Advertisment

RCB vs SRH: காலம் கடந்த வெற்றி! காலம் கடந்த ஹெட்மயர் அதிரடி! விடை பெற்றது பெங்களூரு

IPL RCB vs SRH: பெங்களூரு வெற்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RCB vs SRH Live Score, RCB vs SRH Playing 11 Live Score

RCB vs SRH Live Score, RCB vs SRH Playing 11 Live Score

IPL 2019 RCB vs SRH: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(மே.4) இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில், பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

Advertisment

மேலும் படிக்க - வெளியேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்... டெல்லி கேபிடல்ஸ் வெற்றி

 

Live Blog

IPL 2019: RCB vs SRH



























Highlights

    23:42 (IST)04 May 2019

    ஹைதராபாத் கதி?

    சன் ரைசர்ஸ் நாளை வரை வெயிட் செய்ய வேண்டியது தான். நாளை இரவு மும்பையை எதிர்கொள்ளும் கொல்கத்தா, வெற்றிப் பெற்றுவிட்டால், ஹைதராபாத் காலி. ஒருவேளை கொல்கத்தா தோற்றால், ரன் ரேட் படி கொல்கத்தாவோ, ஹைதராபாத்தோ பிளே ஆஃப்க்கு முன்னேறும்.

    23:40 (IST)04 May 2019

    பெங்களூரு வெற்றி

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 19.2வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து வென்றது. இந்த சீசனின் கடைசிப் போட்டியை வெற்றியுடன் முடித்துள்ளது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்.

    23:32 (IST)04 May 2019

    குர்கீரத் அவுட்

    ஹெட்மயருடன் அபார பார்ட்னர்ஷிப் அமைத்த குர்கீரத் சிங் 48 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கலீல் அஹ்மது ஓவரில் கேட்ச் ஆனார்.

    23:27 (IST)04 May 2019

    ஹெட்மயர் அவுட்

    47 பந்துகளில் 75 ரன்கள் குவித்த ஹெட்மயர், இறுதியாக ரஷித் கான் ஓவரில், சிக்ஸ் லைனில் விஜய் ஷங்கரின் அபாரமான கேட்ச்சால் வெளியேறினார். 

    23:23 (IST)04 May 2019

    151-3

    17 ஓவர்கள் முடிவில், பெங்களூரு 151-3.

    ஹெட்மயர், குர்கீரத் சிங் தொடர்ந்து களத்தில்...

    23:14 (IST)04 May 2019

    வெற்றியை நெருங்கும் பெங்களூரு

    20 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி, வெற்றியை நெருங்குகிறது என்று நம்மால் இதுவரை சொல்ல முடிந்ததா? 

    ஆனால், இன்று அதற்கான பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    15 ஓவர்கள் முடிவில் 130-3

    23:02 (IST)04 May 2019

    கேட்சை விடல, மேட்சை விட்டு இருக்கீங்க

    புவனேஷ் குமார் வீசிய 13வது ஓவரில் ஹெட்மயர் 2 கேட்சுகளை கொடுக்க, மனீஷ் பாண்டே, யூசுப் பதான் அதை தவற விட, 

    கேட்சஸ் வின்ஸ் மேட்சஸ்... அதானே!?

    22:50 (IST)04 May 2019

    ஹெட்மயர் 50

    இனி  வயசுக்கு வந்தா என்ன, வராட்டி என்ன கதை தான்.

    இருந்தாலும், ஹெட்மயரின் இந்த அடியை நம்மால் ரசிக்க முடிகிறது. ரஷித் கான் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு, 32 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

    22:47 (IST)04 May 2019

    வெற்றிக்கு வாய்ப்பு இருக்கா?

    வாய்ப்பு இருக்கு. ஆனா அது பெங்களூருவுக்கு இருக்கான்னு தெரில... 

    யோவ்.. இதுக்கு பேர் கணிப்பா?

    உண்மையைச் சொன்னேன் பா..

    22:35 (IST)04 May 2019

    61-3

    8 ஓவர்கள் முடிவில், பெங்களூரு 3 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள்.

    22:24 (IST)04 May 2019

    நிரூபிப்பாரா ஹெட்மயர்?

    பெரும் எதிர்பார்ப்புடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயரை பெங்களூரு வாங்கியது. ஆனால், சீசன் தொடக்கத்தில் டோட்டல் டம்மி பீஸாகிப் போக, அவரை அணியில் இருந்து நீக்க நேரிட்டது. பல போட்டிகளுக்குப் பிறகு, இப்போது மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு.

    நிரூபிப்பாரா?

    22:11 (IST)04 May 2019

    ஓ மை காட்!

    கலீல் அஹ்மது ஓவரில் விராட் கோலி, 16 ரன்களில் கீப்பர் கேட்சாக, புவனேஷ் குமார் ஓவரில் டி வில்லியர்ஸ் 1 ரன்னில் ஸ்லிப்பில் கேட்சானார்.

    ஐயோ... மற்றுமொரு தோல்வியா????

    22:02 (IST)04 May 2019

    பட்டு அவுட்

    எப்போதும் மின்னல் வேக தொடக்கம் கொடுக்கும் நமது பட்டு என்கிற பார்த்திவ் படேல், புவனேஷ் குமாரின் முதல் ஓவரில் 0 ரன்களில் வெளியேறினர்.

    21:47 (IST)04 May 2019

    176 ரன்கள் இலக்கு

    சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.

    21:42 (IST)04 May 2019

    வில்லியம்சன் 50

    உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில், 6,4.6,4,2(NB),1,4 கேப்டன் வில்லியம்சன் அடித்த ரன்கள் இவை. 

    இந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் கிடைக்க, வில்லியம்சன் 43 பந்துகளில் 70 ரன்கள்.

    21:28 (IST)04 May 2019

    ரஷித் கான் அவுட்

    இனிமே என்ன பொறுமையாகவ ஆட முடியும்? அதிரடியாக ஆட நினைத்து ரஷித் கான் 1 ரன்னில் கேட்ச்சாக, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 7வது விக்கெட்டை பறிகொடுத்தது.

    21:25 (IST)04 May 2019

    கபி..கபி...

    நவ்தீப் சைனி ஓவரில், முகமது நபி 4 ரன்களில் வெளியேற, எதிர்முனையில் இருக்கும் வில்லியம்சனுக்கு கபி...கபி... பாடல் பாடுவதைத் தவிர, வேறு ஒன்றும் செய்ய முடியாது.

    21:19 (IST)04 May 2019

    யூஸுப் கரியர் காலி!

    எவ்வளவோ வாய்ப்புகள் கொடுத்தும் அதை மிக அழகாக வீணடித்து வருகிறார் யூஸுப் பதான். 

    இன்றும் 3 ரன்களில் அவுட். சாஹல் ஓவரில் சல்லீசாக அவுட்டாகி வெளியேறினார்.

    21:13 (IST)04 May 2019

    வில்லியம்சனுக்கு என்ன தான் ஆச்சு!

    இந்த சீசனில் பேட்டிங்கில் சுத்தமாக ஃபார்ம் அவுட்டில் இருந்த கேன் வில்லியம்சனின், இன்றைய அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இருக்கிறது. டச் அபாரம். அனாயசமாக சிக்ஸர்களை அடித்து வருகிறார்.

    21:08 (IST)04 May 2019

    விஜய் ஷங்கர் அவுட்

    வாஷிங்டன் சுந்தர் ஓவரில் இரண்டு பேக் டூ பேக் சிக்ஸர்கள் விளாசிய விஜய் ஷங்கர், ஹாட்ரிக் சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் ஆனார். 

    27 ரன்களில் விஜய் அவுட்

    21:02 (IST)04 May 2019

    அந்த அதிசயம் நிகழுமா?

    விஜய் ஷங்கர் மீது தமிழக ரசிகர்கள் கூட, இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்க மாட்டார்கள் போல.. ஹைதராபாத் அணி அவர் மீது அளவுக்கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. 

    ஆனால், எல்லா மேட்சுலயும் 20 ரன்கள் கூட தாண்டாமல், மிக மிக மொக்கை ஷாட் அடித்து அவுட்டாகி வருவார். 

    இன்றாவது அவர் அடிப்பாரா என்று பார்ப்போம்!!

    20:50 (IST)04 May 2019

    சரிந்த ரன் ரேட்

    முதல் ஐந்து ஓவரில் 10க்கும் மேல் இருந்த ரன் ரேட், அடுத்த ஐந்து ஓவரில் அப்படியே சரிந்துள்ளது. 

    10 ஓவர்கள் முடிவில், ஹைதராபாத் 71-3. 

    ரன் ரேட் 7.06

    20:42 (IST)04 May 2019

    முடிந்தது கதை

    வாஷிங்டன் சுந்தர் ஓவரில் கப்தில் காலியாக, அதே ஓவரில் 9 ரன்களில் ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    20:36 (IST)04 May 2019

    60/2

    அதிரடியாக ஆடி வந்த மார்டின் கப்தில் 30 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் ஓவரில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இவனுங்க மிடில் ஆர்டர் வேற மகா மட்டமானதாச்சே!! தாக்குப் பிடிக்குமா?

    20:21 (IST)04 May 2019

    சாஹா அவுட்

    நவ்தீப் சைனி ஓவரில், 20 ரன்களில் சாஹா கேட்ச் ஆனார். 

    பவர் பிளே என்பது அடிப்பதற்கு மட்டுமல்ல, நிற்பதற்கும் கூடத் தான்.

    கொஞ்சம் பொறுமையாக ஆடி இருக்கலாமே சாஹா!

    20:19 (IST)04 May 2019

    வாவ் ரன் ரேட்

    4 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்துள்ளது. 

    20:09 (IST)04 May 2019

    நான் காண்பது உண்மையா?

    நவ்தீப் சைனியின் இரண்டாவது ஓவரில், மார்டின் கப்தில் 19 ரன்கள் விளாச, சன் ரைசர்ஸ் கேம்ப்பில் ஏக குஷி. 

    அங்க திமுக குடும்பம் வேற உட்கார்ந்து இருக்குயா!!!

    20:00 (IST)04 May 2019

    கப்தில் சாரே... அடிங்க சாரே...

    மார்டின் கப்தில்.. இன்னைக்காவது அடிய்யா!!

    கப்தில், சாஹா ஹைதராபாத் அணியின் ஓப்பனர்ஸ்களாக,,,

    19:47 (IST)04 May 2019

    ஹைதராபாத் வெற்றி

    டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி.... என்ன ஆச்சர்யமா இருக்கா!? உண்மையிலேயே டாஸ் வின் பண்ணது கோலி தாங்க... கோலி பவுலிங்கை தேர்வு செய்ய, களமிறங்குகிறது ஹைதராபாத். 

    Ipl
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment