Advertisment

IPL 2021 : சரிந்து நிமிர்ந்த சிஎஸ்கே : 20 ரன்களில் மும்பையை வீழ்த்தியது

IPL 2021 MI vs CSK Live Cricket Score Updates : 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
IPL 2021 : சரிந்து நிமிர்ந்த சிஎஸ்கே : 20 ரன்களில் மும்பையை வீழ்த்தியது

IPL 2021, CSK vs MI

IPL 2021 , Mumbai Indians vs Chennai Super Kings Live Score : இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பாக நடத்தப்பட்டு வரும் இந்த டி20 தொடர் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 14-வது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி இந்தியாவில் தொடங்கியது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்களில் மட்டும் நடத்தப்பட்ட இந்த போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Advertisment

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டித்தொடரில் 29- ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த மே மாதம் 2-ந் தேதியுடன் தொடர் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் தங்களது நாடுகளுக்கு திரும்பிய நிலையில், மீதமுள்ள 31 போட்டிகள் வரும் செப்டம்பர் 19-ந் தேதி (இன்று) முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

அதன்படி இன்று தொடங்கும் 14-வது ஐபிஎல் சீசனின் 2-ம் கட்ட ஆட்டத்தின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இதுவரை நடந்த அனைத்து தொடர்களிலும் ப்ளேஅப் தொடருக்கு தகுதி பெற்ற பலம் வாய்ந்த சென்னை அணி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 13-வது சீசனில் 7-வது இடம் பிடித்து கடும் விமர்சனங்களை சந்தித்தது.

ஆனால் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 14-வது சீசனில் அடியெடுத்து வைத்த சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. மீதமிருக்கும் 7 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்றாலே ப்ளே அப் சுற்றை உறுதி செய்துவிடலாம் என்ற நிலையில் சென்னை அணி இன்று களமிறங்குகிறது.

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கடந்த இரு சீசனில் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி ஹாட்ரிக் சாம்பியன் ஆக முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்விரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி நிர்ணையித்த 219 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்ற பெற்றது. கடைசி கட்டத்தில் மும்பை அணியின் பொல்லார்ட் அதிரடியாக ஆடி வெற்றி பெறவைத்தார். இந்த வெற்றி கொடுத்த உத்வேகத்துடன் மும்பை அணி இன்று களமிறங்கும். முதல்போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்க சென்னை அணி முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.  

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • 23:23 (IST) 19 Sep 2021
    பரபரப்பான ஆட்டம் : மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை

    கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் பாதியில் நிறுத்தப்பட்ட 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்று வரும் 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகினறன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதன்படி முதலில் களமிறங்கிய அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்வாட்-ன் ஆட்டத்தில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்த்து. ருத்துராஜ் 88 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த பிரவோ 23 ரன்களிலும், ஜடேஜா 26 ரன்களிலும் ஆட்டம்மிழந்தனர். மும்பை அணி தரப்பில் பும்ரா, போல்ட், மிலனோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனைத் தொடர்ந்து 157 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி சீரான் இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த்து. டிகாக் 17 ரன்களிலும், அறிமுக வீரர் அன்மோல்பிரீத் 16 ரன்களிலும், சூர்ய குமார் யாதவ் 3 ரன்களிலும், இஷான் கிஷான் 11 ரன்களிலும், பொல்லார்ட் 15 ரன்களிலும் குணால் பாண்டியா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தனி ஆளாக போராடிய சவுரப் திவாரி அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். கடைசி 6 பந்துகளில் 24 ரன்கள் தேவை எள்ற நிலையில், கடைசி ஓவரை வீசிய பிராவோ 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றி பெற வைத்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. சவுரப் திவாரி 50 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.

    இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் பிராவோ 3 விக்கெட்டுகளும், சாஹர் 2 விக்கெட்டுகளும், தாகூர், ஹாசில்வுட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 6-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

  • 23:22 (IST) 19 Sep 2021

  • 23:00 (IST) 19 Sep 2021
    ஆர்சிபி கேப்டன் பதவியை ராஜினாமா செய்யும் விராட்கோலி

    உலககோப்பை டி20 தொடருக்கு பின் இந்தியாவின் டி20 அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள இந்திய அணி கேப்டன் விராட்கோலி, நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் தொடருடன் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

  • 22:43 (IST) 19 Sep 2021
    14 ஓவர்களில் மும்பை அணி 91/5

    14 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. சவுரப் திவாரி 26 ரன்களுடனும், குணால் பாண்டியா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பொல்லார்ட் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மும்பை அணியின் வெற்றிக்கு இன்னும் 36 பந்துகளில் 66 ரன்கள் தேவை

  • 22:33 (IST) 19 Sep 2021

  • 22:23 (IST) 19 Sep 2021
    4 விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை அணி

    ஐபிஎல் தொடரில் சென்னை மும்பை அணிகள் மோதி வரும் 30-வது லீக் போட்டியில் சென்னை அணி நிர்ணையித்த 157 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி சற்று முன்வரை 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் குவித்துள்ளது.

  • 22:13 (IST) 19 Sep 2021
    மும்பை அணி 8 ஓவர்களில் 48/3

    சென்னை அணிக்கு எதிராக 157 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள மும்பை அணி சற்று முன்வரை 8 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்து்ளளது. சவுரப் திவாரி 8 ரன்களுடனும், இஷான் கிஷான் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

  • 22:05 (IST) 19 Sep 2021
    மும்பை அணி 6 ஓவர்களில் 41/3

    சென்னை அணிக்கு எதிராக 157 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள மும்பை அணி 6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 41ரன்கள் எடுத்துள்ளது. அன்மோல்ப்ரீத் 16 ரன்களிலும், சூர்யகுமார் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்

  • 22:05 (IST) 19 Sep 2021
    மும்பை அணி 4 ஓவர்களில் 41/3

    சென்னை அணிக்கு எதிராக 157 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள மும்பை அணி 6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 41ரன்கள் எடுத்துள்ளது. அன்மோல்ப்ரீத் 16 ரன்களிலும், சூர்யகுமார் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்

  • 21:54 (IST) 19 Sep 2021
    மும்பை அணி 6 ஓவர்களில் 41/3

    சென்னை அணிக்கு எதிராக 157 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள மும்பை அணி 6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 41ரன்கள் எடுத்துள்ளது. அன்மோல்ப்ரீத் 16 ரன்களிலும், சூர்யகுமார் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்

  • 21:48 (IST) 19 Sep 2021
    குயிண்டன் டிகாக் 17 ரன்களில் அவுட்

    சென்னை அணி நிர்ணையித்த 157 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள மும்பை அணி சற்று முன்வரை 2.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் குவித்துள்ளது. குயிண்டன் டிகாக் 12 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 17 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

  • 21:36 (IST) 19 Sep 2021
    அமீரகத்தில் தொடர்ச்சியாக 4-வது அரைசதம் கடந்த ரிதுராஜ்

    மும்பை அணிக்கு எதிராக அரைசதம் கடந்த ரிதுராஜ் கெய்க்வாட் அமீகரத்த்தில் தொடர்ச்சியாக தனது 4-வது அரைசதத்தை பதிவு செய்துள்ளார். ஏற்கனவே 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கடைசி 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக அரைசதம் கடந்தது குறிப்பிடத்தக்கது.

  • 21:25 (IST) 19 Sep 2021
    ருத்துராஜ் அபாரம் : மும்பை அணிக்கு 157 ரன்கள் இலக்கு

    கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் பாதியில் நிறுத்தப்பட்ட 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்று வரும் 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகினறன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி மும்பை வீரர்களின் அபார பந்துவீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பாப் டூபிளெசிஸ், மொயின் அலி ஆகிய இருவரும் டக் அவுட்டில் வெளியேறிய நிலையில், காயம் காணமாக ராயுடு ரிட்யர் ஹிட் மூலம் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய நட்சத்திர ஆட்டகாரர் சுரேஷ் ரெய்னா ஒரு பவுண்டரியுடன் 4 ரன்களிலும், கேப்டன் தோனி 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 24 ரன்களுக்கு சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    இதனையடுத்து 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து கெய்க்வாட் ஜடேஜா ஜோ அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் இறங்கியது. தொடர்ந்து நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 81 ரன்கள் சேர்த்த நிலையில், 33 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த ஜடேஜா ஆட்டமிழந்தார். இதற்கிடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய பிராவோ அதிரடியாக 3 சிக்சர்கள் விளாசி அமக்களப்படுத்தினார்.

    ஆனால் 8 பந்துகளை சந்தித்த அவர் 23 ரன்கள் குவித்து ஆட்டமழந்த நிலையில், கடைசி பந்தில் சிக்சர் பறக்கவிட்ட ருத்துராஜ் சென்னை அணி கௌரவமான ரன்களை எட்ட உதவினார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்துள்ளது. 58 பந்துகளை சந்தித்த ருத்துராஜ் 9 பவுண்டரி 4 சிக்சருடன் 88 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். மும்பை அணி தரப்பில், போல்ட், மிலனே, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 157 ரன்கள் இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.

  • 21:13 (IST) 19 Sep 2021
    பிராவோ அதிரடி 19 ஓவர்களில் சென்னை அணி 141/5

    மும்பை அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்துள்ளர். போல்ட் வீசிய 19-வது ஓவரில் 3 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் சென்னை அணி 24 ரன்கள் திட்டியுள்ளது. பிராவோ 8 பந்துகளில் 3 சிக்சருடன் 23 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

  • 21:01 (IST) 19 Sep 2021
    ருத்துராஜ் அரைசதம்... ஜடேஜா அவுட்

    மும்பை அணிக்கு எதிரான பேட்டிங் செய்து வரும் சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், நிதாமாக விளையாடி வரும் தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்துள்ளார். தற்போது அவர் 47 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 63 ரன்கள் குவித்துள்ளார்.

    அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஜடேஜா 33 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சற்று முன்வரை சென்னை அணி 16.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் குவித்துள்ளது.

  • 20:52 (IST) 19 Sep 2021
    15 ஓவர்களில் சென்னை அணி 87/4

    மும்பை அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் சென்னை அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 25 ரன்களுடனும், கெய்க்வாட் 46 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

  • 20:38 (IST) 19 Sep 2021
    12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள்

    மும்பை அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் சென்னை அணி 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. கெய்க்வாட் 37 ரன்களுடனும், ஜடேஜா15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

  • 20:29 (IST) 19 Sep 2021
    முதல் 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 44/4

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், முதல் 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.

  • 20:11 (IST) 19 Sep 2021
    சரிவை நோக்கி சென்னை : 6 ஓவர்களில் 24/4

    மும்பை அணிக்கு எதிராக சரிவை சந்தித்து வரும் சென்னை அணியில் கேப்டன் தோனி 3 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இதனால் சென்னை அணி 6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.

  • 20:01 (IST) 19 Sep 2021
    5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 18/3

    டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் சென்னை அணி சற்று முன்வரை 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்துள்ளது.

  • 19:56 (IST) 19 Sep 2021
    4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 11/3

    மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் சென்னை அணி சற்று முன்வரை 4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.

  • 19:52 (IST) 19 Sep 2021
    ரெய்னா அவுட் : சென்னை அணி போராட்டம்

    மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அம்பத்தி ராயுடு காயம் காரணமாக ரிட்டையர் ஹிட் மூலம் வெளியேறினார். இதனையடுத்து 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ஒரு பவுண்டரி அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். 3.1 ஓவர்களில் சென்னை அணி 7 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

  • 19:50 (IST) 19 Sep 2021
    அம்பத்தி ராயுடு காயம்

    மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அம்பத்தி ராயுடு காயம் காரணமாக ரிட்டையர் ஹிட் மூலம் வெளியேறினார்.

  • 19:44 (IST) 19 Sep 2021
    2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3/2

    மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பாப் டூபிளெசிஸ் 3 பந்துகளில் டக் அவுட் ஆன நிலையில், அடுத்து களமிறங்கிய மொயின் அலி 3 பந்துகளில் டக்அவுட் ஆனார். தற்போது சென்னை அணி 2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 3 ரன்கள் எடுத்துள்ளது.

  • 19:42 (IST) 19 Sep 2021
    சென்னை அணி 2 ஓவர்களில் 3/2

    மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பாப் டூபிளெசிஸ் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய மொயின் அலி 3 பந்துகளில் டக் அவுட் ஆனார்.

  • 19:39 (IST) 19 Sep 2021
    பாப் டூபிளெசிஸ் அவுட்

    மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பாப் டூபிளெசிஸ் 3 பந்துகளை சந்தித்த நிலையில் போல்ட் பந்துவீச்சில் மிலனேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்

  • 19:38 (IST) 19 Sep 2021
    பாப் டூபிளெசிஸ் அவுட்

    மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பாப் டூபிளெசிஸ் 3 பந்துகளை சந்தித்த நிலையில் போல்ட் பந்துவீச்சில் மிலனேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்

  • 19:24 (IST) 19 Sep 2021
    சாம் கரனுக்கு பதிலாக ஜோஷ் ஹாசில்வுட்

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதில் சென்னையில் ஆடும் லெவன் அணியின் சாம் கரன் நீக்கப்பட்டு ஜோஷ் ஹாசில்வுட் களமிறங்கவுள்ளார்.

  • 19:21 (IST) 19 Sep 2021
    ரோகித் விலகல்

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கீரன் பொல்லார்ட் கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். மேலும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக அன்மோல்பிரீத் சிங் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார்.

  • 19:18 (IST) 19 Sep 2021
    சென்னை - மும்பை அணிகள் விபரம்

    மும்பை இந்தியன்ஸ்

    குயின்டன் டி காக் , இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், அன்மோல்பிரீத் சிங், கியரான் பொல்லார்ட் , சவுரப் திவாரி, க்ருனால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஃபாஃப் டு பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி , ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்

  • 19:15 (IST) 19 Sep 2021
    ஐபிஎல் 30-வது லீக் போட்டி : மும்பைக்கு எதிராக சென்னை பேட்டிங்

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

  • 19:03 (IST) 19 Sep 2021
    பும்ரா புதிய மைல்கல்

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் மும்பை அணிக்காக விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஐபிஎல் தொடரில் தனது 100-வது போட்டியில் களமிறங்குகிறார்.

  • 18:40 (IST) 19 Sep 2021
    ஐபிஎல் கிரிக்கெட் : சென்னை அணியில் பாப் டூபிளெசிஸ் சந்தேகம்

    சமீபத்தில் நிறைவடைந்த கரீபியன் பிரீமியர் எ20 கிரிக்கெட் தொடரில், காயமடைந்த பாப் டூபிளெசிஸ், கடைசி 3 போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் தற்போது அவர் சென்னை அணியுடன் இணைந்துள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து பரிசோதனைக்கு பின் அவர் களமிறங்குவாரா என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று சென்னை அணி தரப்பில் கூறப்பட்டது.

    தற்போது அவர் களமிறங்காத பட்சத்தில் தொடக்க வீரராக மொயின் அலி அல்லது ராபின் உத்தப்பா சென்னை அணியில் தனது அறிமுகப்போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆல்ரவுண்டர் செப்டம்பர் 15-ந் தேதி துபாய் வந்த நிலையில், அவர் 6 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருப்பதால் இந்த போட்டியில் அவர் களமறங்க வாய்பில்லை.

  • 17:33 (IST) 19 Sep 2021
    ஐபிஎல் ரிட்டன்ஸ் - நீங்கள் தயாரா?

    கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சி போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

    இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் தனது ட்விட்டர், நீங்கள் தயாரா... ஐபிஎல் கிரிக்கெட் ரிட்டன்ஸ். சிஎஸ்கே - எம்ஐ மோதலுக்கு தயாராகுங்கள் என்று பதிவிட்டுள்ளது.

Ipl Cricket Ipl News Ipl 2021 Live
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment