Advertisment

ஒரு ரன்னில் கோப்பையை நழுவவிட்ட சி.எஸ்.கே. ! விறுவிறுப்பான இறுதிப்போட்டி ஹைலைட்ஸ்

IPL 2019 Final, MI vs CSK: மும்பை வெற்றி

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
CSK vs MI 2019, IPL 2019 Final

CSK vs MI 2019, IPL 2019 Final

IPL 2019 Final, Mumbai Indians vs Chennai Super Kings: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(மே.12) இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Advertisment

மேலும் படிக்க - மும்பை vs சென்னை, இறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பு இந்த அணிக்கு தான்

இதில், மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்று நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

Live Blog

IPL 2019: CSK vs MI, CSK vs MI



























Highlights

    23:42 (IST)12 May 2019

    நான்காவது ஐபிஎல் கோப்பை

    மும்பை இந்தியன்ஸ் நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று புது ரெக்கார்ட் படைத்துள்ளது. இதற்கு முன், மும்பை, சென்னை தலா 3 முறை கோப்பை வென்றிருந்த நிலையில், நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது மும்பை இந்தியன்ஸ்.

    23:33 (IST)12 May 2019

    மும்பை வெற்றி

    கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மலிங்காவின் அபாரமான யார்க்கரில் ஷர்துள் தாகூர் எல்பி டபிள்யூ ஆக மும்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

    23:28 (IST)12 May 2019

    வாட்சன் அவுட்

    கடைசிக் கட்டத்தில் தேவையில்லாத ரன் அவுட்டால், ஷேன் வாட்சன் 80 ரன்களில் வெளியேறினார். 

    23:23 (IST)12 May 2019

    வெல்லப் போவது யார்?

    கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவை 9 ரன்கள்... வெல்லப் போவது யார்?

    23:18 (IST)12 May 2019

    பிராவோ அவுட்

    பும்ராவின் ஷார்ட் பிட்ச் பந்தில், பிராவோ 15 ரன்களில் கீப்பர் கேட்சாக, மீண்டும் மும்பை பக்கம் வெற்றிக் காற்று!!

    23:16 (IST)12 May 2019

    ஹாட்ரிக் சிக்ஸ்...

    18வது ஓவரை வீசிய க்ருனல் பாண்ட்யா ஓவரில் ஷேன் வாட்சன் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடிக்க, வெற்றி மீண்டும் சென்னையின் பக்கம் திரும்புவது போல் தெரிகிறது. 

    18வது ஓவர் முடிவில், சென்னை 132/4

    23:09 (IST)12 May 2019

    112-4

    17ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 112-4.

    களத்தில் வாட்சன், பிராவோ... 

    எனக்கு என்னமோ, சந்தேகமாவே இருக்கு. இன்னும் 10 பிரஷர் மாத்திரை போடணும் போல..

    23:06 (IST)12 May 2019

    வாட்சன் கேட்சை விட்ட மும்பை...

    பும்ரா வீசிய 16.1வது ஓவரில், வாட்சன் லெக் சைடில் தூக்கி அடிக்க, கிடைத்த மிக மிக எளிதான கேட்சை ராகுல் சாஹர் தவறவிட்டார். ஆனால், மும்பை கோச் உட்பட யாரும் அதற்கு கோபப்படவில்லை. மாறாக, சிரித்தே விட்டனர்.

    23:02 (IST)12 May 2019

    வாட்சன் 50

    தோனி உட்பட சக வீரர்கள் வரிசையாக நடை போட்டுக் கொண்டிருக்க, ஷேன் வாட்சன் தனி ஆளாக போராடி வருகிறார். மலிங்கா வீசிய 16வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசிய வாட்சன், மற்றுமொரு அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

    22:56 (IST)12 May 2019

    காற்று இடைவெளி அதிகரிக்கிறதே...

    15 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. 

    தற்போது பந்துக்கும் டார்கெட்டுக்கும் 30+ ரன்கள் வித்தியாசம் உள்ளது. 

    ம்ஹூம்,, இனி ஆண்டவன் தான் காப்பாத்தணும்!

    22:52 (IST)12 May 2019

    கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த மும்பை

    தோனியின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, ஆட்டத்தை தங்கள் முழு கட்டுப்பாட்டிற்குள் மும்பை இந்தியன்ஸ் அணி கொண்டு வந்துள்ளது. இப்போதுள்ள நிலவரப்படி மும்பைக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். 

    கார்ப்பரேட் அணி வெற்றிப் பெறுமா?

    22:43 (IST)12 May 2019

    தோனி..... போச்சே

    சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி அவுட்.... 

    அவர் 2 ரன்களில் ஒரு குழப்பான ரன் அவுட்டில், தேர்ட் அம்பயர் அவுட் கொடுக்க வெளியேறினார்.

    22:41 (IST)12 May 2019

    நெருக்கடி கொடுக்கும் மும்பை

    சென்னையின் மூன்று முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு, ஆட்டம் 70 சதவிகிதம் மும்பை இந்தியன்ஸ் கைகளுக்கு சென்றுவிட்டது. 

    22:29 (IST)12 May 2019

    ராயுடு அவுட்

    இதென்னா சிஎஸ்கே-வுக்கு வந்த சோதனை!!!

    அம்பதி ராயுடு ஒரேயொரு ரன்னில் பும்ராவின் மெகா பவுன்சரில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேற, சென்னை சூப்பர் கிங்ஸ் தனது மூன்றாவது விக்கெட்டை இழந்தது.

    22:22 (IST)12 May 2019

    ரெய்னா அவுட்

    தொடக்கத்தில் இருந்தே தடுமாறி வந்த சுரேஷ் ரெய்னா, ஏற்கனவே ஒரு விக்கெட் கண்டத்தில் இருந்து தப்பித்தார். ஆனால், இப்போது ராகுல் சாஹர் ஓவரில் 8 ரன்களில் எல்பிடபிள்யூ ஆக, மேட்ச் மீண்டும் மும்பை கைகளுக்கு செல்வது போல் தெரிகிறது.

    22:17 (IST)12 May 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    கண்ணாயிரம் - இப்போதுள்ள நிலைமையை பார்க்கும் மஞ்சள் எக்ஸ்பிரஸ் வெற்றிப் பெறும் என்பது போலவே உள்ளது. ஆனால், இன்னும் சாலிடாக 90 ரன்கள் தேவை.. ஸோ, திருப்பங்கள் நிகழக் கூட வாய்ப்புள்ளது.

    இருந்தாலும்,

    சிஎஸ்கே - 65%

    மும்பை இந்தியன்ஸ் - 35%

    22:09 (IST)12 May 2019

    ரெய்னா கிரேட் எஸ்கேப்...

    மேக்லானகன் வீசிய அபார பவுன்ஸ் பந்தில், ரெய்னா கிளவுசில் பந்து உரசி கீப்பரிடம் கேட்சாக அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால், ரெய்னா ரிவியூ செல்ல, அவுட் திரும்பப் பெறப்பட்டது.

    21:56 (IST)12 May 2019

    38-1

    5 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்துள்ளது, 

    ரெய்னா, வாட்சன் களத்தில்...

    21:49 (IST)12 May 2019

    யோவ்... ஏன்யா இப்படி!?

    செட் பேட்ஸ்மேன் டு பிளசிஸ், க்ருனல் பாண்ட்யா ஓவரில் 14 ரன்கள் சாத்திய பிறகும், பசி தாங்காமல் கடைசி பந்தில் இறங்கி ஆட முயற்சிக்க 26 ரன்களில் ஸ்டெம்பிங் ஆனார்.

    21:40 (IST)12 May 2019

    சென்னை களத்தில்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன், டு பிளசிஸ் களத்தில்...

    யப்பா முனியாண்டி, நீதான் காப்பாத்தணும் பா...

    21:23 (IST)12 May 2019

    டார்கெட் போதுமா?

    இல்லை... 150 என்ற இந்த டார்கெட் மும்பைக்கு நிச்சயம் போதாது. ஆனாலும், மும்பையால் இந்த இலக்கை டிபன்ஸ் செய்ய முடியும். 

    பும்ரா, மலிங்கா காம்போ இந்த இலக்கை சவாலானதாக மாற்றும் வல்லமை படைத்தது. 

    21:17 (IST)12 May 2019

    150 ரன்கள் இலக்கு

    பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் விளாச, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

    21:16 (IST)12 May 2019

    காமெடி செய்த பொல்லார்ட்... எச்சரித்த அம்பயர்கள்

    கடைசி ஓவரை வீசிய பிராவோ, முதல் மூன்று பந்துகளையும் ஆப் ஸ்டேம்ப்பிற்கு வைடாக வீசினார். பொல்லார்ட் ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வெளியே வந்து நின்றதால், பிராவோ அப்படி போட்டார். அம்பயர்கள் வைட் கொடுக்காத கடுப்பில், பொல்லார்ட், ஆப் சைடில் நடந்து சென்று எங்கோ பேட்டிங் செய்ய, அம்பயர்களை அவரை கடுமையாக எச்சரித்தனர்.

    21:10 (IST)12 May 2019

    ராகுல் சாஹர் எங்கே?

    பாண்ட்யாவைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் சாஹர் 0 ரன்களில் தீபக் சாஹர் ஓவரிலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அடப்போங்கப்பா... பொல்லார்ட் நிக்குற வரை, 165 டார்கெட் கன்ஃபார்ம்

    21:05 (IST)12 May 2019

    ஹர்திக் பாண்ட்யா அவுட்

    தீபக் சாஹரின் ஒரு அபார ஸ்விங் யார்கரில் ஹர்திக் பாண்ட்யா எல்பிடபிள்யூ ஆக, 16 ரன்களில் வெளியேறினார்.

    ஆனால் 'பொல்லாதவன்' பொல்லார்ட் களத்தில்...

    20:59 (IST)12 May 2019

    136-5

    18  ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள். களத்தில் ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட்..

    டார்கெட் 176?

    20:57 (IST)12 May 2019

    ஹர்திக் கேட்சை விட்ட ரெய்னா

    நான் என்னாத்த சொல்வேன்... ஷர்துள் தாகூர் ஓவரில் பாண்ட்யா கொடுத்த மிக மிக எளிதான கேட்சை சுரேஷ் ரெய்னா தவறவிட, ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களும் ஆஞ்சியோ பண்ண கியூவில் நிற்கின்றனர்.

    20:48 (IST)12 May 2019

    அதிபயங்கர பார்ட்னர்ஷிப் களத்தில்...

    கடைசி 5 ஓவர் மீதமிருக்க, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா களத்தில் நிற்க....

    கடவுளே என்ன நடக்கப் போகுதோ!!?

    20:42 (IST)12 May 2019

    நான் காண்பதெல்லாம் மெய்யா!!

    தாஹிருக்கு இரண்டாவது விக்கெட்...

    தாஹிர் ஓவரில் டாப் எட்ஜ் ஆன இஷான் கிஷன் 23 ரன்களில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    நான் காண்பதெல்லாம் மெய்யா!!

    20:33 (IST)12 May 2019

    க்ருனல் பாண்ட்யா அவுட்

    இந்த ஷர்துள் தாகூருக்கு என்ன தான் ஆச்சு? க்ருனல் பாண்ட்யா 7 ரன்களில் தாகூரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற, நான்காவது விக்கெட்டை இழந்தது மும்பை இந்தியன்ஸ்

    20:26 (IST)12 May 2019

    டி வில்லியர்ஸ் காலி

    அட நம்ம சூர்ய குமார் யாதவ்வை சொன்னேங்க... பராசக்தி எக்ஸ்பிரஸ் தாஹிர் ஓவரில் 15 ரன்களில் போல்டானார்.

    மும்பையின் மூணாவது விக்கெட்...

    20:21 (IST)12 May 2019

    டார்கெட் என்ன?

    10 ஓவர்கள் முடிவில், மும்பை இந்தியன்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. ஓரளவுக்கு சிஎஸ்கே ரன் ரேட்டை கட்டுப்படுத்தி இருக்கிறது எனலாம். இருப்பினும், சாவடி காவடி ஹிட்டர்ஸ் இனிமேல் தான் களமிறங்குவார்கள் என்பதால் சவாலான இலக்கு நிச்சயம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    20:10 (IST)12 May 2019

    53-2

    மும்பை இந்தியன்ஸ் எட்டு ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.

    தொடக்கத்திற்கு இந்த ரன் ரேட் சற்று குறைவு என்றாலும், நிச்சயம் 180 அடிக்க வாய்ப்புள்ளது.

    19:59 (IST)12 May 2019

    ரோஹித் அவுட்...

    தீபக் சாஹர் ஓவரில், ஸ்லோ பந்தில் ரோஹித் ஷர்மா எட்ஜ் ஆக, தோனிக்கு மீண்டும் ஒரு கேட்ச் கிடைக்க, 15 ரன்களில் வெளியேறினார் ரோஹித்.

    மும்பைக்கு பேக் டூ பேக் விக்கெட்ஸ்...

    19:56 (IST)12 May 2019

    டி காக் அவுட்

    சிக்ஸர்களை அனாயசமாக விரட்டிக் கொண்டிருந்த டி காக், ஆச்சர்யம் அளிக்கும் விதமாக ஷர்துள் தாகூரின் பவுன்ஸ் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து 29 ரன்களில் வெளியேறினார். 

    19:54 (IST)12 May 2019

    200 வந்துடுமோ!!

    மும்பை இந்தியன்ஸ் ஓப்பனர்ஸ் உண்மையில் மிரட்டலான தொடக்கத்தை கொடுத்துள்ளனர். சிக்ஸர்கள் சரமாரியாக தெறித்துக் கொண்டிருக்கிறது...

    200 ரன்களை டார்கெட் செய்கிறது மும்பை இந்தியன்ஸ்

    19:45 (IST)12 May 2019

    சிக்ஸ்..அய்யயோ

    இந்த ஷர்துள் தாகூர் இருக்காப்ளயே... என்னத்தைச் சொல்ல... 

    அவரோட ஓவரில் ரோஹித் ஷர்மா சிக்ஸ் ஒன்றை பறக்கவிட, தீபக் சாஹர் வீசிய அடுத்த ஓவரில் டி காக் மூன்று சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

    19:33 (IST)12 May 2019

    மும்பை இந்தியன்ஸ் களத்தில்...

    மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்களாக வழக்கம் போல ரோஹித் ஷர்மா, டி காக் களத்தில்...

    யப்பா சூப்பர் கிங்ஸ், நல்லா பவுலிங் போடுங்கப்பா!!

    19:24 (IST)12 May 2019

    வெற்றிக்கான ஃபார்முலா 1

    மும்பை ஓப்பனர்ஸை முதல் 30 ரன்களுக்குள் பிரிக்க வேண்டும்,

    ஹர்திக் பாண்ட்யாவை தொடக்கத்திலேயே வீழ்த்த வேண்டும்.

    பொல்லார்டை 20 ரன்களுக்கு மேல் நிற்க விடக் கூடாது.

    ஒட்டுமொத்தத்தில் மும்பையை 150 - 160க்குள் ரெஸ்ட்ரிக்ட் செய்யவில்லை எனில், கஷ்டம்!

    19:13 (IST)12 May 2019

    மும்பை இந்தியன்ஸ் பிளேயின் XI

    ரோஹித் ஷர்மா(c), குயிண்டன் டி காக்(w), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், க்ருனல் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட், ராகுல் சாஹர், மிட்சல் மெக்லீனகன், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா

    19:11 (IST)12 May 2019

    சிஎஸ்கே பிளேயிங் XI

    ஷேன் வாட்சன், டு பிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, மகேந்திர சிங் தோனி(wc), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஷர்துள் தாகூர்

    19:02 (IST)12 May 2019

    மும்பை பேட்டிங்

    டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    ஆஹா... டாஸ் ஜெயிச்சிட்டாங்களே...

    18:57 (IST)12 May 2019

    மும்பையின் பலம் என்ன?

    அவங்க டீமே பலம் தான். ஆனால் ஜோக்ஸ் அபார்ட், 

    செமி கன்சிஸ்டன்சி ஓப்பனிங்

    கொடூர லோ ஆர்டர்

    பும்ரா 

    இந்த மூன்று அம்சம் மட்டுமே மும்பையின் வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

    18:50 (IST)12 May 2019

    பும்ரா எனும் அபார அரக்கன்

    ஜஸ்பிரித் பும்ரா இந்தியன் டீமுக்கு பந்து வீசும் போது, சில்லரைகளை அள்ளி வீசும் கைகள், அவர் மும்பை இந்தியன்சுக்கு வீசும் போது, அதுவும் சென்னைக்கு எதிரா வீசும் போது வாசாப்பு விடுகிறது.

    18:46 (IST)12 May 2019

    சென்னை ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்?

    வேறென்னா.... ஓப்பனிங் நல்லா ஆடனும் அவ்ளோ தான். ஓப்பனிங் தானே சிஎஸ்கே-வின் 'பாகுபலி' தலைவலி. 

    ஓப்பனிங்,

    மிடில் ஆர்டர் 

    என இவ்விரண்டில் ஏதாவது ஒன்று க்ளிக் ஆனாலே சென்னைக்கு போதுமே!!

    ஆனால், அது நடக்க தான் மாட்டேங்குது!.

    18:33 (IST)12 May 2019

    அந்த நாள் ஞாபகம்...

    யப்பா.... மும்பையும், சென்னையும் பைனல்-ல மோதி எவ்ளோ நாளாச்சு... இன்னைக்கு, இன்னைக்கு பார்ப்பீங்க அந்த ஆட்டத்த... அனைத்து தோனி ரசிகர்களுக்கும், சிஎஸ்கே ரசிகர்களுக்கும் ஐஇ தமிழ் சார்பில் வணக்கங்கள் தெரிவித்துக் கொள்வது அன்பரசன் ஞானமணி. 

    தோனி ரசிகர்களும், சிஎஸ்கே ரசிகர்களும் ஒன்னு தான்யா வெண்ண...

    Ipl
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment