எவ்வளவு முடியுமோ, அவ்வளவு இழுத்து வெற்றிப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!

IPL 2019, Chennai Super Kings vs Delhi Capitals: சிஎஸ்கே வெற்றி

IPL 2019: CSK vs DC

IPL 2019 DC vs CSK: ஐபிஎல் 2019 தொடரில் இன்று(மார்ச்.26) நடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில், சிஎஸ்கே ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

 

Live Blog

IPL 2019: DC vs CSK Live, Delhi Capitals vs Chennai Super Kings Live Score

23:39 (IST)26 Mar 2019
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!

'எங்கயோ போற மாரியாத்தா என் மேல ஏறாத்தா' என்பது போல, இன்று வரை அஷ்வினின் ரன் அவுட் பற்றி சலம்பிக் கொண்டிருந்த நம் மக்களை, எளிதான டார்கெட்டை, கடைசி ஓவர் வரை இட்டுச் சென்று, வெற்றிப் பெற வைத்து தோனி தன்னை பற்றி பேச வைத்திருக்கிறார். எப்படியோ ஜெயிச்சாச்சு!! 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி!

23:33 (IST)26 Mar 2019
ஜாதவ் அவுட்!

வெற்றிக்கு இன்னும் 2 ரன்களே மீதமுள்ள நிலையில், ரபாடா வீசிய 19.1 பந்தில் ஜாதவ் அவுட் 

23:31 (IST)26 Mar 2019
அது ஏன் தோனி?

எப்போதோ முடித்திருக்க வேண்டிய ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டுச் செல்வது ஏனோ தோனி?

23:21 (IST)26 Mar 2019
0,0,0,0,0,1

17வது ஓவரை வீசிய அக்ஷர் படேல், தோனியை வைத்து கன்டெய்ன் செய்த தொனி இது! என்ன தல... 1 ரன் அடிச்சு இருக்கீங்க!!?

23:08 (IST)26 Mar 2019
கணிப்பு கண்ணாயிரம்!

என்னய்யா தூங்கிட்டியா? ரொம்ப நேரமா ஆளைக் காணோம்... அதுசரி... யார் ஜெயிப்பா சொல்லு... ரசிகர்கள் ஆவலோட காத்திருக்காங்க.

வேற யாரு சிஎஸ்கே தான்... 95% சிஎஸ்கே தான் ஜெயிக்கப் போகுது!

23:06 (IST)26 Mar 2019
ஃப்ரீ ஹிட்!

14.5வது பந்தை நோ-பாலாக கீமோ பால் வீச, ஜாதவுக்கு ஃப்ரீ ஹிட் கிடைத்தது. ஆனால், அடித்தது என்னவோ சிங்கிள் தான்

22:57 (IST)26 Mar 2019
108-3

12 ஓவர்கள் முடிவில், சிஎஸ்கே 3 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. தோனி, ஜாதவ் களத்தில்....

22:49 (IST)26 Mar 2019
ரெய்னா அவுட்!

அமித் மிஸ்ரா ஓவரில், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து 30 ரன்களில் ரெய்னா வெளியேறினார். அமித் மிஸ்ரா 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

22:41 (IST)26 Mar 2019
அமித் மிஸ்ரா 50*

ஐபிஎல் போட்டிகளில் டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மட்டும் 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் அமித் மிஸ்ரா. ஒரே பிட்சில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2வது ஐபிஎல் பவுலர் ஆகிறார் அமித். கொஞ்சம் மொக்கையான stats-ஆ இருக்குதோ!!

22:32 (IST)26 Mar 2019
ஷேன் வாட்சன் அவுட்!

அதே அமித் மிஸ்ரா ஓவரில், 44 ரன்களில் ஷேன் வாட்சன் ஸ்டெம்பிங் ஆனார். கொஞ்சம் புகழ்ந்து பேசினா போதும்.. உடனே ரெக்கை கட்டி கிளம்பிடுவாப்ள நம்ம சின்ராசு!!

22:30 (IST)26 Mar 2019
யாரு நம்ம அமித் மிஸ்ராவா அது?

7வது ஓவரை வீசிய அமித் மிஸ்ரா ஓவரில், 2 மெகா சிக்ஸர்களை பறக்கவிட்டார் ஷேன் வாட்சன். அது சரி... மிஸ்ரா தலையில இவ்ளோ முடி எங்கிருந்து வந்துச்சு!! சம்திங் மிஸ்ட்ரி!!

22:21 (IST)26 Mar 2019
Excuse Me...I'm Raina

இஷாந்த் வீசிய 5வது ஓவரில் 4 பவுண்டரிகளை நாலாபக்கமும் சிதறவிட்டார் சின்ன தல ரெய்னா!

22:17 (IST)26 Mar 2019
147, 149, 148, 148.8, 146.8, 146.7

இவையெல்லாம், ரபாடா வாட்சனுக்கு வீசிய பந்துகளின் வேகம்... இதில், 5வது பந்து பவுண்டரி... ஆறாவது பந்து சிக்ஸ்.. யாருக்கிட்ட உன் வேகத்தை காட்டுற தம்பி!! 

22:10 (IST)26 Mar 2019
வரலாறு தெரியுமா அமைச்சரே?

குறைந்த டார்கெட் வைத்து டெல்லியில் வீழ்த்தப்பட்ட அணிகள்,

143 KXIP vs DD, 2018145 DC vs DD, 2010148 KKR vs DD, 2011

22:08 (IST)26 Mar 2019
ராயுடு அவுட்!

ஒரு நல்ல லென்த் பால்... பந்தை லெக் சைட் தூக்கி அடிக்க ராயுடு முயல, பந்து கொஞ்சம் பவுன்ஸ் ஆக, அவரது பேட் எட்ஜில் பட்டு, சர்க்கிளில் நின்றிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் கைகளில் தஞ்சம் அடைய, 5 ரன்களில் ராயுடு அவுட்!.

22:06 (IST)26 Mar 2019
யாராவது தெரிஞ்சா சொல்லுங்கயா!!

இந்த டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா பிட்ச், பேட்டிங் பிட்சா, பவுலிங் பிட்சா-னு யாராவது தெரிஞ்சா சொல்லுங்கயா! ஒர்ர் குழப்பமாக இருக்கு!!

21:57 (IST)26 Mar 2019
யப்பா வாட்சன் இது டெல்லி....

கடந்த ஆட்டத்தில், பெங்களூருக்கு எதிராக 0 ரன்னில் வாட்சன் அவுட்டானார். இந்தப் போட்டியில் நிச்சயம் அவர் அடித்து ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது. யப்பா வாட்சன், புரிஞ்சு நடந்துக்கோ பா... நீ பாட்டுக்கு What son?-னு கேட்டுட்டு வந்துடாத!!

21:54 (IST)26 Mar 2019
வெற்றிப் பெறுமா சிஎஸ்கே?

டெல்லி நிர்ணயித்த 148 ரன்களை சிஎஸ்கே எட்டுமா? களத்தில் சிஎஸ்கே ஓப்பனர்கள் வாட்சன், ராயுடு!

21:48 (IST)26 Mar 2019
டெல்லி தலையெழுத்தை மாற்றிய 16

16வது ஓவர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமான ஒன்று. பிராவோ வீசிய அந்த ஓவரில் தான் அதிரடி கன்னுக்குட்டி ரிஷப் பண்ட் மற்றும் காலிங் இங்ரம் அவுட்டானார்கள். அதில், ஒருவர் கடைசி வரை நின்றிருந்தாலும், 20-30 ரன்கள் அதிகம் வந்திருக்கும்.

21:41 (IST)26 Mar 2019
148 ரன்கள் இலக்கு!

டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்கத்தில் ராக்கெட்டாக சீறிய டெல்லி அணி, பிறகு புஸ்வானமாகிப் போனதை, வரலாறு அடுத்த தலைமுறைக்கும் சொல்லும்!.

21:29 (IST)26 Mar 2019
தவான் அவுட்!

பிராவோ இன்னைக்கு யார் முகத்துல முழிச்சாரோ... டெல்லி பேட்ஸ்மேன்களாம் வான்ட்டடா அவுட் ஆகிட்டு போறாங்க... இப்போது தவான் அவுட். பிராவோவின் ஸ்லோ பந்தில், தூக்கி அடிக்க, தாக்கூருக்கு எளிதான கேட்சாக அமைந்தது. 

21:26 (IST)26 Mar 2019
வான் வருவான், தவான்!!

தவான் 50... 'யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற' என்பது போல அல்லாமல், அரைசதம் அடித்திருக்கும் அண்ணன் தவானுக்கு ஆதரவாக யாராவது பார்ட்னர்ஷிப் கொடுத்தால், டெல்லி பிழைக்கலாம்.

21:25 (IST)26 Mar 2019
ஸ்டெம்ப் எங்கடா!?

கீமோ பால், 4 ரன்களில், ஜடேஜா ஓவரில் தனது ஆஃப் ஸ்டம்ப்பை பறி கொடுக்க, டெல்லி இப்போது 123-5.

21:22 (IST)26 Mar 2019
இங்ரம் அவுட்!

யோவ் கணிப்பு கண்ணாயிரம்.. இப்போ உனக்கு சந்தோஷமா? டெல்லி 182 ரன் அடிக்கும்-னு சொன்ன... நீ அப்படி சொன்னதுக்கு அப்புறம் இத்தோட 3 விக்கெட் விழுந்துடுச்சு... இங்ரம் அவுட்!. பிராவோ ஓவரில் 2 ரன் மட்டும் எடுத்திருந்த இங்ரம், எக்ஸ்ட்ரா கவரில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரெய்னா-வோ பிராக்டீஸ் கேட்ச் மாதிரி பந்தை பிடிக்குறாப்ல... 

21:18 (IST)26 Mar 2019
ரிஷப் அவுட்!

பிராவோ வீசிய லென்த் பந்தில், ஒரு கில்லர் ஷார்ட்டை டீப் ஸ்கொயர் லெக் நோக்கி ரிஷப் பறக்க விட்டார். சிக்ஸ் லைனில் வந்த டஃப்பான கேட்ச் வாய்ப்பை, எளிதான கேட்ச் போன்று தோற்றமளிக்கும் வகையில், ஸ்மார்ட்டாக தாக்கூர் பிடிக்க, 25 ரன்களில் வெளியேறினார் ரிஷப்.

21:13 (IST)26 Mar 2019
சிக்ஸ்!

15வது ஓவரை வீசிய ஹர்பஜனின் கடைசி பந்தில் ஒரு ராக்கெட் சிக்ஸ் விளாசினார் பண்ட். லாங் ஆஃப்-ல் காற்றை கிழித்துக் கொண்டு அந்த பந்து பறந்ததை பார்க்க, மேலும் இரண்டு கண்கள் இருந்தால் தேவல....

21:09 (IST)26 Mar 2019
பிராவோ ஓவரில் சாத்து...

பிராவோ வீசிய முதல் ஓவரில், 17 ரன்கள் விளாசப்பட்டது. தவான் 2 பவுண்டரி, ரிஷப் பண்ட் 1 பவுண்டரி. பிராவோ, நீங்க ஆல்ரவுண்டர் என்பதையே மறந்துடுறீங்க...

21:05 (IST)26 Mar 2019
கணிப்பு கண்ணாயிரம்

யோவ் கணிப்பு.... டெல்லி எவ்ளோ ஸ்கோர் அடிக்கும்-னு சொல்லுயா பார்ப்போம். 

ம்ம்ம்ம்.... 182?

20:56 (IST)26 Mar 2019
ஷ்ரேயாஸ் அவுட்!

இம்ரான் தாஹிர் ஓவரில், ஷ்ரேயாஸ் ஐயர் எல்பிடபிள்யூ ஆனார். பந்தை சரியாக கணிக்கத் தவறியதால் 18 ரன்களில் அவுட்டானார்... நம்ம கணிப்பு கண்ணாயிரம் வம்சமா இருப்பார் போல....

20:52 (IST)26 Mar 2019
தவான் சாப்பிட மறந்துட்டாரோ?

ஷிகர் தவான், இதுவரை 30 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து ஆடி வருகிறார். சாப்பாட்டை சாப்பிட மறந்ததால், இங்கே பந்தை சாப்பிட்டு கொண்டிருக்கிறாரோ!?

20:50 (IST)26 Mar 2019
65-1

10 ஓவர்கள் முடிவில், டெல்லி அணி 1 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. முதல் 3 ஓவரில் இருந்த ரன் ரேட்டிற்கு எங்கேயோ சென்றிருக்க வேண்டிய ஸ்கோரை, சிஎஸ்கே பவுலர்கள் வெகுவாக குறைத்துள்ளனர்.

20:36 (IST)26 Mar 2019
பேட்டிங் பிட்சா? பவுலிங் பிட்சா?

ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம் பேட்டிங் பிட்சா, பவுலிங் பிட்சா என்பது ரொம்ப கன்ஃபியூஸா இருக்கு.... பந்து டர்னும் ஆகுது, பேட்டுக்கும் நேரா வருது.... 

20:33 (IST)26 Mar 2019
அவசரப்படாதே சகோதரா!!

மும்பைக்கு எதிரான முதல் போட்டியிலும் அவசரப்பட்டு அவுட்டான ப்ரித்வி ஷா, இன்றும் அதே போன்று தேவையில்லாமல் அவுட்டானார். புல் ஷாட் அடிக்க நினைத்து, மிட்-விக்கேட்டிலேயே கேட்ச் ஆனார். கொஞ்சம் நிதானித்து இருக்கலாமே ப்ரித்வி!

20:28 (IST)26 Mar 2019
ப்ரித்வி அவுட்!

சாஹர் ஓவரில், ப்ரித்வி ஷா 24 ரன்னில், வாட்சன் ஓவரில் கேட்ச் ஆனார்.

20:21 (IST)26 Mar 2019
ஆரம்பமே அதிரடி!

எதிர்பார்த்தது போலவே, டெல்லி கேபிடல்ஸ் அணி அதிரடியான இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. சிஎஸ்கே-வின் வேகப்பந்து வீச்சின் வலிமை இதில் தெரிந்துவிடும்.

20:14 (IST)26 Mar 2019
கணிப்பு கண்ணாயிரம்

ஆஹா.... கணிப்பு கண்ணாயிரம் வந்தாச்சு!! நேத்து, ராஜஸ்தான் ஜெயிச்சிடும்-னு சொல்லி சொல்லியே, சோலிய முடிச்ச நம்ம கணிப்பு கண்ணாயிரத்துக்கு ஐஇ தமிழ் சார்பில் வணக்கங்கள்... இன்னைக்கு ஐயா யார் சோலிய முடிக்கப் போறீங்க?

20:11 (IST)26 Mar 2019
ஹாட்ரிக் பவுண்டரி!

ப்ரித்வி பற்றி நாம சொல்லி முடிக்கல.... ஷர்துள் தாக்குரின் இரண்டாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை பறக்க விட்டிருக்கிறார் ப்ரித்வி.... கமான் பாய்...

20:10 (IST)26 Mar 2019
ப்ரித்வி மீது கண்ணு வைங்கப்பா!!

டெல்லி ஓப்பனர் ப்ரித்வி ஷா, மிக டேஞ்சரான ஒரு வீரர் என்பது பலருக்கும் தெரியாது. குறிப்பாக, டி20ல் அவரது பேட் மிக வேகமாக சுழலும். இன்றையப் போட்டியில் நிலைத்து மட்டும் நின்றுவிட்டால், ரன் வேட்டையை தடுக்க முடியாது. பிஹைன்ட் தி ஸ்டெம்ப்ஸ், தோனி ஏதும் ஐடியா கொடுத்தால் தான் உண்டு.

20:07 (IST)26 Mar 2019
சிஎஸ்கே-வுக்கு எதிரான டிராக் ரெக்கார்ட்

2018ல் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகள்

வெற்றி - 5தோல்வி - 2

இன்றைய போட்டியில், சிஎஸ்கே சேஸிங் செய்து இந்த ரெக்கார்டை உடைக்குமா?

20:03 (IST)26 Mar 2019
ஆட்டம் தொடங்கியது

தீபக் சாஹரின் முதல் ஓவருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது பவுலிங்கை தொடங்கியது

19:49 (IST)26 Mar 2019
டெல்லி கேபிடல்ஸ் பிளேயிங் XI

ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர்(c), காலின் இங்ரம், ரிஷப் பண்ட்(w), கீமோ பால், அக்ஷர் படேல், ராகுல் டெவாடியா, அமித் மிஸ்ரா, காகிசோ ரபாடா, இஷாந்த் ஷர்மா

19:46 (IST)26 Mar 2019
சிஎஸ்கே பிளேயிங் XI

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (C&WK), கேதர் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துள் தாக்கூர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.

19:39 (IST)26 Mar 2019
டெல்லி பேட்டிங்

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஆரம்பமே ரணகளமா இருக்கப் போகுது!!!

19:21 (IST)26 Mar 2019
ஷேன் வாட்சன் கை கொடுப்பாரா?

சி.எஸ்.கே. அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் இன்று தனது பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியம். டெல்லி போன்ற அதிரடி வீரர்கள் அடங்கிய அணிக்கு எதிராக கணிசமாக ரன்களை திரட்ட அது உதவும். எனவே ஷேன் வாட்சன் மீது சி.எஸ்.கே. ரசிகர்களின் பார்வை படிந்திருக்கிறது.

18:55 (IST)26 Mar 2019
மிரட்டுவாரா ரிஷாப் பாண்ட்?

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வீரர் ரிஷாப் பாண்டின் ஆட்டம்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இன்றைய ஆட்டத்தில் ரிஷாப் பாண்டுக்கு செக் வைப்பது, சி.எஸ்.கே வீரர்களின் முக்கியப் பணியாக இருக்கும். என்ன செய்யப் போகிறது சி.எஸ்.கே.?

18:03 (IST)26 Mar 2019
வெல்கம் சிஎஸ்கே ப்ரோஸ்!!!

ஹாய், ஹலோ சிஎஸ்கே ப்ரோஸ்.... இன்னைக்கு நைட்டு செம மேட்ச் நமக்காக வெய்ட்டிங்! தல தோனி தலைமையிலான சிஎஸ்கே vs ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பயமறியா டிசி அணியும் மோதுகின்றன... நொடிக்கு நொடி லைவ் அப்டேட்ஸ் மற்றும் லைவ் ஸ்கோர் கார்டை உங்களுக்காக பிரத்யேகமாக ஐஇ தமிழ் வழங்குகிறது. 

தோனி தலைமையிலான அனுபவம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளமையான அதிரடி வீரர்களைக் கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறை.

Web Title:

Ipl 2019 dc vs csk live cricket score updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close