கடைசி ஓவரில் சிஎஸ்கே ‘அரோகரா’ வெற்றி! ஏமாந்த பென் ஸ்டோக்ஸ்!

IPL 2019, Rajasthan Royals vs Chennai Super Kings: சென்னை வெற்றி

CSK vs RR
CSK vs RR

IPL 2019 RR vs CSK: ஐபிஎல் 2019 தொடரில், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில், சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

பெங்களூரு vs ஹைதராபாத் போட்டியின் கிரிக்கெட் ஸ்கோர் அப்டேட்ஸ் மற்றும் ஸ்கோர் கார்டு காண இங்கே க்ளிக் செய்யவும்

Live Blog

IPL 2019: RR vs CSK , Rajasthan Royals vs Chennai Super Kings


00:32 (IST)01 Apr 2019

பை..பை.. சிஎஸ்கே மக்களே

நாளை… அதாவது இன்று(ஏப்ரல்.1) பஞ்சாப்பும், டெல்லியும் மோதவுள்ள ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. மீண்டும் லைவில் சந்திப்போம்.. அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது, அன்பரசன் ஞானமணி, கணிப்பு கண்ணாயிரம்!!

00:31 (IST)01 Apr 2019

கணிப்பு கண்ணாயிரம்

அண்ணே… என்னண்ணே இந்தப் பக்கமே காணும்?

அதை ஏன் பா கேட்குற… குழம்புல உப்பு கம்மிய இருக்குனு பொண்டாட்டி கிட்ட சொன்னேன்… அவ, என்ன கடுப்புல இருந்தாலோ தெரியல… துணி துவைக்க சொல்லிட்டா… 

வெரி குட்… இங்க, சிஎஸ்கே ராஜஸ்தானை துவைச்சு எடுக்க, அங்க நீ துணி துவைச்சுக் கிட்டு இருந்திருக்க…. 

00:26 (IST)01 Apr 2019

‘ஆட்டநாயகன்’ தோனி

வேற யாருக்கு கொடுக்க முடியும்? ஆட்ட நாயகன் விருது தல தோனிக்கே…

00:11 (IST)01 Apr 2019

சிஎஸ்கே வெற்றி

இறுதி ஓவரில் பிராவோ 3 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுக்க, சிஎஸ்கே 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது

00:10 (IST)01 Apr 2019

19.6

உணட்கட் – 1 ரன்

00:09 (IST)01 Apr 2019

19.5

கோபால் – அவுட்… இம்ரான் தாஹிரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

00:06 (IST)01 Apr 2019

19.4

ஆர்ச்சர் – ஒரு ரன்

00:05 (IST)01 Apr 2019

19.3

கோபால் – ஒரு ரன்

00:04 (IST)01 Apr 2019

19.2

கோபால் – ரன் இல்லை

00:03 (IST)01 Apr 2019

19.1

ஸ்டோக்ஸ் அவுட்… ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஸ்டோக்ஸ் அவுட்

00:01 (IST)01 Apr 2019

6 பந்துகளில் 12 ரன்

ராஜஸ்தான் வெற்றிப் பெற கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை… களத்தில் நிற்பது ஸ்டோக்ஸ்… ஸ்டோக்ஸ் இல்லாட்டியும் ஆர்ச்சர் அடிப்பான் போலிருக்கே!!

23:54 (IST)31 Mar 2019

சிக்ஸர்களை பறக்கவிடும் ஸ்டோக்ஸ்!

18வது ஓவரை வீசிய பிராவோ ஓவரில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உட்பட 19 ரன்கள் விளாசப்பட்டது. அதிலும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தது காலக் கொடுமை!

23:48 (IST)31 Mar 2019

யாரு சாமி இவன்?

ஜோஃப்ரா ஆர்ச்சர் பவுலர்-னு தானேடா சொன்னீங்க… அவன் என்னடா சிக்ஸ்-லாம் அடிக்குறான்?

23:43 (IST)31 Mar 2019

கெளதம் அவுட்!

தீபக் சாஹர் ஓவரில், கிருஷ்ணப்பா கெளதம் 9 ரன்களில், சின்ன தல ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால், இன்னமும் ஒரு பெரும் கண்டம் (ஸ்டோக்ஸ்) களத்தில் உள்ளது.

23:37 (IST)31 Mar 2019

30 பந்தில் 65…

ராஜஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது 

23:28 (IST)31 Mar 2019

ஸ்மித் அவுட்

பெரும் அச்சுறுத்தலாய் இருந்த ஸ்டீவன் ஸ்மித், இம்ரான் தாஹிர் ஓவரில் 28 ரன்களில் கேட்ச் ஆனார்.

23:10 (IST)31 Mar 2019

திரிபாதி அவுட்

இம்ரான் தாஹிர்…அதாங்க, ரன்னிங்குக்கு பர்த் ஆனவர். வீசிய முதல் ஓவரிலேயே, திரிபாதி விக்கெட்டை காலி செய்து திருப்பத்தை கொடுத்திருக்கிறார். வாய்யா…வாய்யா

23:03 (IST)31 Mar 2019

50* பார்ட்னர்ஷிப்

திரிபாதி, ஸ்மித் பார்ட்னர்ஷிப் அரைசதம் அடித்துள்ளது. இப்படித்தான் 3 விக்கெட் விழுந்த அப்புறம் தோனி – ரெய்னா பார்ட்னர்ஷிப் அமைச்சாங்க… அதே ரூட்டுல ராஜஸ்தான் டிராவல் ஆகிட்டு இருக்கு. ஏதாச்சும் பண்ணனும் தல…

22:50 (IST)31 Mar 2019

சாத்து விழுந்த சான்ட்னர் ஓவர்

மிட்சல் சான்ட்னர் வீசிய முதல் ஓவரில் 17 ரன்கள் விளாசப்பட்டது. இதில், ஒரு சிக்ஸரும், 2 பவுண்டரியும் அடங்கும். ஹர்பஜனுக்கு பதில், மிட்சல் சான்ட்னர் இன்று அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

22:35 (IST)31 Mar 2019

பட்லர் அவுட்!

ஷர்துள் தாக்கூர் ஓவரில், மோஸ்ட் டேஞ்சரஸ் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர், மிட் ஆனில் நின்றிருந்த பிராவோ-விடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸோ, ராஜஸ்தான் 15-3

22:27 (IST)31 Mar 2019

ஐபிஎல் 2019ல் அதிகம் விளாசப்பட்ட ஓவர்கள்

28 தோனி / ஜடேஜா – ஜெயதேவ் உணட்கட் ஓவர்
25 சுனில் நரைன் – வருண் சக்கரவர்த்தி ஓவர்
25 ராபின் உத்தப்பா / ஆந்த்ரே ரசல் – முகமது ஷமி ஓவர்

22:21 (IST)31 Mar 2019

மெய்டன் விக்கெட் ஓவர்

தீபக் சாஹரே இந்த சாதனையை எதிர்பார்த்திருக்க மாட்டார். முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி, ரன் ஏதும் கொடுக்காமல் ஓவரை நிறைவு செய்துள்ளார்.

22:16 (IST)31 Mar 2019

ரஹானே அவுட்

தீபக் சாஹர் ஓவரில், ராஜஸ்தான் கேப்டன் ரஹானே ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 0 ரன்னில் வெளியேறினார். பேக்வேர்ட் பாயிண்ட்டில் ஜடேஜா பிடித்த அந்த கேட்ச், உண்மையில் மெர்சல் கேட்ச்!.

22:10 (IST)31 Mar 2019

75 ரன்கள் குவித்த தோனி

தல தோனி, இன்று மொத்தமாக 46 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். இதில், கடைசி மூன்று பந்தில் மட்டும் 18 ரன்கள். 21-3 என்ற நிலையிலிருந்த சென்னை அணியை 175 ரன்கள் வரை இட்டுச் சென்றிருக்கிறார் கேப்டன் தோனி

22:01 (IST)31 Mar 2019

ஹாட்ரிக் சிக்ஸ் விளாசிய தோனி

கடைசி ஓவரை வீசிய உணட்கட் ஓவரில் கடைசி மூன்று பந்தில் தோனி சிக்ஸர்கள் விளாச, அந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனால், சிஎஸ்கே 20 ஓவர்களில் 5 விக்கெட் 175 ரன்கள் குவித்துள்ளது. 

21:49 (IST)31 Mar 2019

பிராவோ அவுட்

ஆர்ச்சர் ஓவரில், பிராவோ 27 ரன்களில் குல்கர்னியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

21:47 (IST)31 Mar 2019

தல 50

தோனி 50 ரன்கள் அடிக்க, 21வது ஐபிஎல் அரைசதமாக தோனிக்கு அது அமைந்தது

21:37 (IST)31 Mar 2019

கொஞ்சம் வேகம் காட்டுங்க தோனி!

இன்னும் 3 ஓவர்களே மீதமுள்ள நிலையில், சென்னை 115/4 ரன்களே எடுத்துள்ளது. இனி ஓவருக்கு 10 ரன்கள் அடித்தால் 145 அடிக்கலாம்… தோனி சற்று வேகத்தை கூட்டினால், மேற்கொண்டு 10 ரன்கள் அடிக்கலாம். தோனி.. கொஞ்சம் கருணை காட்டுங்க!!

21:27 (IST)31 Mar 2019

100-4

15.1வது ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 100 ரன்களை தொட்டுள்ளது. இன்னும், 29 பந்தில் எவ்ளோ அடிக்க முடியும்? ஒரு 50 அடிச்சிட்டா போதும்…. டீசன்ட்டா இருக்கும்.

21:25 (IST)31 Mar 2019

கணிப்பு கண்ணாயிரம்

யோவ்… ரெய்னா நிப்பான், தோனி தான் அவுட்டாவார்-னு சொன்னா… ரிவர்சுல நடக்குதேயா?

சும்மா இருப்பா… நானே டென்ஷன்-ல இருக்கன்… 

யோவ்… நடிக்காதயா… சிஎஸ்கே மட்டும் 150 அடிக்காம போகட்டும்… அப்புறம் இருக்கு உனக்கு!.

21:16 (IST)31 Mar 2019

ரெய்னா அவுட்

உணட்கட் ஓவரில், சுரேஷ் ரெய்னா 36 ரன்களில் போல்டாக, சிஎஸ்கே தனது நான்காவது விக்கெட்டை இழந்துள்ளது. எப்படியாவது தட்டி கிட்டி 150-160 அடித்துவிட்டால், வெற்றிக்கு முயற்சிக்கலாம். இல்லையெனில், கஷ்டம்!

21:06 (IST)31 Mar 2019

78/3

12 ஓவர்கள் முடிவில், சிஎஸ்கே 3 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. அய்யய்யோ.. இன்னும் 8 ஓவர் தான் பாக்கி இருக்கா? தல, சின்ன தல கியரை மாத்துங்க…

21:01 (IST)31 Mar 2019

சின்ன தல… கை விட்டுடாதீங்க!!

சின்ன தல ரெய்னா, கிருஷ்ணப்பா கெளதம் ஓவரில் ஹியூஜ் சிக்ஸ் ஒன்றை பறக்க விட்டு, சிஎஸ்கே ரசிகர்களுக்கு சிறிது ஆறுதல் கொடுத்திருக்கிறார். ஆனால், ரன் ரேட் இப்போது தான் 6-ஐ தொட்டிருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரம் ரெம்ப இருக்கு!!

20:51 (IST)31 Mar 2019

தோனியிடம் எதிர்பார்க்கலாமா?

நம்ம கணிப்பு கண்ணாயிரம் என்ன சொல்றார்-னா தோனி இந்த மேட்சில் சிறப்பாக ஆடுவது சந்தேகம். விரைவில் அவுட்டாக வாய்ப்பிருகிறதாம். நீங்க என்ன சொல்றீங்க?

20:44 (IST)31 Mar 2019

கணிப்பு கண்ணாயிரம்

நீ ஒரு கேள்வியும் கேட்க வேண்டாம்… இந்த மேட்சுல, தோனி நிப்பார்-னு நம்பிக்கை இல்ல… ரெய்னா நின்னு அடிக்க வாய்ப்பிருக்கு. அப்படியே, பிராவோ கொஞ்சம், ஜடேஜா கொஞ்சம், சான்ட்னர் கொஞ்சம்-ன்னு தட்டி தட்டி அடிச்சா ஒரு 158-167 அடிக்கலாம். 

20:37 (IST)31 Mar 2019

இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ!?

இன்னைக்கு டான்-களுக்கெல்லாம் நேரம் சரி இல்லையோ! தளபதி கோலி டீம் 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க, தல தோனி டீம் 5 ஓவருக்குள்ளவே 3 விக்கெட்டுகளை இழந்திடுச்சு! இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ!?

20:22 (IST)31 Mar 2019

அதுல ஒரு தொழில் ரகசியம் என்னன்னா!!

அதே பென் ஸ்டோக்ஸ் ஓவரில், ஷார்ட் பிட்ச் பந்தில், ஆர்ச்சரிடம் கேட்ச் கொடுத்து 13 ரன்களில் வாட்சன் அவுட்!

20:20 (IST)31 Mar 2019

சிக்ஸ்!

பென் ஸ்டோக்ஸ் ஓவரில், லெக் சைடில் ஒரு ஸ்மார்ட் சிக்ஸ் அடித்த வாட்சன் நமக்கு சொல்ல வர்றது என்னன்னா, ‘நாம் பார்மில் இருக்கிறேன்… வாங்கடா’!

20:11 (IST)31 Mar 2019

ராயுடு அவுட்!

ஆர்ச்சர் ஓவரில், அம்பதி ராயுடு 1 ரன் மட்டும் எடுத்து கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அய்யயோ… இந்த பிட்ச் இன்னும் மாறவே இல்லை போலிருக்கே!!

20:10 (IST)31 Mar 2019

கணிப்பு கண்ணாயிரம்

1.4 ஓவர்கள் ஆச்சு. சிஎஸ்கே இதுவரை 1 ரன் தான் அடிச்சிருக்கு ஆண்டவரே… ஐ மீன் கணிப்பு கண்ணாயிரம் அவர்களே… சிஎஸ்கே எவ்ளோ அடிக்கும்?

சிஎஸ்கே-வில் நம்பிக்கையான ஹிட்டர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆகையால், 160+ நிச்சயம் வரும் என எதிர்பார்க்கலாம். பிட்ச், ஈரப்பதமா இருக்கும்-னு நினைக்கிறேன். ஸோ, அடிக்குறது கொஞ்சம் கஷ்டம் தான்

20:07 (IST)31 Mar 2019

ராஜஸ்தான் பிளேயிங் XI

அஜின்க்யா ரஹானே(c), ஜோஸ் பட்லர்(w), சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்பா கெளதம், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெயதேவ் உணட்கட், ஷ்ரேயாஸ் கோபால், தவால் குல்கர்னி.

20:05 (IST)31 Mar 2019

களத்தில் சிஎஸ்கே…

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு களம் இறங்கியுள்ளனர். சிஎஸ்கே-னாலே ஒரு இனம் புரியா எனர்ஜி நமக்குள்… 

(நமக்கு இருக்குறது இருக்கட்டும்… அது டீமுக்குள்ளயும் இருக்கட்டும்)

19:59 (IST)31 Mar 2019

சிஎஸ்கே பிளேயிங் XI

ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், எம்எஸ் தோனி(w/c), டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, மிட்சல் சான்ட்னர், தீபக் சாஹர், ஷர்துள் தாகூர், இம்ரான் தாஹிர்

19:49 (IST)31 Mar 2019

சென்னை பேட்டிங்

டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

19:39 (IST)31 Mar 2019

‘தல’ ரசிகர்களுக்கு நமஷ்கார்!

ஹிந்தியில வணக்கம் சொன்னதுக்கு டென்ஷன் ஆகக் கூடாது! நான் பியூர் தமிழன் தான். சிஎஸ்கே vs ஆர்ஆர் மேட்சின் லைவ் கிரிக்கெட் அப்டேட்ஸ் மற்றும் ஸ்கோர் கார்டுக்கு இணைந்திருங்கள் ஐஇ தமிழுடன்… அங்குட்டு ‘தளபதி’ கோலி மானவாரியா அடி வாங்கி இருக்காப்ள…. தெரியுமா?

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ipl 2019 rr vs csk live cricket score updates

Next Story
இப்படியொரு கொடூர தோல்வியை கோலி எதிர்பார்த்திருக்க மாட்டார்! போதும்…. நிறுத்திக்கலாம்!RCB vs SRH
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com