Advertisment

IPL 2020 Auction: அதிக தொகைக்கு விலை போன பேட் கம்மின்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸின் ராஜதந்திரம்

IPL Auction Updates: ஐபிஎல் ஏலம் 2020

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
VIVO IPL  2020 Player Biddings Updates

VIVO IPL  2020 Player Biddings Updates

VIVO IPL  2020 Player Biddings Updates: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் 13வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது.

Advertisment

பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், கிறிஸ் லின், கிளென் மேக்ஸ்வெல், டெலே ஸ்டெயின், மேத்யூஸ் ஆகியோரின் அடிப்படை ஏலத் தொகை ரூ.2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டது.

ஐபிஎல் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்:

பேட் கமின்ஸ் - ரூ.15.5 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கிளென் மேக்ஸ்வெல் - ரூ. 10.75 கோடி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கிறிஸ் மோரிஸ் - ரூ.10 கோடி - ஆர்சிபி

ஷெல்டன் காட்ரெல் - ரூ.8.5 கோடி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

நேதன் கோல்டர் நைல் - ரூ. 8.5 கோடி - மும்பை இந்தியன்ஸ்

ஷிம்ரன் ஹெட்மயர் - ரூ.7.75 கோடி - டெல்லி கேப்பிடல்ஸ்

 

Live Blog

VIVO IPL  2020 Auction: ஐபிஎல் 2020 ஏலம் அப்டேட்ஸ்



























Highlights

    21:20 (IST)19 Dec 2019

    ஏலம் முடிந்தது

    இத்துடன் இன்றைய முதல் நாள் ஏலம் முடிவுக்கு வந்தது.

    21:20 (IST)19 Dec 2019

    மார்கஸ் ஸ்டாய்னிஸ் - ரூ.4.80 கோடி

    இங்கிலாந்து வீரர் டாம் கரண் - ரூ. 1 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்

    இலங்கை வீரர் இசுரு உதனா - ரூ.50 லட்சம்- ஆர்சிபி

    நிகில் நாயக் - ரூ.20 லட்சம் - கொல்கத்தா

    ஷாபாஸ் அகமெட் - ரூ.20 லட்சம் - ஆர்சிபி

    லலித் யாதவ் - ரூ.20 லட்சம்- டெல்லி கேப்பிடல்ஸ்

    ஆண்ட்ரூ டை - ரூ.2 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்

    3ம் முறை டேல் ஸ்டெய்ன் - ஆர்சிபி அணி ஏலம்- ரூ.2 கோடி

    2-ம் முறை மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரூ.4.80 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் ஏலம் எடுத்தது

    கொலின் மன்ரோ, பென் கட்டிங் 2ம் முறையும் அதிர்ஷ்டம் இல்லை

    துஷார் தேஷ்பாண்டே- ரூ.20 லட்சம்- டெல்லி கேப்பிடல்ஸ்

    இளம் தமிழ்நாடு வீரர் சாய் கிஷோருக்கு வாய்ப்பு: சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது

    20:32 (IST)19 Dec 2019

    ஜேசன் ஹோல்டர் - UNSOLD

    ஆஸி. வீரர் கேன் ரிச்சர்ட்ஸன் - ரூ.4 கோடி- ஆர்சிபி அணி ஏலம் எடுத்தது.

    ஆஸி. வீரர் ஷான் அபாட், நியூஸி. வீரர் மேட் ஹென்றி - விற்கவில்லை

    இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான் - ரூ. 3 கோடி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

    மே.இ. கேப்டன் ஜேசன் ஹோல்டர் - அடிப்படை விலை ரூ.75 லட்சம் விற்கவில்லை

    சாம் கரன் சகோதரர் டாம் கரன் விற்கவில்லை

    இங்கிலாந்து டி20, டி20 அதிரடி வீரர் டாம் பேண்டன் - கேகேஆர்- ரூ.1 கோடி

    உ.பி. வீரர் மோசின் கான் - ரூ.20 லட்சம்- மும்பை இண்டியன்ஸ்

    ஜோஷ் பிலிப்ஸ் - ஆர்சிபி - ரூ.20 லட்சம்

    மும்பை ஆல்ரவுண்டர் ஷாம்ஸ் முலானி விற்கவில்லை.

    கர்நாடகா லெக்ஸ்பின்னர் பிரவீண் துபே - விற்கவில்லை.

    ஹைதரபாத்தின் பி.சந்தீப் ரூ.20 லட்சம்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலம் எடுத்தது

    ஆயுஷ் பதோனி விற்கப்படவில்லை

    20:31 (IST)19 Dec 2019

    மோஹித் சர்மா - ரூ.50 லட்சம்

    தமிழக வீரர் ஷாரூக் கான் 2ம் முறையும் விற்பனை ஆகவில்லை.

    இரண்டாவது முறையும் தெ. ஆ.வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னுக்கு வாய்ப்பில்லை

    மோஹித் சர்மா - ரூ.50 லட்சத்திற்கு டெல்லி கேப்பிடல்ஸ் ஏலம் எடுத்தது

    சஞ்சய் யாதவ் - ரூ.20 லட்சம் - சன்ரைசர்ஸ்

    மே.இ.தீவுகளின் நோட்-புக் புகழ், விராட் கோலியை வீழ்த்தி சவால் விட்ட கேஸ்ரிக் வில்லியம்ஸ் விற்கப்படவில்லை

    ஜம்மு காஷ்மீர் வீரர் அப்துல் சமத் - ரூ.20 லட்சம் - சன் ரைசர்ஸ்

    தஜிந்தர் டில்லான் - ரூ.20 லட்சம்- கிங்ஸ் லெவன் பஞ்சாப்

    இன்னொரு அதிர்ச்சி: ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் விற்கவில்லை

    பிரவீண் தாம்பே - ரூ.20 லட்சம்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    ஆர்யன் ஜுயல், சுமித் குமார் விற்கவில்லை

    மே.இ.தீவுகளின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஒஷேன் தாமஸ் - ரூ.50 லட்சம் அடிப்படை விலை - விற்கவில்லை

    19:56 (IST)19 Dec 2019

    20 லட்சம் சீரிஸ்

    ஜோஸ்வா பிலிப்பை பெங்களூரு அணி ரூ . 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

    கிறிஸ் கீரினை கொல்கத்தா அணி ரூ. 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

    சந்தீப் பாவனகாவை சன் ரைசர்ஸ் அணி ரூ. 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

    19:05 (IST)19 Dec 2019

    ஷிம்ரன் ஹெட்மயர் - 7.75 கோடி

    நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில், கோலின் மன்ரோ, தென்னாப்பிரிக்காவின் கோலின் இன்கிராம், ஆண்டிலோ பிலாக்வாயோ, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கார்லஸ் பிராத்வெயிட், அல்ஜாரி ஜோசப், இந்தியாவின் ரிஷி தவன், பாரிந்தர் ஸ்ரன், ஆஸ்திரேலியாவின் பென் கட்டிங், இங்கிலாந்தின் மார்க் வுட் ஆகியோர் இன்று விலைபோகவில்லை.

    டேவிட் மில்லருக்கு இந்த ஏலத்தில் நல்ல விலை கிடைக்கவில்லை. ரூ.75 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணி அவரை வாங்கியுள்ளது.

    மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரர் எவின் லீவிஸை எந்த அணியும் வாங்கவில்லை. இந்திய அணியின் மனோஜ் திவாரியும் இந்த ஏலத்தில் விற்பனையாகவில்லை.

    ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா அணியுடன் கடுமையாகப் போட்டியிட்டு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் ஷிம்ரன் ஹெட்மயரை டெல்லி அணி வாங்கியுள்ளது. அவரது விலை ரூ.7.75 கோடி.

    19:04 (IST)19 Dec 2019

    ஜோஷ் ஹாசில்வுட் - 2 கோடி

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹாசில்வுட்டை ரூ.2 கோடிக்கு வாங்கியது சென்னை அணி.

    வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான் விலைபோகவில்லை. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவும் விலைபோகவில்லை.

    நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீசம் ரூ.50 லட்சத்துக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய ஆல்ரவுடண்டர் மிட்செல் மார்ஷை வாங்கியது ஹைதராபாத் அணி. அவரது விலை ரூ.2 கோடி.

    சவுரப் திவாரியை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு வாங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ்.

    18:50 (IST)19 Dec 2019

    மிட்செல் மார்ஷ் - 2 கோடி

    ஜேம்ஸ் நீஷம்- ரூ.50 லட்சம் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

    அல்ஜாரி ஜோசப், மார்க் உட், பாரிந்தர் ஸரண் - விற்கவில்லை

    ஆண்டில் பெலுக்வயோ, கொலின் மன்ரோ -விற்கவில்லை

    மிட்செல் மார்ஷ் ரூ.2 கோடி - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

    அதிர்ச்சி: மார்கஸ் ஸ்டாய்னிஸ் விற்கவில்லை

    கொலின் இங்ரம், மார்டின் கப்தில், கார்லோஸ் பிராத்வெய்ட் விற்கவில்லை

    18:15 (IST)19 Dec 2019

    பிரியம் கார்க் - ரூ.1.90 கோடி

    அங்குஷ் பெய்ன்ஸ், விஷ்ணு வினோத்- விற்கவில்லை

    கேதார் தேவ்தார், கே.எஸ்.பரத், பிரப்சிம்ரன் சிங் - விற்கவில்லை

    அனுஜ் ராவத் - ரூ.80 லட்சம்- ராஜஸ்தான் ராயல்ஸ்

    தமிழ்நாடு பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷாரூக்கான் அடிப்படை விலை ரூ.20 லட்சம்: யாரும் ஏலம் எடுக்கவில்லை

    டேனியல் சாம்ஸ், பவன் தேஷ்பாண்டே விற்கப்படவில்லை

    தெருவில் பானிபூரி விற்று டெண்ட்டில் தங்கி ஆடும் அண்டர் 19 வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ரூ.2.40 கோடிக்கு ராஜஸ்தானால் ஏலம் எடுக்கப்பட்டார்.

    வருண் சக்ரவர்த்தி - ரூ.4 கோடி - கொல்கத்தா

    தீபக் ஹுடா - ரூ.50 லட்சம் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

    பிரியம் கார்க் - ரூ.1.90 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    விராட் சிங் - ரூ.1.90 கோடி- சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

    ராகுல் திரிபாதி - கொல்கத்தா - ரூ.60 லட்சம்

    மனோஜ் கல்ரா, ரோஹன் காதம், ஹர்பிரீத் பாட்டியா - விற்கப்படவில்லை

    ஆப்கான் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் ஜாகிர் கான் அடிப்படை விலை ரூ.50 லட்சம் விற்கப்படவில்லை

    18:13 (IST)19 Dec 2019

    கார்த்திக் தியாகி - 1.30 கோடி

    எம்.சித்தார்த் - ரூ.20 லட்சம்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    கே.சி.கரியப்பா விற்கப்படவில்லை, மிதுன் சுதேசன் விற்கப்படவில்லை.

    ஹோபார்ட் ஹரிகேன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ரைலி மெரிடித் ரூ.40 லட்சம் விற்கவில்லை

    இஷான் போரெல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ரூ.20 லட்சம்

    இந்திய யு-19 கார்த்திக் தியாகி அடிப்படை விலை ரூ.20 லட்சம் ஆனால் ரூ.1.30 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்தது

    குல்வந்த் கேஜ்ரோலியா, துஷார் தேஷ்பாண்டே- விற்கவில்லை

    இந்திய யு-19 இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங் அடிப்படை விலை ரூ20 லட்சம். அந்த விலைக்கே ராஜஸ்தான் எடுத்தது

    18:03 (IST)19 Dec 2019

    விராட் சிங் - 1.90 கோடி

    இந்திய வீரர் விராட் சிங்கை ரூ.1.90 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

    17:45 (IST)19 Dec 2019

    வருண் சக்கரவர்த்தி - நாலு கோடிப்பு...

    தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை நான்கு கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    17:39 (IST)19 Dec 2019

    ஆடம் ஸம்ப்பா - UNSOLD

    இஷ் சோதி, ஹெய்டன் வால்ஷ், ஆடம் ஸம்ப்பா விற்கப்படவில்லை. 

    17:20 (IST)19 Dec 2019

    பியூஷ் சாவ்லா - 6.75 கோடி

    பல்லாயிரம் ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வந்த பியூஷ் சாவ்லாவை ரூ.6.75 கோடிக்கு வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

    17:17 (IST)19 Dec 2019

    ஷெல்டன் காட்ரெல் - 8.5 கோடி

    மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் (ரூ.8.5 கோடி) கிங்கிஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார்.

    17:08 (IST)19 Dec 2019

    கோல்டர் நைல் - 8 கோடி

    சென்னையுடனான கடுமையான போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நேதன் கோல்டர் நைல்-லை ரூ.8 கோடிக்கு வாங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியுள்ள ஜெய்தேவ் உனட்கட்டின் விலை ரூ.3 கோடி.

    ஏலத்தில் விற்பனையாகாத வீரர்கள் - நமன் ஓஜா, குசல் பெரேரா, ஷாய் ஹோப், டேல் ஸ்டெய்ன், மோஹித் ஷர்மா, ஆண்ட்ரூ டய், டிம் சவுதி.

    17:06 (IST)19 Dec 2019

    அலெக்ஸ் கேரி - 2.4 கோடி

    ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியின் ஏல விலை ரூ.2.4 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அவரை வாங்கியுள்ளது.

    17:05 (IST)19 Dec 2019

    முஷ்பிகுர் ரஹிம் - UNSOLD

    தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் கிளாசினையும், வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமையும் எந்த அணியும் வாங்கவில்லை.

    17:05 (IST)19 Dec 2019

    ஸ்டூவர்ட் பின்னி - UNSOLD

    இந்திய ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியை எந்த அணியும் வாங்கவில்லை.

    17:04 (IST)19 Dec 2019

    சாம் கர்ரன் - 5.50 கோடி

    இங்கிலாந்தின் இளம் ஆல்ரவுண்டர் சாம் கரனை ரூ.5.50 கோடிக்கு சென்னை அணி வாங்கியுள்ளது. சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் முதல் வீரர் இவர்தான்.

    17:04 (IST)19 Dec 2019

    பேட் கம்மின்ஸ் - 15.50 கோடி

    ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸை ரூ.15.50 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.

    17:04 (IST)19 Dec 2019

    கிறிஸ் வோக்ஸ் - 1.5 கோடி

    ரூ.1.5 கோடி விலைக்கு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸைக் கைப்பற்றியுள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

    17:03 (IST)19 Dec 2019

    கிளென் மேக்ஸ்வெல் - 10.75 கோடி

    ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல்லை ரூ.10.75 கோடிக்கு வாங்கியுள்ளது கிங்கிஸ் லெவன் பஞ்சாப்.

    17:03 (IST)19 Dec 2019

    ஆரோன் பின்ச் - 4.4 கோடி

    ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்சை பெங்களூரு அணி ரூ.4.4 கோடிக்கு வாங்கியுள்ளது.

    17:03 (IST)19 Dec 2019

    ஜேசன் ராய் - 1.50 கோடி

    இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் ரூ.1.50 கோடி விலைக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியுள்ளது.

    17:03 (IST)19 Dec 2019

    அன்சோல்ட் புஜாரா

    ஹனுமா விஹாரிக்கு ரூ.50 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டது. அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. புஜாராவும் (ரூ.50 லட்சம்) விற்பனையாகவில்லை.

    17:02 (IST)19 Dec 2019

    ராபின் உத்தப்பா - 3 கோடி

    ராபின் உத்தப்பாவை ரூ.3 கோடி விலைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. அவரது அடிப்படை விலை ரூ.1.50 கோடி.

    17:02 (IST)19 Dec 2019

    மோர்கன் - 5.25 கோடி

    ரூ.1.50 கோடி விலைக்கு இங்கிலாந்து கேப்டன் மோர்கனை வாங்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரூ.5.25 கோடி விலைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது.

    17:01 (IST)19 Dec 2019

    கிறிஸ் லின் - 2 கோடி

    முதல் ஆளாக ஆஸ்திரேலிய அணியின் கிறிஸ் லின் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆரம்ப விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது.

    Ipl Auction
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment