Advertisment

IPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே? யார் வெளியே?

இந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்

author-image
Janardhan koushik
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே? யார் வெளியே?

இந்தியன் பிரீமியர் லீக் 2019ம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில்;  ஐபிஎல் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்து கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்து விட்டனர். இந்த Retain லிஸ்டில் (தக்க வைத்த கொண்ட வீரர்கள் பட்டியலில்) ரசிகர்களுக்கு மிகப்பெரிய நியூஸ் - சென்ற ஆண்டு  ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர், இந்த ஆண்டு தங்களது அணிகளுக்கு திரும்பியுள்ளது தான். சில அணிகளில் அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளன, மற்றபடி பெரும்பாலான அணிகள் தங்களது 'Core Strength' அணியை தக்கவைத்துக் கொண்டுள்ளன. Retain லிஸ்டில் எந்த வீரர்கள் எங்கு உள்ளனர்? வாங்க பாக்கலாம்...

Advertisment

சென்னை சூப்பர் கிங்ஸ்

மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது ‘Core Strength’ அணியை அப்படியே வைத்து கொண்டுள்ளனர். வயதான வீரர்கள், முதியோர் அணி என்றெல்லாம் கிண்டல் செய்தவர்களுக்கு பட்டத்தை வென்று பதிலடி கொடுத்த தல தோனி, இந்த ஆண்டும் அதே அணியுடன் களம் இறங்க உள்ளார். இங்கிலாந்து வேக பந்துவீச்சாளர் மார்க் வுட் இந்த ஆண்டு தக்க வைத்துக்கொள்ளப்படவில்லை; அதே போல் லோக்கல் வீரர்களான க்ஷிதிஸ் சர்மா, கனிஷ்க் சேத் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தக்கவைக்கப்பட்டவர்கள்: எம்.எஸ்.தோனி(கேப்டன்), ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டிவைன் பிராவோ, கரண் சர்மா, ஷேன் வாட்ஸன், ஷர்துல் தாக்கூர், அம்பதி ராயுடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டூப்பிளசிஸ், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி இங்கிடி, ஆசிப், என் ஜெகதீசன், மோனு சிங், துருப் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், டேவிட் வில்லி.

விடுவிக்கப்பட்டவர்கள்: மார்க் வுட், கனிஷ்க் சேத், க்ஷிதிஸ் சர்மா

மும்பை இந்தியன்ஸ்

சென்னைக்கு போட்டியாக ஒரு அணி கோப்பைகளை அடுக்கி கொண்டே போகும் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் தான். திறமையான வீரர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து பட்டையை கிளப்பும் இந்த அணி; சென்ற ஆண்டு கடைசி கட்ட போட்டிகளுக்கு கூட தகுதி பெற  வில்லை. இந்த ஆண்டு அதனை மாற்றியமைக்கும் பொருட்டு; அணியில் சில சில மாற்றங்கள் செய்ய்யப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்கா துவக்க ஆட்டக்காரர் குயின்டன் டீ காக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சென்ற ஆண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடினர். அதேபோல்; சென்ற ஆண்டு காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போன பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜூர் ரஹ்மான், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தனஞ்செயா, ஆஸி வீரர் கம்மின்ஸ் ஆகியோரை விடுவித்துள்ளது.

தக்கவைக்கப்பட்டவர்கள்: ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, க்ருனல் பாண்டியா, இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், மயங்க் மார்கண்டே, ராகுல் சாஹர், அங்குல் ராய், சிதேஷ் லாட், ஆதித்ய தாரே, எவின் லுவிஸ், பொலார்ட், பென் கட்டிங், மெக்லாரன், ஆடம் மில்னே, ஜேஸன் பெஹ்ரன்ட்ராப்

விடுவிக்கப்பட்டவர்கள்: முஸ்தபிஜுர் ரஹ்மான், பாட் கம்மின்ஸ், அகிலா தனஞ்சயா, ஜே.பி. டுமினி, சவுரப் திவாரி, தஜிந்தர் சிங், மோசின் கான், பிரதீப் சங்வான், எம்.டி நிதிஷ், சரத் லம்பா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இந்தியாவின் தூண் விராட் கோலி வழிநடத்தும்  ஐபிஎல் அணி. ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் தான் சாம்பியன் பட்டம் வெல்வார்கள் என்று நம்பி நம்பி ரசிகர்கள் ஏமார்ந்து போவது தான் மிச்சம். எப்பொழுதும் பேட்டிங் வலிமையாக கருதப்படும் இந்த அணி சென்ற ஐபிஎல் தொடரில் அதிலும் சொதப்பியது. இதை சரி செய்யும் பொருட்டு 2019 ஐபிஎல் வெல்வதற்கு இந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணியின் புதிய வரவு : மார்கஸ் ஸ்டோய்னிஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: விராட் கோலி, டிவில்லியர்ஸ், பர்தீவ் படேல், வாஷிங்டன் சுந்தர், பவன் நெகி, மொயின் அலி, கோலின் டி கிராண்ட்ஹோம், யஜுவேந்திர சாஹல், முகமது சிராஜ், டிம் சவுதி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்வந்த் கெஜ்ரோலியா, நாதன் கோல்டர் நீல்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: குயின்டன் டீ காக், மன்தீப் சிங், பிரன்டன் மெக்கலம், கிறிஸ் வோக்ஸ், கோரே ஆன்டர்சன்ஸ சர்பிராஸ் கான்.

டெல்லி டேர்டெவில்ஸ்

ஐபிஎல் அணிகளில் மிகவும் பாவப்பட்ட ஒரு அணி என்றால் அது டெல்லி டேர்டெவில்ஸ் தான். வருடாவருடம் அணி மாற்றம்; பயிற்சியாளர் மாற்றம்; கேப்டன் மாற்றம் என என்ன செய்தாலும் இந்த அணிக்கு பலன் கிடைக்கவில்லை. சென்ற ஐபிஎல் தொடரில் ரிஷப் போன்ற இளைஞர்களின் எழுச்சி இந்த அணிக்கு சாதகம் தான். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய அங்கமாக விளங்கிய துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் இந்த முறை தனது சொந்த ஊரான டெல்லி அணிக்கு விளையாட இருக்கிறார். சீனியர் வீரரான கவுதம் கம்பிர் விடுவிக்கப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு இளைஞர் படையுடன் இந்த அணி சாதிக்குமா என்று பார்க்கவேண்டும்.

அணியின் புதிய வரவு : ஷிகர் தவண்

தக்கவைக்கப்பட்டவர்கள்: ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, ரிஷப் பந்த், மன்ஜோத் கல்ரா, கோலின் மன்ரோ, கிறிஸ் மோரிஸ், ஜெயந்த் யாதவ், ராகுல் திவேஷியா, ஹர்சல் படேல், அமித் மிஸ்ரா, காசிகோ ரபாடா, டிரன்ட் போல்ட், சந்தீப் லாமிசானே, ஆவேஷ் கான்

விடுவிக்கப்பட்டவர்கள்: கவுதம் கம்பீர், ஜேஸன் ராய், குருகிரீத் மான், கிளென் மேக்ஸ்வெல், முகமது ஷமி, டான் கிறிஸ்டியன், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ஷாபாஸ் நதீம், ஷியான் கோஸ், லியாம் பிளங்கெட், ஜூனியர் டாலா, நமன் ஓஜா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஒரு முறை சாம்பியன் பட்டம்; சென்ற முறை பைனல் வரை சென்று போராடி சாதித்து இருக்கும் அணி. டேவிட் வார்னர் என்ற மிக பெரிய பலம் இல்லாமல், கேன் வில்லியம்ஸனின் அசத்தலான தலைமையில் சாதித்த அணி. காயம் காரணமாக கீப்பர் சாஹா விடுவிக்கப்பட்டுள்ளார். இவரை தவிர்த்து இங்கிலாந்து வீரர்கள் ஹேல்ஸ் மற்றும் கிறிஸ் ஜோர்டான்; விண்டிஸ் வீரர் கார்லோஸ் ப்ரத்வெயிட்  ஆகியோர் அணியில் இந்த ஆண்டு இடம்பெறவில்லை. குறிப்பாக, ஆறு வெளிநாட்டு வீரர்களை இந்த அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஷிகர் தவனுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் ஷங்கர், சுழற்பந்து வீச்சாளர் நதீம் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணியின் புதிய வரவு : விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ஷான்பாஷ் நதீம்

தக்கவைக்கப்பட்டவர்கள்: டேவிட் வார்னர், யூசுப் பதான், ரஷித் கான், சகிப் அல் ஹசன், ஸ்டான்லேக், கானே வில்லியம்ஸன், முகமது நபி, புவனேஷ்வர் குமார், மணிஷ் பாண்டே, டி.நடராஜன், ரிக்கி புகி, சந்தீப் சர்மா, கோஸாமி, சித்தார்த் கவுல், கலீல் அகமது, பாசில் தம்பி, தீபக் ஹூடா.

விடுவிக்கப்பட்டவர்கள்: ஷிகர் தவண், சச்சின் பேபி, டான்மே அகர்வால், விர்த்திமான் சஹா, கிறிஸ் ஜோர்டன், கார்லோஸ் பிராத்வெய்ட், பிபுல் சர்மா, மெஹதி ஹசன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி துவக்கத்தில் மிரட்டிய போதிலும், இடையில் சறுக்கியது. ஹைதராபாத் அணியுடன் Qualifier 2ல் தோற்று நடையை கட்டியது. All bases Covered என்று சொல்வதற்கு இந்த அணி சிறந்த உதாரணம். சிறந்த ஓப்பனிங், ஆல்-ரவுண்டர் பலம், பௌலிங் என அனைத்திலும் இந்த அணி கில்லி. மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களம் இறங்க இருக்கிறது இந்த அணி.

தக்கவைக்கப்பட்டவர்கள்: தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், சுப்மான் கில், நிதின் ராணா, ரிங்கு சிங், ஆன்ட்ரூ ரஷல், சுனில் நரேன், ஷிவம் மவி, குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, நாகர்கோட்டி, பிரஷித் கிருஷ்ணா

விடுவிக்கப்பட்டவர்கள்: மிட்ஷெல் ஸ்டார்க், மிட்ஷெல் ஜான்ஸன், டாம் கரன், கேமரூன் டெல்போர்ட், ஜாவன் சீர்லஸ், இஷாங் ஜக்கி, அபூர்வ் வான்கடே, வினய் குமார்

கிங்ஸ் XI பஞ்சாப் :

தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையில் துவக்கத்தில் இந்த அணி மற்ற அணிகளை பந்தாடியது. பின் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் இறுதி கட்ட போட்டிகளுக்கு தகுதி பெறாமல் போனது. ராகுல், கிறிஸ் கெயில் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களை இந்த அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது. இந்தியாவின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் மோசமான ஃபார்ம் காரணமாக சென்ற ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் பங்கேற்கவில்லை; எதிர்பார்த்ததுபோல் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர ஆரோன் பின்ச் மற்றும் சென்ற ஆண்டு ரிட்டைன் செய்யப்பட்ட அக்ஸார்  படேல் ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை. பெங்களூரு அணிக்கு விளையாடிய மந்தீப் சிங் இந்த ஆண்டு கிங்ஸ் XI அணியில் இடம்பெற்றுள்ளார்.

அணியின் புதிய வரவு : மன்தீப் சிங்

தக்கவைக்கப்பட்டவர்கள்: கிறிஸ் கெயில், டேவிட் மில்லர், கருண் நாயர், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஆர்.எஸ்வின், அங்கித் ராஜ்புத், ஆன்ட்ரூ டை, முஜிப் உர் ரஹ்மான்.

விடுவிக்கப்பட்டவர்கள்: மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ஆரேன் பிஞ்ச், மோகித் சர்மா, பரிந்தர் சரண், யுவராஜ் சிங், பென் துவார்சிஸ், மனோஜ் திவார், அக்ஸ்தீப் சிங், பிரதீப் சாஹூ, மயங்க் தாகர், மன்சூர் தார்

ராஜஸ்தான் ராயல்ஸ்

'Underdogs of IPL' என்று அனைவராலும் கருதப்படும் ஒரு அணி. பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாமல் ஒவ்வொரு வருடமும் முனைப்புடன் போராடும் அணி. சென்ற ஆண்டு ஸ்மித் இல்லாத காரணத்தினால் பெரிதாக சாதிக்க தவறியது. சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் மற்றும் துவக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் இந்த அணியின் மிகப்பெரிய பலம். இவர்களை தவிர்த்து இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் போன்றோர் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட், ஆஸ்திரேலியா துவக்க வீரர் டிஆர்கி, ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தக்கவைக்கப்பட்டவர்கள்: ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், இஷ் சோதி, அஜின்கிய ரஹானே, கே. கவுதம், சஞ்சு சாம்ஸன், ஸ்ரேயாஸ் கோபால், ஆர்யமான் பிர்லா, மிதுன், பிரசாந்த் சோப்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ராகுல் திரிபாதி, தவல் குல்கர்னி, மகிபால் லாம்ரார்.

விடுவிக்கப்பட்டவர்கள்: ஜெயதேவ் உனட்கட், அனுரீட் சிங், அங்கித் சர்மா, ஜதின் சக்சேனா, டிஆர்கி, பென் லாலின்

Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment