SRH vs MI 2019 Live Streaming: மும்பையை அதன் கோட்டையில் வீழ்த்த வேற மாதிரி யோசிக்கணும்! – ஹைதராபாத் vs மும்பை

When and Where to Watch MI vs SRH Live on TV: மும்பை vs ஹைதராபாத்

By: May 2, 2019, 5:13:25 PM

IPL 2019 SRH vs MI Live Streaming on TV: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(மே.2) இரவு வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

இன்னும் ஒரேயொரு வெற்றி…. கிடைத்தால், மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப்க்குள் நுழைந்துவிடும். 12 போட்டிகளில் 7 வெற்றியுடன் 14 புள்ளிகள் பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. ரன் ரேட் +0.347.

முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ விட சிறந்த ரன் ரேட் இது.

மும்பையை பற்றி எப்போதும் பெரிதாக கவலை கொள்ளத் தேவையில்லை. ரோஹித் எனும் மேட்ச் வின்னரின் தலைமையில் பல மேட்ச் வின்னர்கள் அடங்கிய குழு அது. தவிர, உலகின் நம்பர்.1 பவுலர் பும்ரா, வயதானாலும் இன்னமும் யார்க்கர் டச் விட்டுப் போகாத மலிங்கா ஆகிய பவுலிங் கூட்டணியைத் தாண்டி, அந்த அணியை வீழ்த்துவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.

ரசல் மாதிரி எங்கேயாவது கடல் கடந்து அடிக்குற வீரர்களால் மட்டுமே மும்பையை அசைத்துப் பார்க்க முடிகிறது. தவிர, மும்பை தாமாக தவறு செய்து தோற்றால் தான் ஒழிய, இந்த சீசனில் பலம் கொண்ட அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் தான்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை வார்னருக்கு பதிலாக மார்ட்டின் கப்தில் இன்று களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம். மறந்துவிடாதீர்கள்… தன பெயரில் இரண்டு டி20 சதங்களை பதிவு செய்து வைத்திருக்கும் அபாயகரமான பேட்ஸ்மேன் இவர்… ஆனால், இன்கன்சிஸ்டன்சி இவரது பலவீனம்.

தவிர, மனீஷ் பாண்டே மீண்டும் காண்டு ஃபார்முக்கு திரும்பி இருப்பது ஹைதராபாத்தின் மிகப் பெரிய பலம் எனலாம். அவரது ஒவ்வொரு அடியும் இடி மாதிரி இருக்கிறது. ஆனால், இவற்றை கடந்து பார்த்தால் அதே மிடில் ஆர்டர் தடவல், கேன் வில்லியம்சன் தடுமாற்றம் ஆகியவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பவுலிங்கை பொறுத்தவரை புவனேஷ், ரஷித் ஆகியோர் பெரிதாக  இம்பேக்ட் காட்டவில்லை.

ஸோ, கூட்டிக் கழிச்சுப் பார்க்கும் போது, வான்கடேவில் வைத்து மும்பைக்கு வாண வேடிக்கை காட்ட வேண்டுமெனில் ஹைதராபாத் அணி ‘பாகுபலி’ போல பிரம்மாண்ட சாகசங்கள் நிகழ்த்த வேண்டியிருக்கும்.

புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் 12ல் 6 வெற்றியுடன் 12 புள்ளிகளை கொண்டிருக்கிறது. ஆனால், ஒரே பாஸிட்டிவ் விஷயம் என்னவெனில், மற்ற அணிகளை அதிக ரன் ரேட் வைத்திருப்பது தான். +0.709.

மும்பை vs ஹைதராபாத் போட்டியை அனைத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் கண்டுகளிக்கலாம். ஆன்லைனில் ஹாட்ஸ்டார் ப்ரீமியம் மூலமாக இப்போட்டியை காணலாம்.

தவிர, தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் பிரத்யேக லைவ் அப்டேட்ஸ் மற்றும் லைவ் ஸ்கோர் கார்டினை நீங்கள் கண்டுகளிக்கலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Ipl 2019 srh vs mi preview when and where to watch

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X