Advertisment

சாரி விராட் கோலி! பெங்களூருவில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி!

IPL DC vs RCB: டெல்லி வெற்றி

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
DC beat RCB

DC beat RCB

IPL 2019 DC vs RCB: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.7) மாலை 4 மணிக்கு நடைபெற்ற பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

Advertisment

மேலும் படிக்க - ராஜஸ்தான் vs கொல்கத்தா லைவ் அப்டேட்ஸ் காண இங்கே க்ளிக் செய்யவும்

 

Live Blog

IPL 2019: DC vs RCB



























Highlights

    19:29 (IST)07 Apr 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    விராட்... தைரியமாக உங்களுக்கு ஒரு அட்வைஸ் சொல்றேன்... நீங்க இந்த சீசனில் அடுத்து வரும் போட்டிகளில், இன்று போராடியது போன்றே போராடுங்க... நேரம் உங்க பக்கம் இருந்தால், மீதமுள்ள போட்டிகள் சிலவற்றில் வெற்றியை காணலாம். இந்த சீசனில் நீங்கள் உட்பட உங்கள் அணி மொத்தமாக 15 கேட்சுகளை விட்டுருக்கிறீர்கள். வேறு ஏதாவது கேம் பிளான் முயற்சி செய்து பாருங்கள்.. ஆல் தி பெஸ்ட்...

    19:21 (IST)07 Apr 2019

    டெல்லி வெற்றி

    18.5வது ஓவரில், டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இந்த சீசனில், பெங்களூருவின் தொடர்ச்சியான 6வது தோல்வி இது.

    19:18 (IST)07 Apr 2019

    5 நிமிடத்தில் 3 விக்கெட்...

    டெல்லியின் 4, 5, 6 வது விக்கெட் கடைசி 5 நிமிடத்தில் வீழ்த்தப்பட்டுள்ளது. 

    19:16 (IST)07 Apr 2019

    பண்ட் அவுட்...

    இதுவும் காலம் கழிந்த முயற்சியே... ரிஷப் பண்ட் 18 ரன்களில் சிராஜ் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    19:16 (IST)07 Apr 2019

    மோரிஸ் அவுட்...

    காலம் போன காலத்தில் பெங்களூரு பவுலர்கள் விக்கெட்டுகள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சைனி ஓவரில், 0 ரன்னில் மோரிஸ் அவுட்டானார்.

    19:12 (IST)07 Apr 2019

    ஐயர் அவுட்...

    67 ரன்கள் எடுத்து, ஏற்கனவே பெங்களூரின் தோல்வியை உறுதி செய்துவிட்ட டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், சைனி ஓவரில், கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    19:05 (IST)07 Apr 2019

    மீண்டுமொரு தோல்வியா கோலி?

    விராட் கோலியின் பெங்களூரு அணி, மற்றுமொரு தோல்விக்கு தயாராகி வருகிறது. அவர்களது நிலையைப் பார்த்தால், நமக்கே பரிதாபமாக தான் உள்ளது. 

    18:58 (IST)07 Apr 2019

    நைட்டு 8 மணிக்கு என்ன மேட்சு தெரியுமா?

    காட்டடி ரசலின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று இரவுப் போட்டியில் மோதுகின்றன. அந்த போட்டியின் பிரத்யேக லைவ்வும் நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உங்களுக்காக...

    18:56 (IST)07 Apr 2019

    ஷ்ரேயாஸ் 50

    இன்றைய போட்டியில் அதிகம் பேக் ஃபூட் ஷாட்கள் அடித்து, அரைசதம் கடந்த அண்ணன் ஷ்ரேயாஸ் ஐயரை, டெல்லி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம். 

    18:51 (IST)07 Apr 2019

    இங்ரம் அவுட்

    இந்த சீசன்-லையே காலின் இங்ரம் உருப்படியா ஆடியது இந்த மேட்சா தான் இருக்க முடியும். 21 பந்துகளில் 22 ரன்கள் அடித்த இங்ரம், மொயீன் அலி ஓவரில் எல்பி ஆனார். 

    18:44 (IST)07 Apr 2019

    எங்கடா பண்ட்டு?

    வழக்கமாக, 2 டவுன் பேட்ஸ்மேனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்க்கு பதில், காலின் இங்ரம் களமிறக்கப்பட்டுள்ளார். மும்பையுடனான முதல் போட்டி சாத்துக்கு பிறகு, ரிஷப் பண்ட் பருப்பு வேகாததால், அவரது டவுன் கீழ் இறக்கப்பட்டுள்ளது.

    18:41 (IST)07 Apr 2019

    81/2

    10 ஓவர்கள் முடிவில், டெல்லி 2 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது

    18:36 (IST)07 Apr 2019

    ப்ரித்வி அவுட்...

    இந்த பவன் நெகி, பெங்களூரு அணிக்காக ரொம்பவே உழைத்து வருகிறார் போல... கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த போட்டியில், பவுலிங், ஃபீல்டிங் என அசத்தியவர், இதோ இன்று ப்ரித்வி ஷா விக்கெட்டை காலி செய்துள்ளார். 

    28 ரன்களில் ப்ரித்வி அவுட்...

    18:26 (IST)07 Apr 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    கண்ணாயிரம் - ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர் காம்போ நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு 30 ரன்களுக்கு இதே பார்ட்னர்ஷிப் நின்றுவிட்டால், டெல்லி வெற்றி 90 சதவிகிதம் உறுதி.

    இப்போதுள்ள நிலவரப்படி, வெற்றி வாய்ப்பு

    பெங்களூரு - 39 %

    டெல்லி - 61%

    18:16 (IST)07 Apr 2019

    பிரிவ்யூ ஷோ காட்டும் ப்ரித்வி ஷா

    சவுதி ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை பறக்கவிட்ட ப்ரித்வி ஷா, சைனியின் 150+ கி.மீ. வேக பந்தை வந்த வேகத்திலேயே திருப்பி பவுண்டரிக்கு அனுப்பி அட்டகாசம் செய்துக் கொண்டிருக்கிறார்.

    18:09 (IST)07 Apr 2019

    4,4,4,4,4b,0

    மரண அடி-ல... டிம் சவுதி ஓவரை, சச்சினின் செல்லப் பிள்ளை ப்ரித்வி ஷா விளாசிய ரன்கள் இவை...

    18:04 (IST)07 Apr 2019

    சைனி...சைனி...

    ஏதோ பாக்கு விளம்பரம்-னு நினைச்சுடாதீங்க... பெங்களூர் பவுலர் நவ்தீப் சைனியை தான் சொல்கிறோம்... மனுஷன் 150+ கி.மீ வேகத்துல அசால்ட்டா போடுறாப்ல...

    17:57 (IST)07 Apr 2019

    வீறுநடை தவான்

    ஏதோ... சிக்ஸ், பவுண்டரி விளாசி வீறுநடை போடுறாரு-னு நினைச்சிடாதீங்க... சவுதி ஓவரில், 0 ரன்களில் ஷிகர் தவான் கேட்ச் கொடுத்து, பெவிலியனை நோக்கி வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறார். 

    17:48 (IST)07 Apr 2019

    150 ரன்கள் இலக்கு...

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. 

    17:26 (IST)07 Apr 2019

    கோலி அவுட்...

    ரபாடா-வின் 18வது ஓவரில் விராட் கோலி 41 ரன்களில் கேட்ச் ஆக, கடைசி பேட்ஸ்மேனான அக்ஷ்தீப் நாத் 19 ரன்களில் கீப்பர் கேட்ச் ஆக, எதிர்பார்த்த ஸ்கோர் பெங்களூருவுக்கு கிடைக்குமா? 

    17:20 (IST)07 Apr 2019

    வாப்பா.. நீயாவது 'காட்டு' காட்டு...

    மொயீன் அலி விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய அக்ஷ்தீப் நாத், ஓரளவுக்கு நம்பிக்கை தரும் விதமாக களமாடி வருகிறார். 

    160 அடிச்சிடலாம் போலயே..!

    17:11 (IST)07 Apr 2019

    மொயீன் அலி அவுட்

    பெங்களூருவுக்கு சரி... கோலிக்கும் சரி பெரும் ஆறுதலாக இருந்து ரசிகர்களையும் பேட்டால் குஷிப்படுத்திய மெயின் அலி... சாரி மொயீன் அலி 18 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து லமிச்சனே பந்தில், 'பப்பி' ஸ்டெம்பிங் ஆனார்.

    17:02 (IST)07 Apr 2019

    'மெயின்' அலி

    தற்போது களத்தில் நிற்பது கோலி, மொயீன் அலி. பெங்களூரு அணியில் மீதம் இருக்கும் ஹிட்டர்கள் இவர்கள் இருவர் மட்டுமே. ஸோ, முடிந்தவரை, அதிரடியை குறைத்து, விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டு, 150-160 அடிப்பது தான் புத்திசாலித்தனம். நம்ம தல தோனியின் ஃபார்முலா தான் பாஸ் அது.

    எனவே விராட் கோலிக்கு பக்கபலமாக நின்று சீரிய பங்காற்ற வேண்டிய கடமை மொயீன் அலிக்கு தான் உள்ளது,

    16:54 (IST)07 Apr 2019

    ஸ்டாய்னிஸ் அவுட்

    நாம சொல்றதுனால விக்கெட் விழுதா, இல்ல விக்கெட் விழுறதால நாம பேசுறோமா? ஐயோ..ஒரே குழப்பமா இருக்கே... 

    அக்ஷர் படேல் ஓவரில், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 15 ரன்களில் அவுட். 

    சத்தியமா உனக்கு புண்ணியம் கிடையாது... போப்பா... 

    16:48 (IST)07 Apr 2019

    உனக்கு புண்ணியமா போகும் ராசா!

    லமிச்சனே ஓவரில், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் ஒரு பிரம்மாண்ட சிக்ஸ் அடிக்க, அதை விராட் கோலி, பல நாள் காதலியை, பல வருடங்கள் கழித்து பார்ப்பது போல் ரசிக்க... டி வில்லியர்ஸ் இடத்தை நிரப்பினால், ஆர்சிபி ஃபேன்ஸ் மனதில் ஸ்டாய்னிஸ் ஹீரோவாவது உறுதி!.

    16:41 (IST)07 Apr 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    நாம் - அண்ணே... நீஙக சொன்னது போலவே பெங்களூரு மோசமாக ஆடிக்கிட்டு இருக்கு. 

    கண்ணாயிரம் - நா, அவங்க மட்டும் மோசமா ஆடுவாங்கன்னு சொல்லல. ரெண்டு டீமுல யார் படு மோசமான விளையாடுறாங்களோ அவங்க தோற்பாங்க-னு சொன்னேன்...

    நாம் - சரி, இப்போ சொல்லுங்க... ஆர்சிபி எவ்ளோ அடிக்கும்?

    கண்ணாயிரம் - கடும் வெப்பம் வீரர்களை தொடக்கத்தில் இருந்தே டென்ஷன் மனநிலையில் வைத்துள்ளது. அதை ஆர்சிபி இதுவரை பக்குவமாக அணுகுவது போல் தெரியவில்லை. தவிர, கோலி-யின் கேம் பிளான் என்னவென்று புரியவில்லை. 14 பந்துகளில் 14 ரன்களே அடித்திருக்கிறார். டி வில்லியர்ஸ் அவுட்... மொயீன் அலி, ஸ்டாய்னிஸ் என்ற இரு ஹிட்டர்ஸ் மட்டுமே பாக்கி...

    கூட்டி கழிச்சுப் பார்த்தா, 160 அடித்தால், அது பெங்களூரு அணியின் KGF வெற்றியைப் போன்றது!.

    16:33 (IST)07 Apr 2019

    டி வில்லியர்ஸ் அவுட்...

    இப்போ தான் நாம் சொன்னோம், டி வில்லியர்ஸ் தடுமாற்றத்தைப் பற்றி... அதற்குள் அவுட்... ரபாடா வந்துவீச்சில், 'இப்படிக் கூட அவருக்கு அவுட் ஆகத் தெரியுமா!' என்று டி  வில்லியர்ஸ் அவுட். 17 ரன்களில்...

    16:24 (IST)07 Apr 2019

    இந்த ரகசியம் தெரியுமா?

    இப்போ இருக்குற க்ரிஸ் கெயிலும் பழைய பாட்ஷா இல்ல... இப்போ இருக்குற டி  வில்லியர்சும் பழைய காளி இல்ல... 2018 சீசனிலேயே கெயில் அடியில் ஒரு பயமும், பதட்டமும் தெரிந்தது. இந்த சீசனில், பயமும் இல்லை, அடியும் இல்லை... 

    அதேபோல், தொடர் தொல்விகளாலோ என்னவோ, டி வில்லியர்ஸ் பேட்டிங்கில் திணறுவதை இந்த சீசனில் அப்பட்டமாக பார்க்க முடிகிறது. அதுவும், ஸ்பின்னர்களிடம் அவர் படும் பாடு... சாரி ஏபிடி... 

    அடுத்த சீசனில் என்ன-லாம் நடக்கப் போகுதோ!

    16:14 (IST)07 Apr 2019

    ஏபி டி கோலி களத்தில்...

    களத்தில் இப்போது ஆர்சிபி-யின் பிரம்மாண்ட ஜோடி... கோலி, டி  வில்லியர்ஸ்... 

    ரெண்டு பேரை மட்டுமே நம்பி ஒரு டீம் இருக்குன்னா அது நம்ம ராயல் சாலஞ்சர்ஸ் தான்.

    16:13 (IST)07 Apr 2019

    யோவ்.. இது நியாயமா?

    இப்போது தான் பார்த்திவ் படேல் பற்றி நாம் பெருமையாக பேசிக் கொண்டிருந்தோம். ஆனால், அதற்குள் க்ரிஸ் மோரிஸ் ஓவரில் தேர்ட் மேன் திசையில் கேட்ச். 9 ரன்களில் அவுட்...

    16:05 (IST)07 Apr 2019

    பார்த்திவ் பட்-டேல்

    இந்த சீசன் மட்டுமல்ல... என்ன ஐபிஎல் சீசனாக இருந்தாலும், ஒவ்வொரு டீமும் இவரை ஏலத்தில் எடுத்துக் கொண்டிருக்குமே தவிர, யாரும் இவரை ஒதுக்கி விட மாட்டார்கள். தொடக்க வீரராக களமிறங்கி பட்-டு பட்-னு அடிப்பாப்ள... பந்து பயங்கரமான போகும்.. நேராக ஃபீல்டர்கள் கையில்... ஆக்ரோஷமா அடிப்பது போன்றே இருக்கும். ஆனால், ஸ்கோர் அப்படியே தான் இருக்கும்... அப்படிப்பட்ட ஒரு மாய வித்தைக்காரர் நம்ம பார்த்திவ் படேல்...

    பின்ன... சும்மாவா... 2003 உலகக் கோப்பை தொடருல, ஒரு மேட்ச் கூட விளையாடாம, உட்கார்ந்தே கோடிகள்-ல சம்பளம் வாங்குனவர் ஆச்சே!! கெத்து சார் நீங்க!!

    15:58 (IST)07 Apr 2019

    கணிப்பு கண்ணாயிரம்...

    கண்ணாயிரம் - இரண்டு அணிகளுமே, தங்கள் பலம் என்ன என்பதை உண்மையில் முழுமையாக இதுவரை கண்டறியவில்லை. ஸோ, இன்று வெற்றிப் பெறும் அணி எது என்பதை கண்டறிய பெரும் யோசனை எல்லாம் தேவையில்லை. நிச்சயம், இரு அணியுமே சுமாராகத் தான் ஆடும். அதில், மிகவும் சுமாராக ஆடும் அணி இன்று தோற்கும்...

    நாம் - இந்தாளு இப்போ என்ன சொல்ல வர்றான்???

    15:46 (IST)07 Apr 2019

    டெல்லி பிளேயிங் XI

    ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர்(c), ரிஷப் பண்ட்(w), ராகுல் டெவாடியா, கோலின் இங்ரம், க்ரிஸ் மோரிஸ், அக்ஷர் <படேல், காகிசோ ரபாடா, இஷாந்த் ஷர்மா, சந்தீப் லமிச்சனே

    15:43 (IST)07 Apr 2019

    பெங்களூரு பிளேயிங் XI

    பார்த்திவ் படேல்(w), விராட் கோலி(c), ஏபி டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மொயீன் அலி, அக்ஷ்தீப் நாத், பவன் நெகி, டிம் சவுதி, நவ்தீப் சைனி, யுவேந்திர சாஹல், முகமது சிராஜ்

    15:34 (IST)07 Apr 2019

    பெங்களூரு பேட்டிங்

    வணக்கம் அன்பார்ந்த என் தமிழ் சொந்தங்களே.... ஐபிஎல் 2019 தொடரில், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் மூலம், உங்களை சந்திப்பது நான் அன்பரசன் ஞானமணி... யாரைத் தேடுறீங்க? இருக்காரு..இருக்காரு... கணிப்பு கண்ணாயிரம் இங்க தான் இருக்காரு.... இருவரும் சார்பிலும் கோடான கோடி நன்றிகள்...

    டாஸ் வென்ற டெல்லி கேபிடல் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

    Ipl
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment