Advertisment

சி.எஸ்.கே.- டெல்லி மோதல்: முக்கிய பலப்பரீட்சை

CSK VS DD, IPL Today Match: 2-வது ஆட்டத்தில் சி.எஸ்.கே- டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டமும் சி.எஸ்.கே அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

author-image
WebDesk
New Update
சி.எஸ்.கே.- டெல்லி மோதல்: முக்கிய பலப்பரீட்சை

IPL 2020 today match, csk vs dc: ஐபிஎல் இன்றைய 2-வது ஆட்டத்தில் சி.எஸ்.கே- டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டமும் சி.எஸ்.கே அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

Advertisment

சி.எஸ்.கே 8 ஆட்டங்களில் 3-ல் மட்டுமே வென்றிருக்கிறது. கடைசியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டோனி எடுத்த அனைத்து முடிவுகளும் சாதகமாக அமைந்தன. தொடக்க வீரராக களம் இறக்கப்பட்ட ஆல்ரவுண்டர் சாம் குர்ரன், அதிரடியாக ரன்களை திரட்டிக் கொடுத்தார்.

இறுதி கட்டத்தில் வழக்கம்போல ஜடேஜா அதிரடி காட்டினார். ஜடேஜா, கரன் சர்மா, பியூஷ் சாவ்லா என 3 ஸ்பின்னர்களுடன் அணியை இறக்கினார் டோனி. அந்த ஆட்டத்தில் சாவ்லாவுக்கு 16-வது ஓவரை மட்டுமே வீசும் வாய்ப்பு கிடைத்தது. எனினும் சார்ஜா விக்கெட் ‘மெதுவானதாக’ மாறி வருவதால் அதே 3 ஸ்பின்னர்களுடன் டோனி களம் காணவே வாய்ப்பு அதிகம்.

டெல்லி அணியின் பந்து வீச்சு ரபேடா, அஸ்வின், அக்ஸர் படேல் உள்ளிட்டவர்களுடன் வலுவாகவே இருக்கிறது. 156 கிமீ வேகப் பந்து வீச்சை பதிவு செய்திருக்கும் அன்ரிச் நோர்ட்ஜே-வும் மிரட்டுகிறார். பேட்டிங்கில் பிரித்வி ஷா, ஷிகர் தவான், கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

ஷ்ரேயாஸ் அய்யர் இடது தோள் பகுதி காயத்தால் அவதிப்படுகிறார். ஏற்கனவே ரிஷாப் பாண்ட் காயத்தால் வெளியே அமர்ந்திருக்கும் சூழலில் அய்யரும் வர முடியாத சூழல் ஏற்பட்டால் வலிமையான பேட்டிங் வரிசையை மட்டுமல்ல, கூலான கேப்டன்ஷிப்பையும் டெல்லி இழக்கும். அந்த துரதிருஷ்டம் இல்லாதபட்சத்தில் டெல்லி வலிமையான அணியே!

சென்னை அணி வலுவான போட்டியைக் கொடுத்தால் இன்றைய ஆட்டம் சுவாரசியமாக இருக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment