Advertisment

PBKS vs CSK Highlights: பேட்டிங், பந்து வீச்சில் அசத்திய சென்னைக்கு முதல் வெற்றி!

Chennai Super Kings VS Punjab Kings  Live updates: பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் பேட்டிங், பந்து வீச்சில் அசத்திய சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

author-image
WebDesk
New Update
IPL 2021 Tamil News: AR Rahman Dedicates Special Song to CSK Skipper MS Dhoni

CSK VS PBKS Live updates: டெல்லிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த சென்னை அணி, பஞ்சாப் அணிகெதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றிக் கணக்கை துவங்கும் முனைப்பில் உள்ளது. டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் கடந்து அசத்திய சுரேஷ் ரெய்னா, தனது ரன் வேட்டையை தொடர்வார் என நம்பலாம். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள கேப்டன் தோனி, புதிய யுத்திகளுடன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி சிறிது கவனம் செலுத்தினால் இன்றைய ஆட்டத்தில் தெறிக்க விட வாய்ப்புள்ளது.

Advertisment

தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணி, அதன் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வரிசையில் வலுவாக உள்ளது. ராஜஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் தீவிரமாக ரன் குவித்த அந்த அணி, இன்றைய ஆட்டத்திலும் ஆர்வம் காட்டும். அதோடு சென்னை அணியின் வெற்றிக்கு நிச்சம் முட்டுக்கட்டை போடும்.

வான்கடே மைதானத்தில் வெற்றி பெற குறைந்த பட்சம் 200 ரன்கள் அவசியமாகும். மேலும் பனிபொழிவின் காரணமாக முதலில் டாஸ் வெல்லும் அணி கண்டிப்பாக பந்து வீச்சை தேர்வு செய்யும். எனவே இன்றைய ஆட்டத்தில் சுவாரஷ்யத்திற்கு பஞ்சமிருக்காது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)



  • 22:54 (IST) 16 Apr 2021
    பேட்டிங், பந்து வீச்சில் அசத்திய சென்னைக்கு முதல் வெற்றி!

    பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் பேட்டிங், பந்து வீச்சில் அசத்திய சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த சென்னை அணி, துல்லியமாக பந்துகளை வீசி பஞ்சாப் அணியின் முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியது. சிறப்பாக பந்து வீசிய தீபக் சஹார் 4 விக்கெட்டுகளை கழட்டினார். தட்டு தடுமாறி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 106 ரன்களை சேர்த்து.

    120 பந்துகளில் 106 எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை துரத்திய சென்னை அணி, அதன் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை இழந்தது. இருப்பினும் களம் கண்ட மொயீன் அலி, மறுமுனையில் இருந்த டு பிளெசிசுடன் ஜோடி சேர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்தார். இந்த ஜோடி ஆட்டத்தால் தனது வலுவான நிலையில் வெளிப்படுத்தியது சென்னை அணி.

    31 பந்துகளில் 1 சிக்ஸர் 7 பவுண்டரிகளை சிதறவிட்ட மொயீன் அலி, பஞ்சாபின் முருகன் அஸ்வின் வீசிய பந்தில் ஷாருக்கான் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு ஆட்டமிழ்ந்தாலும், பின்னர் களமிறங்கிய சாம் கரனுடன் இணைந்த டு பிளசிஸ் இலக்கை எளிதில் எட்டிப்பிடத்தனர்.

    கடந்த சீசனில் நடந்த 2 லீக் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய பஞ்சாப் அணி, இந்த முறை தோல்வியுடன் திருமிப்பியுள்ளது. அசத்தலான ஆட்டத்தால் முதல் வெற்றியை சுவைத்துள்ள சென்னை அணி அட்டவணையில் தனது கணக்கை துவங்கியுள்ளது.



  • 22:13 (IST) 16 Apr 2021
    டு பிளெசிஸ் - மொயீன் அலி அசத்தல் பேட்டிங்; வலுவான நிலையில் சென்னை அணி!

    ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை இழந்திருந்தாலும், டு பிளெசிஸ், மொயீன் அலி அசத்தலான பேட்டிங்கால் வலுவான நிலையில் சென்னை அணி உள்ளது.



  • 22:12 (IST) 16 Apr 2021
    டு பிளெசிஸ் - மொயீன் அலி அசத்தல் பேட்டிங்; வலுவான நிலையில் சென்னை அணி!

    ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை இழந்திருந்தாலும், டு பிளெசிஸ், மொயீன் அலி அசத்தலான பேட்டிங்கால் வலுவான நிலையில் சென்னை அணி உள்ளது.



  • 22:12 (IST) 16 Apr 2021
    டு பிளெசிஸ் - மொயீன் அலி அசத்தல் பேட்டிங்; வலுவான நிலையில் சென்னை அணி!

    ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை இழந்திருந்தாலும், டு பிளெசிஸ், மொயீன் அலி அசத்தலான பேட்டிங்கால் வலுவான நிலையில் சென்னை அணி உள்ளது.



  • 21:39 (IST) 16 Apr 2021
    ருதுராஜ் கெய்க்வாட் அவுட்

    சென்னை அணி 5 ஓவர்களில் 24 ரன்கள் எடுத்துள்ள நிலையில், 15 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார்.



  • 21:35 (IST) 16 Apr 2021
    சென்னை அணி 4 ஓவர்களில் 22/0

    பஞ்சாப் அணிக்கு எதிராக 107 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள சென்னை அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்துள்ளது. டு பிளசிஸ் 13 பந்துகளில் 13 ரன்களும், கெய்க்வாட் 11 பந்துகளில் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • 21:03 (IST) 16 Apr 2021
    சென்னை அணிக்கு 107 ரன்கள் இலக்கு!

    சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ்க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது சென்னை அணி. அந்த அணியின் முன்னணி வீரர்களான மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, மற்றும் நிக்கோலஸ் பூரன் போன்றோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் தீபக் சஹார். கேப்டன் கே.எல்.ராகுலின் ரன் அவுட் அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. தொடர்ந்து களம் கண்ட தமிழக வீரர் ஷாருக் கான் 36 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை பறக்கவிட்டு 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழகவே, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 சேர்த்தது பஞ்சாப் அணி.

    120 பந்துகளில் 106 எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை துரத்த களமிறங்கவுள்ளது சென்னை அணி.



  • 21:01 (IST) 16 Apr 2021
    சென்னை அணிக்கு 107 ரன்கள் இலக்கு!

    சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ்க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது சென்னை அணி. அந்த அணியின் முன்னணி வீரர்களான மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, மற்றும் நிக்கோலஸ் பூரன் போன்றோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் தீபக் சஹார். கேப்டன் கே.எல்.ராகுலின் ரன் அவுட் அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. தொடர்ந்து களம் கண்ட தமிழக வீரர் ஷாருக் கான் 36 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை பறக்கவிட்டு 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழகவே, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 சேர்த்தது பஞ்சாப் அணி.

    120 பந்துகளில் 106 எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை துரத்த களமிறங்கவுள்ளது சென்னை அணி.



  • 20:25 (IST) 16 Apr 2021
    6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் பஞ்சாப் அணி நிதான ஆட்டம்!

    சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் அணி அதன் முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மேலும் களத்தில் உள்ள ஷாருக் கான் நிதான ஆட்டத்தைதொடர்ந்துள்ளார் .



  • 20:07 (IST) 16 Apr 2021
    தீபக் சஹாருக்கு அடுத்த விக்கெட்....!

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் தீபக் ஹூடாவின் விக்கெட்டை கழட்டி அசத்தியுள்ளார் தீபக் சஹார்



  • 20:00 (IST) 16 Apr 2021
    தீபக் சஹார் ஆன் ஃபயர்...!

    சென்னையின் தீபக் சஹார் வீசிய பந்தை சுழட்டி அடித்த தீபக் ஹூடா ஷார்துல் தாக்கூர் வசம் கேட்ச் கொடுத்தது, வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா போன்றோரின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டியுள்ளார் சஹார்.



  • 19:55 (IST) 16 Apr 2021
    சிக்ஸர் மன்னன் கெய்ல் அவுட்...!

    சென்னையின் தீபக் சஹார் வீசிய பந்தை கட்டை வைக்க முயன்ற சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் ஜடேஜா வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



  • 19:51 (IST) 16 Apr 2021
    கேப்டன் ராகுல் அவுட்...!

    தீபக் சஹார் வீசிய பந்தை சந்தித்த கிறிஸ் கெய்ல், ரன் ஓட முயன்று கேப்டன் ராகுலை அவுட் செய்துள்ளார்.



  • 19:37 (IST) 16 Apr 2021
    ஸ்டம்ப்பை சாய்த்த சஹார்...!

    டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வால் ஜோடியில், சென்னை அணியின் தீபக் சஹார் பந்துவீச்சில் மாயங்க் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.



  • 19:32 (IST) 16 Apr 2021
    களமிறங்கும் இரு அணி வீரர்களின் பட்டியல்

    பஞ்சாப் கிங்ஸ்

    கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்) மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், ஜெய் ரிச்சர்ட்சன், முருகன் அஸ்வின், ரிலே மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்) ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், டுவைன் பிராவோ, ஷார்துல் தாக்கூர், தீபக் சஹார்



  • 19:10 (IST) 16 Apr 2021
    டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு!

    சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது



  • 19:00 (IST) 16 Apr 2021
    கேப்டன் தோனிக்கு வாட்சன் வாழ்த்து...!

    200வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு முன்னாள் வீரர் வாட்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 18:08 (IST) 16 Apr 2021
    சென்னை சூப்பர் கிங்ஸ்- க்கு விசில் போடு...!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாடலுக்கு விசில் போடும் ரசிகர்கள்.



  • 18:05 (IST) 16 Apr 2021
    முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா.... பிரட்லீயுடன் இணைந்து பாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

    முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா பாடலை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீயுடன் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார்.



  • 18:01 (IST) 16 Apr 2021
    கே.எல்.ராகுலுக்கும் வான்கடேவுக்கும் உள்ள பந்தம்...!

    வான்கடே ஸ்டேடியத்தில் கடைசியாக நடந்த நான்கு டி 20 போட்டிகளில் கே.எல்.ராகுல் 91, 91, 100 *, 94 ஆகிய ரன்களை சேர்த்தார். மேலும் இங்கு நடந்த ஏழு டி 20 இன்னிங்சில் 428 ரன்களை குவித்த ராகுலின் சராசரி 71.33 ஆகவும், ஸ்ட்ரைக் வீதம் 152.85 ஆகவும் உள்ளது.



  • 16:54 (IST) 16 Apr 2021
    நேருக்கு நேர்....!

    இந்த இரு அணிகள் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் சென்னையும், 8-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. கடந்த சீசனில் நடந்த 2 லீக் ஆட்டத்திலும் பஞ்சாப்பை சென்னை அணி துவம்சம் செய்தது நினைவு கூரத்தக்கது.



  • 16:53 (IST) 16 Apr 2021
    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு

    சென்னை: பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது உத்தப்பா, ரெய்னா, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி அல்லது மிட்செல் சான்ட்னெர், தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், வெய்ன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர்.

    பஞ்சாப்: லோகேஷ் ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், கெய்ல், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக்கான், முருகன் அஸ்வின் அல்லது ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ஜய் ரிச்சர்ட்சன், ரிலி மெரிடித், அர்ஷ்தீப் சிங்.



  • 16:28 (IST) 16 Apr 2021
    இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்

    பஞ்சாப் கிங்ஸ் அணி

    கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், ஜெய் ரிச்சர்ட்சன், முருகன் அஸ்வின், ரிலே மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மாண்டீப் சிங் .

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

    ருதுராஜ் கெய்க்வாட், ஃபஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், டுவைன் பிராவோ, ஷார்துல் தாகூர், தீபக் சாஹர், ராபின் உத்தப்பா, கர்ன் சர்மா, இம்ரான் தாஹிர், கிருஷ்ணப்ப கவுதம், மிட்செல் சாண்ட்னர், ரவிஸ்ரினிவாசன் சாய் கிஷோர், ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், கே.எம் ஆசிப், ஹரிஷங்கர் ரெட்டி, பகத் வர்மா



Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Csk Vs Pbks Ipl 2021 Star Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment