அணியில் இடம்பெறுகிறாரோ இல்லையோ, அவரது ட்விட்டர் பக்கத்தில் அழகிய தமிழ் மொழியில், எதுகை மோனையுடன் இவரது ட்வீட்கள் தவறாமல் இடம் பெற்றுவிடும். அதற்கென்றே ஒரு ரசிகரை அப்பாயின்ட் செய்து வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க – குட் டச்… நீட் டச்… ஸ்மாஷ்! மஞ்சள் ஜெர்ஸியில் பந்துகளை பறக்கவிட்ட தோனி! (வீடியோ)
தீபாவாளி, தமிழர் திருநாள், தமிழ் மக்களின் பிரச்சினைகள், கஜாபுயல் பாதிப்பு அனைத்தும் ஹர்பஜன் தமிழில் ட்வீட் செய்து தனது வாழ்த்துக்களையும், ஆதங்கம், வருத்தங்களையும் தெரிவித்து வந்தார்.
நடப்பு சீசனில் சென்னைக்கு வருவதற்கு முன் “சொந்தங்களை காண வருகிறேன். ஒரு ராணுவ வீரர் ஆண்டுக்கு ஒருமுறை வருவதைப்போல் வருகிறேன்” என்று பீலிங்ஸ் ட்வீட் போட்ட ஹர்பஜன், தற்போது முஸ்தபா… முஸ்தபா பாடலை பாடுபடுத்தி இருக்கிறார்.
நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இன்பம் வரலாம் துன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
@chennaipipl நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே செம பீலிங் வித் மச்சான் @msdhoni மாப்ள @ImRaina #thala #chinnathala #WhistlePoduArmy pic.twitter.com/L9z8C7tYux— Harbhajan Turbanator (@harbhajan_singh) 17 March 2019
கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருடன் அமர்ந்து தேநீர் குடிக்கும் ஹர்பஜன் சிங் நட்பை பாராட்டும் வகையில் இவ்வாறு ட்வீட்டியுள்ளார். அதில் “நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே இன்பம் வரலாம் துன்பம் வரலாம் நண்பன் ஒருவன் பங்கு பெறலாம் சென்னைஐபிஎல் நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே. செம பீலிங் வித் மச்சான் தோனி மாப்ள, ரெய்னா” என்று கண்கள் கலங்கும் அளவிற்கு பாசத்தை பரவவிட்டிருக்கிறார்.