Advertisment

மவுன குருவாக சாதித்த லோகேஷ் ராகுல்! பஞ்சாப் அபார வெற்றி!

Kings XI Punjab vs Mumbai Indians KXIP vs MI: பஞ்சாப் வெற்றி

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
MI vs KXIP Live Score, IPL 2019 Live Score

MI vs KXIP Live Score, IPL 2019 Live Score

IPL 2019, KXIP vs MI: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(மார்ச்.30) மாலை 4 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதின. இதில், பஞ்சாப் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

Advertisment

டெல்லி vs கொல்கத்தா லைவ் கிரிக்கெட் ஸ்கோர் அப்டேட்ஸ் மற்றும் ஸ்கோர் கார்டு காண இங்கே க்ளிக் செய்யவும்

 

Live Blog

KXIP vs MI Live Score



























Highlights

    19:39 (IST)30 Mar 2019

    பஞ்சாப் வெற்றி

    மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப். லோகேஷ் ராகுல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்தார்.

    19:35 (IST)30 Mar 2019

    வெற்றியை நெருங்கும் பஞ்சாப்!

    யோவ்... கணிப்பு கண்ணாயிரம்...

    இதோ இருக்கேன் தம்பி....

    மும்பை ஜெயிக்கும்-னு சொன்ன... இப்போ பஞ்சாப் ஜெயிக்கப் போகுது? அவ்ளோ தானா Prediction?

    எதுவும் நம்ம கையில் இல்ல தம்பி

    சமாளிக்காதயா...!

    19:23 (IST)30 Mar 2019

    ராகுல் 50*

    லோகேஷ் ராகுல், தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

    நிதானமா ஆடனும்-னு முடிவெடுத்திட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன் - ராகுல் தியரி

    19:15 (IST)30 Mar 2019

    அள்ளிக் கொடுத்த ஹர்திக்

    ஹர்திக் பாண்ட்யா வீசிய 15-வது ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 19 ரன்கள் விளாசப்பட்டது. இதில் சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரிக்கு சொந்தக்காரர் லோகேஷ் ராகுல். சைலண்ட் கில்லராக இன்று அள்ளு வுடுறார் மனுஷன்!

    19:05 (IST)30 Mar 2019

    என்னய்யா புடிச்சிட்ட?

    க்ருனால் பாண்ட்யாவின் ஓவரில் ஸ்ட்ரெய்ட் சிக்ஸ் அடித்து, 50 ரன்களை நெருங்கிக் கொண்டிருந்த மாயங்க் அகர்வால், க்ருனால் வீசிய அதே ஓவரில், அவரிடமே கேட்ச் கொடுத்து 43(21) வெளியேறினார். 

    18:55 (IST)30 Mar 2019

    அதிரடி காட்டும் மாயங்க்

    களத்தில் இறங்கியதில் இருந்தே ஸ்மார்ட்டான ஆட்டத்தில் ஈடுபடும் மாயங்க் அகர்வால், டப்பு டப்பு-வென நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து, ராகுலை விட அதிக ரன்களுடன் களத்தில் உள்ளார். வாவ் ப்ரோ!!

    18:42 (IST)30 Mar 2019

    மாயங்க் களத்தில்...

    இந்தியாவின் எதிர்கால சாம்பியன்கள் என நம்பப்படும் லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால் தற்போது களத்தில்...

    18:38 (IST)30 Mar 2019

    கெயில் அவுட்!

    ஹர்திக் ஓவரில் சாத்திய கெயில், க்ருனால் பாண்ட்யாவின் ஓவரில் சிக்ஸ் லைனில் நின்றிருந்த ஹர்திக்கிடமே கேட்ச் கொடுத்து 40 ரன்களில் சோகத்துடன் வெளியேறினார் கெயில். விதி வலியது!

    18:36 (IST)30 Mar 2019

    பாண்ட்யாவை பஞ்சராக்கிய கெயில்

    7வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யாவின் பந்துகளை டீப்-மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸும், ஸ்ட்ரெய்ட்டில் ஒரு சிக்ஸும் அடுத்தடுத்து அடித்து பாண்ட்யாவை சற்றே கலங்க வைத்துவிட்டார் கெயில்

    18:29 (IST)30 Mar 2019

    ராகுலுக்கு காத்திருக்கும் சவால்!

    லோகேஷ் ராகுல்... திறமைகள் வாய்ந்த, வாய்த்த ஒரு அருமையான பேட்ஸ்மேன். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் ஏற்ற ஒரு வீரன். ஆனால், அவனது பலவீனம் நம்பிக்கையின்மை. ரொம்ப மொக்கையாக அவுட்டாகும் போது அதை நாம் காண முடியும். இன்றைய போட்டிக்கு முன்பு, முதல் ஆளாய் இறங்கி கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இன்றைய போட்டியில் அடிக்கிறாரோ இல்லையோ... உலகக் கோப்பைக்கு உங்களது பெயரும் பரிசீலனையில் உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம் ராகுல். 

    உங்களை இழக்க டீம் இந்தியா தயாராக இல்லை!

    18:25 (IST)30 Mar 2019

    36-0

    5 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. 'ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்'-ங்கற சூட்சமத்தை கண்டு கொண்டாங்களோ!!?

    18:19 (IST)30 Mar 2019

    கணிப்பு கண்ணாயிரம்!

    கணிப்பு கண்ணாயிரம் அண்ணே... இந்த மேட்சுல ஜெயிக்கப் போவது மும்பையா? பஞ்சாப்பா?

    மும்பை.... 19வது ஓவரில் மும்பை ஜெயிக்கும்

    ஐ.... இன்னைக்கு கெயில் ஒரு காட்டு காட்டப் போறாருன்னு அர்த்தம்! பஞ்சாப்புக்கு ஒரு வெற்றி பார்சல்!

    18:14 (IST)30 Mar 2019

    மன்னிச்சூ...

    நாம கேட்கல... கெயிலிடம் மெக்லீனகன் கேட்டிருப்பார். மேக்லீனகனின் முதல் ஓவரில் எல்பி அப்பீல் கேட்கப்பட்ட கெயில், அவரது அடுத்த்ஹா ஓவரில், இரண்டு பிரம்மாண்ட சிக்ஸர்களை, மொஹாலி நகர வீதிகளில் பறக்கவிட்டார். அப்போ அடுத்த டார்கெட் மலிங்கா தானோ!?

    18:08 (IST)30 Mar 2019

    இரு கண்டத்தில் இருந்து தப்பிய பாஸ்

    பேரண்டத்தின் பாஸ் கெயில், மெக்லீனகன் ஓவரிலும், மலிங்கா ஓவரிலும் இருமுறை எல்பி கேட்கப்பட்டார். ஆனால், அம்பயர் தலை அசைக்கவேயில்லை. பாஸ் கொஞ்சம் பீதியாகித் தான் போயிருக்கிறார்.

    17:58 (IST)30 Mar 2019

    களத்தில் 'பேரண்டத்தின் பாஸ்'

    யுனிவர்சல் பாஸ்-னு சொல்லி போரடிச்சிடுச்சு. அதான், பேரண்டத்தின் பாஸ்... க்ரிஸ் கெயில், லோகேஷ் ராகுல் என பஞ்சாப் ஓப்பனர்கள் களத்தில்...

    17:52 (IST)30 Mar 2019

    மிரட்டும் ஹர்திக்

    ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் மிரட்டுகிறது. பெங்களூருவுக்கு எதிராக கோலி கண்ணெதிரே பந்துகளை பறக்கவிட்ட ஹர்திக், இன்று பஞ்சாபிலும் தனது வேட்டையை தொடர்ந்துள்ளார்.

    19 பந்தில் 31 ரன்கள்

    ஒரு இந்திய ரசிகராக, நமக்கு இது மகிழ்ச்சியே!! ஏனெனில், உலகக் கோப்பை நடக்கவிருப்பது இங்கிலாந்து மண்ணில். அங்கு, இதுபோன்று பயமறியா ஒரு ஆக்ரோஷ இன்னிங்ஸ் ஆடக் கூடிய வீரர் தேவை. 

    ஹர்திக் அந்த இடத்தை முத்தமிட்டு நிரப்புவார் என அவரது இந்த ஃபார்ம் நமக்கு உணர்த்துகிறது.

    17:44 (IST)30 Mar 2019

    177 ரன்கள் இலக்கு!

    நம்ம கணிப்பு கண்ணாயிரம் கணிச்சதை விட, 7 ரன்கள் குறைவாக அடித்துள்ளது மும்பை. ஹர்திக் பாண்ட்யாவின் அந்த கடைசி ஷார்ட் சிக்ஸ் ஆகி இருந்தால் 182 அல்லது 183 கூட மும்பை அடித்திருக்க வாய்ப்பிருந்தது. இருந்தாலும், நம்ம கணிப்பு ஒரு 'ஆஹா' சொல்லிவிடுவோம். ஏறக்குறைய துல்லியமாக கணித்ததற்காக!.

    மும்பை 176/7

    17:41 (IST)30 Mar 2019

    ஹர்திக் அவுட்

    ஷமி ஓவரில், சிக்ஸ் லைனில் ஹர்திக் பாண்ட்யா 31 ரன்களில் கேட்ச் ஆனார். 

    17:37 (IST)30 Mar 2019

    க்ருனால் அவுட்

    வில்ஜோன் ஓவரில், க்ருனால் பாண்ட்யா, 10 ரன்களில் கேட்ச் ஆனார். யாருப்பா இந்த வில் ஜோன்? பஞ்சாப்புக்காக இப்படி உழைக்கிறான்?

    17:30 (IST)30 Mar 2019

    கண்ணாயிரம் சொன்னது நடந்துடுமோ?

    நம்முடைய ஐஇ தமிழில்- பிரத்யேக Product-ஆன கணிப்பு கண்ணாயிரம், மும்பை அணி 183 ரன்கள் அடிக்கும்-னு மேட்ச் ஆரம்பிக்கும் போதே சொன்னார். கணிப்பு பலிக்குமா பலிக்காதா? உங்கள் டார்கெட் கெஸ் என்ன?

    17:25 (IST)30 Mar 2019

    பொல்லார்ட் அவுட்

    இந்த மனுஷனுக்கு இதே வேலையா போச்சு! தூஊஊஊ-க்கி  அடிக்க வேண்டியது. அது, விண்ணில் கலந்து, மேகத்தை உடைத்து மழைச்சாரல் போல, சிக்ஸ் லைனில், பீல்டர் கையில் சிக்கி விடுகிறது. 

    7 ரன்னில் பொல்லார்ட் அவுட்!

    17:16 (IST)30 Mar 2019

    களத்தில் ஹர்திக்....

    பெங்களூருவுக்கு எதிரான மேட்சில்... பந்துகளை மேகத்துக்கு அனுப்பிய ஹர்திக் பாண்ட்யா, 4வது வீரராக களமிறங்கியுள்ளார். 

    பொல்லார்ட்... ஹர்திக் ஆன் தி பிட்ச்...

    17:10 (IST)30 Mar 2019

    யுவி அவுட்!

    முருகனுக்கு அடித்த அடுத்த யோகம்.... பொதுவா, முருகனால் தானே யோகம் அடிக்கும்!? என்ன உலட்டாவா இருக்கு?

    அதாவது, நம்ம முருகன் அஷ்வின் ஓவரில், பஞ்சாப் சிங்கம் யுவராஜ் சிங் 18 ரன்களில் கேட்ச் ஆக, முருகனுக்கு இது 2வது விக்கெட்டாக அமைந்தது. 

    அப்போ, முருகனால, முருகனுக்கு யோகம் அடிச்சிருக்கு-னு நினைக்குறேன்!!

    17:07 (IST)30 Mar 2019

    இந்த ஷமி தான் வேணும்!

    நாம தலையில் குட்டியது ஷமி காதுக்கு கேட்டிருச்சு போல... தன் ஓவரை பொளந்து கட்டிய டி காக்-ஐ 60 ரன்களில் எல்பிடபிள்யூ ஆக்கி வெளியேற்றினர் முகமது ஷமி.

    17:02 (IST)30 Mar 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    அண்ணே.. வாங்கண்ணே...

    நீ மரியாதை கொடுக்கும் போதே, நான் சொன்னது நடக்கப் போகுதுன்னு நினைக்கிறேன். 

    ஆமாண்ணே... மும்பை 183 அடிக்கும்-னு சொன்னீங்க... அது போலவே, 9க்கு மேல ரன் ரேட் வச்சி ஆடி வர்றாங்க... அதைத் தாண்டியே அடிப்பாங்க போல.

    கணிப்பு-லே.... கண்ணாயிரம்-லே....

    16:58 (IST)30 Mar 2019

    டி காக் 50

    யார் ஓவராக இருந்தாலும் பாரபட்சமின்றி சாத்துமுறை நடத்தி வரும் டி காக், அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். 

    சீக்கிரம் அவுட் பண்ணுங்கப்பா... இல்லனா இந்த 'பீ காக்' தோகை விரித்து ஆடிவிடும்...

    16:52 (IST)30 Mar 2019

    102-2

    விக்கெட்டுகள் விழுந்தாலும், பதட்டமே இல்லாமல் ஆடும் மும்பை, 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் பிளான்-லாம் பஞ்சு பஞ்சா போச்சே!!

    16:50 (IST)30 Mar 2019

    ஷமி என்னது இது?

    டி20 பேட்ஸ்மேன்களில் கேமாக இருந்தாலும், முக்கியமான பவுலர்கள் தங்கள் பங்கை சிறப்பாக செய்ய வேண்டாமா? உலகக் கோப்பைத் தொடருக்காக இந்திய அணி பெரிதும் நம்பியிருக்கும் பவுலர்களில் ஒருவர் முகமது ஷமி. ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில், அவரது ஓவரில் அனாயசமாக சிக்ஸர்கள் பறக்கின்றன. இன்று உட்பட... 

    அதுவும், ஷமியின் ஷார்ட் பிட்ச் பந்தில், எந்தவொரு தடுமாற்றமும் இல்லாமல் Deep backward square leg-ல் சிக்ஸ் அடிக்கிறார் டி காக்..

    ஷமி.... கவனம், கவனம்!!

    16:42 (IST)30 Mar 2019

    உலகக் கோப்பையில் யுவ்ராஜ் சிங்?

    இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், யுவ்ராஜ் சிங் இடம் பெற வாய்ப்புள்ளதா?

    'வாய்ப்பே இல்லாத பதிலுக்கு வாய்ப்புள்ளதா என்று கேட்கும் உங்கள் அறிவுக்கு வாய்ப்பே இல்லை' என்று உங்கள் திருவாய் உச்சரிப்பது எனக்கு நன்றாக கேட்கிறது. 

    'ஐபிஎல் தொடரில் வீரர்களின் பெர்ஃபாமன்ஸ் உலகக் கோப்பைக்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாது' என இந்திய கேப்டன் விராட் கோலி ஏற்கனவே தெரிவித்திருப்பது உங்கள் நினைவுக்காக!!

    16:38 (IST)30 Mar 2019

    களத்தில் யுவ்ராஜ்

    பெங்களூரு-க்கு எதிரான மேட்சில் சாஹல் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறந்தன. இன்னைக்கு யார் ஓவருல பறக்கப்போகுதோ!!? கமான் யுவி

    16:31 (IST)30 Mar 2019

    முருகனுக்கு காவடி எடுங்கப்பா!!

    பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருந்த தமிழக வீரர் முருகன் அஷ்வின், தனது முதல் ஓவரிலேயே, சூர்ய குமார் யாதவை எல்பி முறையில் அவுட்டாக்கி அசத்தியுள்ளார். ஸோ, மும்பைக்கு 2வது விக்கெட்

    16:29 (IST)30 Mar 2019

    'நோ-பால்' கர்மா.... ரோஹித் அவுட்

    அபாரமாக ஆடி வந்த ரோஹித் ஷர்மா, வில்ஜோன் பந்தில் 32 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார். ரிவியூ கேட்காமல் ரோஹித் சென்ற பின், டிவி அம்பயர் பார்த்த போது, பந்து ஸ்டெம்புகளுக்கு வெளியே சென்றது தெரிய வந்தது. ஸோ. ரோஹித் நாட் அவுட்... பெங்களூரு-க்கு எதிரான மேட்சுல லாஸ்ட் ஓவர் லாஸ்ட் 'நோ-பால்' கர்மா, ரோஹித்தை பழி வாங்கிடுச்சோ!!

    16:21 (IST)30 Mar 2019

    தமிழ் ராக்கர்ஸுக்கு ஆப்பு?

    ஸ்டார் ஸ்போர்ட்ஸிலும், ஆன் லைனில் ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஐபிஎல் தொடரை காண முடியும். ஆனால், தமிழ் ராக்கர்ஸிலும் ஐபிஎல் திருட்டுத்தனமாக ஒளிபரப்பு செய்யப்பட்டதாக பரவலாக தகவல் வெளியானது. 

    இந்நிலையில், தமிழ் ராக்கர்சின் அனைத்து ஐடியும் தற்போது முடக்கப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது.

    16:11 (IST)30 Mar 2019

    அஷ்வின் vs ரோஹித்

    தொடக்கத்திலேயே அஷ்வின் அடுத்தடுத்து இரு ஓவர்களை வீசி வருகிறார். ஷமியின் 2வது ஓவரில் 3 பவுண்டரிகளை பறக்க விட்ட இன்ஃபார்ம் ரோஹித், அஷ்வினையும் ஒரு கை பார்ப்பாரா? 

    16:04 (IST)30 Mar 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    அண்ணே வாங்கே... என்ன சொல்லப் போறீங்க? எப்படியும், நீங்க ஜெயிக்கும்-னு சொல்ற டீமு தான் தோற்கப் போவுது..

    அப்படி-லாம் சொல்லக் கூடாது தம்பி... எப்படியோ, நான் சொல்றதுக்கு எதிர்வினைனு ஒன்னு இருக்குதுல..!?

    இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல... சரி, மும்பை எவ்ளோ அடிப்பாங்க?

    மும்பை இன்னைக்கு 183 ரன்கள் அடிக்கும்...

    16:01 (IST)30 Mar 2019

    எச்சரிக்கை....

    முதல் ஓவரை வீசுவதே நம்ம ரவிச்சந்திரன் அஷ்வின் தான்... ஆக, கிரீஸை எவனும் தாண்டக் கூடாது-னு முதல் ஓவரிலேயே எச்சரிக்கை விடுக்கிறார்...

    15:53 (IST)30 Mar 2019

    வெல்கம் பேக் முருகன் அஷ்வின்

    2016ல் நடந்த ஐபிஎல் ஏலத்தில், அடிப்படை விலையான 10 லட்சத்தில் இருந்து 4.5 கோடிகள் கொடுத்து, புனே அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த லெக் ஸ்பின்னர் முருகன் அஷ்வின். ஆனால், பெரிதாக ஜொலிக்காத முருகன், இப்போது மீண்டும் பஞ்சாப் அணிக்காக காட்சி தருகிறார்... பிள்ளைய நீ தான் காப்பத்தணும் முருகா!!!

    15:42 (IST)30 Mar 2019

    பஞ்சாப் பிளேயிங் XI

    லோகேஷ் ராகுல்(w), க்ரிஸ் கெயில், மாயங்க் அகர்வால், சர்ஃபரஸ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், ஹார்டஸ் வில்ஜோன், ரவிச்சந்திரன் அஷ்வின் (c), முருகன் அஷ்வின், முகமது ஷமி, ஆண்ட்ரூ டை

    15:40 (IST)30 Mar 2019

    மும்பை பிளேயிங் XI

    குயிண்டன் டி காக்(w), ரோஹித் ஷர்மா(c), சூர்யகுமார் யாதவ், யுவ்ராஜ் சிங், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, மிட்சல் மெக்லீனகன், மாயங்க் மார்கண்டே, ஜஸ்ப்ரித் பும்ரா, லசித் மலிங்கா

    15:33 (IST)30 Mar 2019

    மும்பை பேட்டிங்

    டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஷ்வின், பவுலிங்கை தேர்வு செய்தார்.

    15:16 (IST)30 Mar 2019

    தெறிக்க விடலாமா!!

    ஹாய், ஹலோ மை டியர் ஐஇ தமிழ் நேயர்களே!!  இரு 'கிரீஸ்' சர்ச்சை அணிகளான மும்பையும், பஞ்சாபும் இன்று மாலை உங்கள் கிரிக்கெட் பசியை போக்க காத்திருக்கின்றன.

    அஷ்வின் - வாங்கடா... எவனாச்சும், கிரீஸை தாண்டிப் பாருங்கடா... அப்புறம் இருக்கு

    ரோஹித் டூ மலிங்கா - பங்காளி... அவன் கிடக்குறான்... நாம கிரீஸை தாண்டிப் போட்டாக் கூட யாரும் கண்டுக்க மாட்டாங்க... நீ கலக்கு பங்காளி...

    தவிர, மும்பை vs பஞ்சாப் ஆட்டம் குறித்து நமது 'கணிப்பு கண்ணாயிரம்' வழங்கும் பிரத்யேக, ஆச்சர்ய, அதிசய, அபூர்வ, ஆத்மார்த்தமான Prediction-ஐ காணத் தவறாதீர்கள்
    Ipl Mi Vs Kxip
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment