Advertisment

திருப்புமுனையை ஏற்படுத்திய சாஹல்: ஐதராபாத்தை வென்ற பெங்களூரு அணி!

யுஸ்வேந்திர சாஹலின் இரண்டு பந்து வீச்சுகள் போட்டியின் ஸ்கிரிப்ட் மற்றும் விதியை மாற்றின.

author-image
WebDesk
New Update
royal challengers bangalore vs kolkata knight riders rcb vs kkr

royal challengers bangalore vs kolkata knight riders rcb vs kkr

IPL 2020: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான இந்தியன் பிரீமியர் லீக் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது.  ஜானி பேர்ஸ்டோவ் 164 இன் போதிய இலக்கை நோக்கி செல்லும் போது ஒரு வழக்கமான தோல்வி ஏற்பட்டது. ஆனால் யுஸ்வேந்திர சாஹலின் இரண்டு பந்து வீச்சுகள் போட்டியின் ஸ்கிரிப்ட் மற்றும் விதியை மாற்றின, இதனால் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.

Advertisment

Oppo F17: பவர்ஃபுல் கேமரா, பக்காவான பேட்டரி… இதைவிட வேற என்ன வேண்டும்?

இந்த போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் பிரியம் கார்க் அறிமுக வீரராக இடம் பிடித்தார். பெங்களூரு அணியில் பார்த்தீவ் பட்டேலுக்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக ஜோஷ் பிலிப் சேர்க்கப்பட்டார்.

முதலில் பேட் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்சுடன் இணைந்து களம் இறங்கினார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார்கள். நடராஜன் வீசிய ஒரு ஓவரில் தேவ்தத் படிக்கல் 3 பவுண்டரிகள் விளாசினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்) அந்த அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் வீசிய ஓவர் ஒன்றில் ஆரோன் பிஞ்ச் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சருக்கு பந்தை விரட்டியடித்தார்.

அணியின் ஸ்கோர் 11 ஓவர்களில் 90 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. தேவ்தத் படிக்கல் 56 ரன்னில் (42 பந்து, 8 பவுண்டரி) விஜய்சங்கர் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்த ஓவரில் ஆரோன் பிஞ்ச் 29 ரன்னில் (27 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அபிஷேக் ஷர்மா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். இதனை தொடர்ந்து கேப்டன் விராட்கோலி 13 பந்தில் 14 ரன் எடுத்த நிலையில் நடராஜன் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனை அடுத்து ஷிவம் துபே, டிவில்லியர்சுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் (51 ரன்கள், 30 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி ஓவரில் ‘ரன்-அவுட்’ ஆனார். அதே ஓவரில் கடைசி பந்தில் ஷிவம் துபே (7 ரன்) ‘ரன்-அவுட்’ ஆகி பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. ஜோஷ் பிலிப் 1 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் டேவிட் வார்னர் 2-வது ஓவரில் 6 ரன்னில் ‘ரன்-அவுட்’ ஆகினார். இதனை அடுத்து மனிஷ் பாண்டே, ஜானி பேர்ஸ்டோவுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடியது. மனிஷ் பாண்டே 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ 61 ரன்னில் (43 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் போல்டு ஆனார். அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. அடுத்து வந்த விஜய் சங்கர் விக்கெட்டை சாஹல் முதல் பந்திலேயே கைப்பற்றினார். பிரியம் கார்க் 12 ரன்னிலும், அபிஷேக் வர்மா 7 ரன்னிலும், புவனேஷ்வர்குமார் ரன் எதுவும் எடுக்காமலும், ரஷித் கான் 6 ரன்னிலும், பவுலிங்கின் போது அடைந்த காயத்தை பொருட்படுத்தாமல் இறங்கிய மிட்செல் மார்ஷ் ரன் எதுவும் எடுக்காமலும், சந்தீப் ஷர்மா 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனால் 19.4 ஓவர்களில் ஐதராபாத் அணி 153 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. ஆகையால் பெங்களூரு அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமான யுஸ்வேந்திர சாஹலை ட்விட்டர்வாசிகள் வாழ்த்தி வருகின்றனர்.

8 ராஜ்யசபா எம்.பி.க்கள் சஸ்பெண்ட்; கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு

ஸ்கோர் விபரம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 163/5 (டி பாடிக்கல் 56, ஏபி டிவில்லியர்ஸ் 51, சர்மா 1/16)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் (ஜே பேர்ஸ்டோ 61, எம் பாண்டே 34; ஒய் சாஹல் 3/18, எஸ். டியூப் 2/15, என் சைனி 2/25) 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Ipl Rcb Vs Srh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment