Advertisment

IPL 2019, CSK vs RCB Live Streaming: முதல் ஆட்டமே ‘தல’ கோட்டையில்! 'லைவ்’ பார்க்க வேண்டுமா?

Chennai Super Kings vs Royal Challengers Bangalore Live Streaming: சி.எஸ்.கே, ஆர்.சி.பி இடையிலான ஆட்டம் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CSK vs RCB IPL 2019 Live Streaming, Chennai Super Kings vs Royal Challengers Bangalore, சி.எஸ்.கே, ஆர்.சி.பி

CSK vs RCB IPL 2019 Live Streaming, Chennai Super Kings vs Royal Challengers Bangalore, சி.எஸ்.கே, ஆர்.சி.பி

IPL 2019 CSK vs RCB Live Streaming - When, Where to Watch: 12-வது ஐபிஎல் திருவிழா சனிக்கிழமை (மார்ச் 23) தொடங்குகிறது. முதல் ஆட்டமே, ‘தல’ டோனியின் கோட்டையான சென்னையில் நடக்கிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியை, சி.எஸ்.கே எதிர்கொள்கிறது.

Advertisment

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் ‘விசில்’ காலம் ஆரம்பமாகிறது. 12-வது ஐபிஎல் சீஸன் முதல் ஆட்டம் சனிக்கிழமை (மார்ச் 23) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

When and Where to Watch CSK vs RCB Live: சி.எஸ்.கே - ஆர்.சி.பி ஆட்டத்தை எதில் பார்க்கலாம்?

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, சி.எஸ்.கே. அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி ஆகியோர் இடையிலான அனல் போட்டியாகவும் இது பார்க்கப்படுகிறது. கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய 6 ஆட்டங்களில், ஒன்றில்கூட பெங்களூரு வென்றதில்லை. சென்னையில் கடைசியாக 2008-ல்தான் பெங்களூரு அணி வென்றது.

எனினும் பெங்களூரு அணி, அதிரடி பேட்ஸ்மேன்களைக் கொண்டது. எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஹாட் ஸ்டாரிலும் காணலாம்.

சி.எஸ்.கே, ஆர்.சி.பி இடையிலான ஆட்டம் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஆட்டம் தொடர்பான விறுவிறுப்பான அப்டேட்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிலும் ( tamil.indianexpress.com) காணலாம்.

 

Chennai Super Kings Ipl Cricket Rcb
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment