ஹைதராபாத் எளிதான வெற்றி! திருஷ்டி கழித்தது சிஎஸ்கே

SRH vs CSK 2019 Match Live Score Update: சென்னை vs ஹைதராபாத் லைவ்

CSK vs SRH Live Score, IPL 2019 CSK vs SRH Live Score

Chennai Super Kings vs Sun Risers Hyderabad: ஐபிஎல் 2019 தொடரில், ஹைதராபாத்தில் இன்று(ஏப்.17) இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது

IE Tamil commentary

Indian Premier League, 2019Rajiv Gandhi International Stadium, Hyderabad 10 December 2019

Sunrisers Hyderabad 137/4 (16.5)

vs

Chennai Super Kings 132/5 (20.0)

Match Ended ( Day - Match 33 ) Sunrisers Hyderabad beat Chennai Super Kings by 6 wickets

Live Blog

IPL 2019: SRH vs CSK

23:20 (IST)17 Apr 2019
ஹைதராபாத் வெற்றி

16.5 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது ஹைதராபாத் சன் ரைசர்ஸ்.

23:08 (IST)17 Apr 2019
ஜானி 50

ஜானி பேர்ஸ்டோ சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ஒரு 50... எளிதான வெற்றியை நோக்கி ஹைதராபாத். 

23:01 (IST)17 Apr 2019
விஜய் ஷங்கர் அவுட்

இம்ரான் தாஹிர் ஓவரில், விஜய் ஷங்கர் 7 ரன்களில், விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

22:54 (IST)17 Apr 2019
100-2

11 ஓவர்கள் முடிவில், ஹைதராபாத் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. டார்கெட் 133.

அப்புறம் என்ன, கெளம்பு கெளம்பு...

22:48 (IST)17 Apr 2019
'சொல்லுங்க நாக்கிலே வெற்றிப் பூ'

என்ன கருமம் டா இது-ன்னு நினைக்க வேண்டாம். கிரிக்கெட் இடைவேளை-ல வரும் விளம்பரம் ஒண்ணுல இப்படித் தான் சொல்றாய்ங்க.. அதை கொஞ்சம் டிங்கரிங் பண்ணி சொல்லிருக்கோம். 

சிஎஸ்கே ரசிகர்கள் 'சொல்லுங்க நாக்கிலே வெற்றிப் பூ'

22:38 (IST)17 Apr 2019
'வில்லி'யம்சனுக்கு வில்லனான தாஹிர்

இம்ரான் தாஹிர் ஓவரில், கேப்டன் வில்லியம்சன் 3 ரன்களில், அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

22:34 (IST)17 Apr 2019
வார்னர் அவுட்

டேவிட் வார்னர் அவுட்... 24 பந்துகளில் அரைசதம் அடித்த டேவிட் வார்னர், 50 ரன்களில், தீபக் சாஹர் ஓவரில் டு பிளசிஸ்-சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

போனா போதுன்னு அவுட்டாகி போயிருக்கான்... பெருமை பட்டுக்காத!!

22:27 (IST)17 Apr 2019
இந்த டீமை வச்சுக்கிட்டு தல எப்படி ஜெயிச்சாரு?

சன் ரைசர்ஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய ஸ்லோ பந்துகளை வீசி, சென்னை பேட்ஸ்மேன்களை கலங்கடித்தனர். அந்த சென்ஸ் கொஞ்சமாவது சென்னை பவுலர்களுக்கு வேண்டாமா? சும்மா கண்டமேனிக்கு பந்து வீசுனா, அடிச்சு பொளக்கத் தான் செய்வாங்க.  

22:16 (IST)17 Apr 2019
குறைந்தபட்ச டீசன்ட் டார்கெட் கூட இல்லையே!

அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து பேசி வருகிறார்கள். ஆனால், குறைந்தபட்சம் 150வது அடித்தால் தான் ஏதாவது டஃப் கொடுக்க முயற்சி செய்யலாம். 132 ரன்கள் என்பதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

22:06 (IST)17 Apr 2019
ஹைதராபாத் களத்தில்...

ஹைதராபாத் மெகா ஓப்பனர்ஸ் டேவிட் வார்னர், பேர்ஸ்டோ களமிறங்கியுள்ளனர். முதல் ஓவரை வீசுவது தீபக் சாஹர்.

21:58 (IST)17 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

இங்க கணிப்பு சொல்றதுக்கெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி...

ஹைதராபாத் - 85%

சென்னை - 15% தான் வெற்றி வாய்ப்பு

21:55 (IST)17 Apr 2019
133 ரன்கள் இலக்கு

5 விக்கெட் வீழ்ந்த பிறகு, விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்திய அம்பதி ராயுடுவும், ஜடேஜாவும் கடைசி வரை பந்துகளை தடுத்தி நிறுத்தி ஆடினார்களே தவிர, பவுண்டரிக்கு கூட இடம் கொடுக்கவில்லை. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது சிஎஸ்கே.

21:15 (IST)17 Apr 2019
சாம் பில்லிங்ஸ் அவுட்

இந்தக் கொடுமைய என்ன-னு சொல்றது!! சாம் பில்லிங்ஸ் 4 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல், கலீல் அஹ்மது ஓவரில் கேட்ச் ஆனார். 

தம்பி இங்க வா... இப்படி ஓரமா உட்காரு!!

21:13 (IST)17 Apr 2019
சாம் பில்லிங்ஸ் களத்தில்...

தோனி இன்று விளையாட காரணத்தால், சான்ட்னர் உட்கார வைக்கப்பட்டு, விக்கெட் கீப்பிங் பணிகளுக்காக சாம் பில்லிங்ஸ்-க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பேட்டிங்கில் தற்போது தோனி இடத்தில் களமிறங்கி உள்ளார். 

அடிக்குறாரா-னு பார்ப்போம்.

21:10 (IST)17 Apr 2019
கேதர் ஜாதவ் அவுட்

ஜாதவ் தம்பி முதல் பந்திலேயே, வார்னரிடம் ரன் அவுட் ஆகியிருக்க வேண்டியது. தப்பிச்சிடுச்சு.. சேர்த்து வச்சு ரஷித் கான காலி பண்ணிட்டார். 1 ரன்னில் எல்பி ஆகி வெளியேறினார் தோனியின் செல்லப் பிள்ளை கேதர் ஜாதவ்.

21:04 (IST)17 Apr 2019
ரெய்னா அவுட்

கேப்டன் சுரேஷ் ரெய்னா அவுட். ரஷித் கான் ஓவரில், ரெய்னா 13 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார்.

ஊரே, ரஷித் கான் ஓவரில், எப்படி விக்கெட் சேவ் பண்றதுன்னு கத்துக்கிச்சு... நீங்க இன்னமும் அவர் ஓவருல எல்பி ஆகுறீங்க!!

21:01 (IST)17 Apr 2019
குறையும் ரன் ரேட்

வாட்சன், டு பிளசிஸ் அவுட்டான பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரன் ரேட் குறைந்துவிட்டது. 13 ஓவர்கள் முடிவில் சென்னை 97-2.

முதல்ல வச்ச சூனியத்தை எடுங்கப்பா...

20:53 (IST)17 Apr 2019
டு பிளசிஸ் அவுட்!!

நன்றாக ஆடிக் கொண்டிருந்த டு பிளசிஸ், விஜய் ஷங்கரின் ஒரு எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பந்தில், 45 ரன்களில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

எவனோ சூனியம் வச்சிருக்கான்!!!

20:46 (IST)17 Apr 2019
வாட்சன் போல்ட்

ஷேன் வாட்சன், நதீம் வீசிய ஒரு அழகான பந்தில், தனது ஆஃப் ஸ்டெம்ப்பை 31 ரன்களில் பறிகொடுத்தார். 

போயும் போயும், அந்த மொக்கை பந்துலயே அவுட் ஆகணும்!

20:34 (IST)17 Apr 2019
என்ன ஒரு ஆச்சர்யம்!

நம்புங்க.. இது உண்மை... சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் கடந்துவிட்டது. 

அய்யயோ... பார்மில் இல்லாத வாட்சனே இவ்ளோ நேரம் நிக்குறார்-னா, வார்னர் - பேர்ஸ்டோ பார்ட்னர்ஷிப் என்ன அடி அடிக்கப் போகுதோ!!

20:23 (IST)17 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

அண்ணே எப்படி இருக்கீங்க?

கண்ணாயிரம் - நல்லா இருக்கேன் தம்பி. இன்னைக்கு மேட்சுல சிஎஸ்கே ஒரு 180+ அடிச்சா ஜெயிக்கலாம். இல்லைனா கஷ்டம் பா. ஆனா, சென்னை விளையாடுறதைப் பார்த்தா 160 தான் வரும் போல...

20:11 (IST)17 Apr 2019
ஸ்லோ ஸ்டார்ட்... இன்றாவது அடிப்பாரா வாட்சன்?

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் ஓப்பனிங் படு மோசம்... வாட்சன் மினிமம் 1 ஓவர் அல்லது மேக்ஸிமம் 3 ஓவர் வரை மட்டுமே தாக்குப் பிடிக்கிறார். ரெய்னா கேப்டன்ஷிப்பிலாவது அடிக்கிறாரா பார்ப்போம்!.

19:59 (IST)17 Apr 2019
எஸ்ஆர்ஹெச் பிளேயிங் XI

டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ(w), கேன் வில்லியம்சன்(c), விஜய் ஷங்கர், யூஸுப் பதான், தீபக் ஹூடா, ரஷித் கான், ஷாபஸ் நதீம், புவனேஷ் குமார், சந்தீப் ஷர்மா, கலீல் அஹ்மது

19:47 (IST)17 Apr 2019
சிஎஸ்கே பிளேயிங் XI

ஷேன் வாட்சன், டு பிளசிஸ், சுரேஷ் ரெய்னா(c), சாம் பில்லிங்ஸ்(w), அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, கர்ன் ஷர்மா, தீபக் சாஹர், ஷர்துள் தாகூர், இம்ரான் தாஹிர்

19:34 (IST)17 Apr 2019
நோ தோனி... சிஎஸ்கே பேட்டிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ரெய்னா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். தோனி, இன்று ஓய்வு எடுத்துக் கொள்கிறார். இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனையால் தோனி ஓய்வு எடுக்கிறார்.

Web Title:

Ipl 2019 csk vs srh live cricket score updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close