர்ஷிப் 41 பந்துகளில் 50 ரன்கள் அடித்துள்ளது. 

22:56 (IST)21 Apr 2019
சிக்ஸ்...

தல தோனி ஸ்டாய்னிஸ் ஓவரில் இறங்கி வந்து எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸ் அடிக்க, ஒரு நொடி ஸ்டேடியம் அதிர்ந்ததை அங்கிருந்தவர்களால் மட்டுமே உணர முடியும். 

ஆனால், போக வேண்டிய தூரம் இன்னும் பல மைல் இருக்கு!

22:53 (IST)21 Apr 2019
57-4

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.

களத்தில் தோனி, ராயுடு...

22:47 (IST)21 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

இப்போதுள்ள நிலைமைக்கு பெங்களூருவுக்கு தான் சாதகம் அதிகம். ஏனெனில், இப்போது 2 விக்கெட் இழந்திருந்தால் கூட, சென்னைக்கு பெரிதாக பிரச்சனை இல்லை. ஆனால்,  நான்கு விக்கெட்டுகளை இழந்துவிட்டார்கள். 

யுவேந்திர சாஹலுக்கு நான்கு ஓவர்கள் இருக்கிறது. அதில் எப்படியும் 1 விக்கெட் வீழ்ந்துவிடும். 

இறுதியில் மீண்டும் ஸ்டெய்ன் அட்டாக் செய்வார்.

ஸோ, சென்னைக்கு தான் ஆபத்து அதிகம்.

22:34 (IST)21 Apr 2019
வெற்றியை நோக்கி ஆர்சிபி

பவர்பிளே முடிவதற்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. Dew Factor வருவதற்குள்ளாகவே சிஎஸ்கே 4 விக்கெட்டுகளை தாரைவார்த்துவிட்டது. அடிக்கவே ஆள் இல்லாமல் எங்குட்டு அடிக்குறது?

களத்தில் தோனி, ராயுடு

22:31 (IST)21 Apr 2019
கெளம்பு.. கெளம்பு.. எல்லாம் கெளம்பு

போகிற போக்கை பார்த்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் 70 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிடும் போலிருக்கு. 

கேதர் ஜாதவ், உமேஷ் யாதவ் ஓவரில் 9 ரன்களில் கேட்ச் ஆனார். 

22:26 (IST)21 Apr 2019
சிஎஸ்கேவின் தொடர் சொதப்பல்!

பெங்களூரு அணி தொடக்கக் கட்டத்தில் மோசமாக விளையாடி தோல்விகளை சந்தித்தது. இரண்டாம் பாதியில் தற்போது வெற்றிகளை ரெஜிஸ்டர் செய்து வருகிறது. 

ஆனால், சிஎஸ்கே இரண்டாம் பாதியில் சொல்லிக் கொள்ளும் படி ஆடவில்லை. தொடர்ச்சியாக தடுமாறுகிறது. ஹைதராபாத்தில் ஒரு மட்டமான தோல்வியை சந்தித்தப் பிறகு பெங்களூருவிடம் இன்று மற்றுமொரு மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.

22:19 (IST)21 Apr 2019
அட என்னாத்த சொல்வேணுங்கோ!

நான்காவது ஓவரை வீசிய உமேஷ் யாதவ்க்கு அடிச்சது யோகம். அந்த ஓவரில், டு பிளசிஸ் பந்தை தவறவிட, ஆஃப் ஸ்டம்ப்பை உரசிக் கொண்டு செல்ல பைல்ஸ் கீழே விழாததால் தப்பித்தார். ஆனால், கடைசி பந்தில் டி வில்லியர்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேற தள்ளாடி நிற்கிறது சிஎஸ்கே.

22:10 (IST)21 Apr 2019
முதல் ஓவரில் 2 விக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதைவிட ஒரு மோசமான துவக்கம் இருக்க முடியாது. ஸ்டெய்ன் வீசிய முதல் ஓவரில் ஷேன் வாட்சன் 5 ரன்னில் கேட்சாக, ரெய்னா முதல் பந்திலேயே ஸ்டெம்ப்புகள் சிதற போல்டானார். 

21:42 (IST)21 Apr 2019
162 ரன்கள் இலக்கு!

பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. 

டார்கெட் போதுமா சென்னைக்கு?

21:41 (IST)21 Apr 2019
மொயின் அலி அவுட்

ஓரளவுக்கு டீசன்ட் கேமியோ கொடுத்த மொயின் அலி, 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து பிராவோ வீசிய கடைசி ஓவரில் கேட்ச் ஆனார்.

21:37 (IST)21 Apr 2019
நெகிழ வைத்து நெகி

தீபக் சாஹர் ஓவரில், பவன் நெகி 5 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அதுசரி... இதுக்கு எதுக்கு இந்த தலைப்பு?

சும்மா ரைமிங்காக... கண்டுக்காதீங்க 

21:25 (IST)21 Apr 2019
கேட்சுக்கு பொறந்தவன் போல...

இம்ரான் தாஹிர் பந்தில் ஸ்டாய்னிஸ் ஸ்ட்ரெய்ட்டில் ஒரு அபார ஷாட் அடிக்க, அதை சிக்ஸ் லைனில் பிடித்த டு பிளசிஸ், பேலன்ஸ் கிடைக்காமல் பந்தை தூக்கி எறிய, துருவ் ஷோரே அதை கேட்சாக்க, ஸ்டாய்னிஸ் 14 ரன்களில் அவுட். 

21:19 (IST)21 Apr 2019
பட்டு அவுட்

'காத்திருந்த தலைவன், பொழுது சாஞ்சவுடன் கதவ சாத்தினானாம்' என்பது போல், 50 அடிக்கும் வரை மிக நிதானமாய் ஆடிய நம்ம பார்த்திவ் படேல், 50 அடித்த அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

பட்டு.. உன்ன பத்தி தெரியும் பட்டு.

21:01 (IST)21 Apr 2019
அக்ஷ்தீப் ... அதாணடா?

ஜத்து பவுலிங்... அதாணடா?

அதே ஷாட்... அதாணடா?

அதே டு பிளசிஸ் கேட்ச்... அதாணடா?

ஜடேஜா ஓவரில் அக்ஷ்தீப் 24 ரன்களில் வெளியேறினார்.

20:56 (IST)21 Apr 2019
95/2

12 ஓவர்கள் முடிவில், பெங்களூரு 2 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. 

180 அடிச்சிருவாய்ங்களோ!!?

20:42 (IST)21 Apr 2019
எனக்கு ஒரு டவுட்டு

இந்த வாஷிங்டன் சுந்தர், வாஷிங்டன் சுந்தர்-னு ஒருத்தர் பெங்களூரு டீமுல இருக்குறாப்ல... அவருக்கு ஏன் இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு தரப்படவில்லை?

குட் கேள்வி... பட், கேப்டன் கோலிக்கே அது வெளிச்சம்.

20:40 (IST)21 Apr 2019
67-2

8 ஓவர்கள் முடிவில், பெங்களூரு 2 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. 

20:29 (IST)21 Apr 2019
கோலி போனா என்ன.. நா இருக்கேன்

விராட் கோலி அவுட்டானாலும், அதன்பின் களமிறங்கிய டி வில்லியர்ஸ் ஆட்டத்தின் சமநிலையை அற்புதமாக கடத்தி வருகிறார்.

6 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 49-1

20:14 (IST)21 Apr 2019
விராட் கோலி காலி

வாவ்... தீபக் சாஹரின் அவுட்சைட் ஆஃப் பந்தில் விராட் கோலி 9 ரன்களில் கீப்பர் கேட்ச் ஆனார். 

சிங்கத்தையே சாச்சுப்புட்டானே... யாருய்யா இவன்?

கண்டிப்பா உள்ளூர்க்காரனா மட்டும் இருக்க மாட்டான்.

20:08 (IST)21 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

கணிப்பு ப்ரோ... இன்று யார் ஜெயிக்கப் போவது?

கண்ணாயிரம் - தோனி, பிராவோ அணிக்கு திரும்பியிருப்பது மிகப்பெரிய பலம் சிஎஸ்கே-வுக்கு. பேலன்ஸ் இப்போது சற்று கிடைக்கிறது. 

ஆனால், 'இனி இழக்க ஒன்றுமில்லை' என்ற மனநிலையில் ஆடும் பெங்களூரு, சென்னைக்கு கடும் ஃபைட் கொடுக்க வாய்ப்புள்ளது. 

சிஎஸ்கே - 57%

ஆர்சிபி - 43%

20:02 (IST)21 Apr 2019
கோலி களத்தில்...

ஆர்சிபி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக பார்த்திவ் படேல், விராட் கோலி களமிறங்கியுள்ளனர். 

இன்றும் கோலி சதம் அடிப்பாரா?

போவியா....

19:54 (IST)21 Apr 2019
பெங்களூரு பிளேயிங் XI

பார்த்திவ் படேல்(w), விராட் கோலி(c), ஏபி டி வில்லியர்ஸ், அக்ஷ்தீப் நாத், மொயின் அலி, மார்கஸ் ஸ்டாய்னிஸ், பவன் நெகி, டேல் ஸ்டெய்ன், நவ்தீப் சைனி, யுவேந்திர சாஹல், உமேஷ் யாதவ்

19:46 (IST)21 Apr 2019
சென்னை பிளேயிங் XI தெரியுமா?

ஷேன் வாட்சன், டு பிளசிஸ், ரெய்னா, ராயுடு, தோனி(w/c), கேதர் ஜாதவ், டுவைன் பிராவோ, ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துள் தாகூர், இம்ரான் தாஹிர்.

19:34 (IST)21 Apr 2019
பிராவோ பேக்....

டாஸ் வென்று சிஎஸ்கே ஃபீல்டிங்

பிராவோ பேக் டூ டீம்

தோனி பேக் டூ டீம்

இந்த மூன்று காரணிகளும் இன்றையப் போட்டியில் சிஎஸ்கே-வின் வெற்றியை உறுதி செய்யுமா?

19:31 (IST)21 Apr 2019
பெங்களூரு பேட்டிங்

தல ஈஸ் பேக்... யெஸ்... கடந்த போட்டியில் ஆடாத கேப்டன் தோனி, இன்றையப் போட்டியில் ஆடுகிறார். டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார்.

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close