Advertisment

ஐ.பி.எல். 2021: டெல்லியிடம் பணிந்த ஐதராபாத்; 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

IPL 2021, DC vs SRH Live Score Streaming Online, Live score updates and match highlights in tamil: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

author-image
WebDesk
New Update
IPL 2021 Tamil News: DC vs SRH Live score updates and match Highlights

DC vs SRH Live score updates and match Highlights in tamil: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று புதன்கிழமை நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் இளம் வீரர் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Advertisment

இதன்படி அந்த அணியின் டேவிட் வார்னர் விருத்திமான் சாஹா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியது. போட்டியை வென்று ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்த அணி அதிரடியாக ரன் குவிக்கும் என எதிர்பார்க்கையில், தொடக்க வீரரும் அணியின் முன்னாள் கேப்டனுமான டேவிட் வார்னர் பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.

இவருடன் மறுமுனையில் இருந்த விருத்திமான் சாஹா 1 சிக்ஸர் 2 பவுண்டரிகளை சிதறவிட்டு 18 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பொறுப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் களம் கண்ட கேப்டன் கேன் வில்லியம்சன் 18 ரன்னுடன் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மணீஷ் பாண்டே 17 ரன்னுடனும், அதிரடி வீரர் கேதர் ஜாதவ் 3 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

தலா 2 பவுண்டரி 1 சிக்ஸரை அடித்த அப்துல் சமத், ரஷீத் கான் 28 மற்றும் 22 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தனர். (இந்த இரு வீரர்கள் அடித்த ரன்களே அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர்) இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 135 ரன்கள் மட்டுமே சேர்த்தது. டெல்லி அணி சார்பில் பந்து வீச்சில் மிரட்டிய ரபாடா 3 விக்கெட்டுகளையும், நார்ட்ஜே மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

தொடர்ந்து 136 ரன்கள் கொண்ட இலக்கை துரத்த களம் கண்ட டெல்லி அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் - பிரித்வி ஷா ஜோடியில் 2 பவுண்டரிகளை விரட்டிய பிரித்வி ஷா 11 ரன்கள் சேர்த்த நிலையில் கலீல் அகமது வேகத்தில் சிக்கி ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் இருந்த ஷிகர் தவான் தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்தார். 1 சிக்ஸர் 6 பவுண்டரிகளை விரட்டிய தவான் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக 400 ரன்களை கடந்து அசத்தினார். அவர் அரைசதம் கடப்பார் என எதிர்பார்த்த நிலையில் 37 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ரஷீத் கான் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.

தாவனின் விக்கெட்டுக்கு பிறகு, கேப்டன் ரிஷாப் பண்ட் உடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இறுதி வரை ஆட்டமிழக்காத இந்த ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தது. இந்த ஜோடியில் ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 47 ரன்களும் ( 2 சிக்ஸர், 2 பவுண்டரி), கேப்டன் பண்ட் 21 பந்துகளில் 35 (2 சிக்ஸர், 3 பவுண்டரி) ரன்களும் சேர்த்திருந்தனர்.

மேலும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த டெல்லி அணி 17.5 ஓவரிலே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் அந்த அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு நகர்ந்துள்ளது.

இந்த ஆட்டத்தில் வலுவான இலக்கை நிர்ணயிக்காத ஐதராபாத் அணிக்கு இது 7வது தோல்வி ஆகும். இந்த படு தோல்வியால் அந்த அணி பிளே - ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:29 (IST) 22 Sep 2021
    டெல்லியிடம் பணிந்த ஐதராபாத்; 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்.



  • 23:06 (IST) 22 Sep 2021
    டெல்லியிடம் பணிந்த ஐதராபாத்; 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்.



  • 22:56 (IST) 22 Sep 2021
    4000 ரன்களை கடந்த ஸ்ரேயாஸ் ஐயர்!

    டி 20 கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் 4000 ரன்களை கடந்துள்ளார்.



  • 22:49 (IST) 22 Sep 2021
    பந்து வீச திணறும் ஐதராபாத்; வெற்றிக்கு அருகில் டெல்லி!

    டெல்லி அணிக்கு 24 பந்துகளில் 25 ரன்கள் தேவையுள்ள நிலையில், அந்த அணி வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. ஐதராபாத் அணி பந்து வீச திணறி வருகிறது.



  • 22:29 (IST) 22 Sep 2021
    ஷிகர் தவான் அவுட்!

    ஐபிஎல் 2021ல் ஆறாவது ஆண்டாக 400 ரன்களை கடந்த ஷிகர் தவான் 1 சிக்ஸர் 6 பவுண்டரிகளை சிதறவிட்டு 42 ரன்கள் சேர்த்த நிலையில் ரஷீத் கான் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.



  • 22:15 (IST) 22 Sep 2021
    ஐபிஎல் 2021ல் 400 ரன்களை கடந்தார் தவான்!

    ஐபிஎல் 2021ல் 400 ரன்களை கடந்துள்ள ஷிகர் தவான் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக 400 ரன்களை கடந்துள்ளார்.



  • 21:58 (IST) 22 Sep 2021
    பவர் பிளே முடிவில் டெல்லி அணி (6 ஓவர்) 39/1

    1 விக்கெட்டை இழந்த டெல்லி அணி அதிரடியாக விளையாடி வருகிறது. அந்த அணி பவர் பிளே முடிவில் 39 ரன்கள் சேர்த்துள்ளது.



  • 21:49 (IST) 22 Sep 2021
    பிரித்வி ஷா அவுட்!

    136 ரன்கள் இலக்கை துரத்தி வரும் டெல்லி அணிக்கு அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல துவக்கம் கொடுத்தனர். ஷிகர் தவான் - பிரித்வி ஷா ஜோடியில் 2 பவுண்டரிகளை விரட்டிய பிரித்வி ஷா 11 ரன்கள் சேர்த்த நிலையில் கலீல் அகமது வேகத்தில் சிக்கி ஆட்டமிழந்தார்.



  • 21:18 (IST) 22 Sep 2021
    ஐதராபாத் திணறல் ஆட்டம்; டெல்லிக்கு 134 இலக்கு!

    அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வந்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்துள்ளது. எனவே டெல்லி அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



  • 21:03 (IST) 22 Sep 2021
    100 -யை கடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

    தொடர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 17 ஓவர் முடிவில் 107/6 என்ற நிலையில் உள்ளது.



  • 20:51 (IST) 22 Sep 2021
    பந்து வீச்சில் மிரட்டும் டெல்லி; திணறும் ஐதராபாத்!

    டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் ஐதராபாத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வருகிறது. கேப்டன் கேன் வில்லியம்சன் 18 ரன்களுடனும், மணீஷ் பாண்டே 17 ரன்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்துள்ளனர்.

    இவர்களைத்தொடர்ந்து வந்த ஜேசன் ஹோல்டர் ப்ரீ ஹிட்டில் ஒரு சிக்ஸர் அடித்து ஆறுதல் தந்த நிலையில் அக்சர் படேல் சுழலில் சிக்கி வெளியேறினார்.

    முன்னணி வீரர் கேதர் ஜாதவ் 3 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.



  • 20:06 (IST) 22 Sep 2021
    சரியும் விக்கெட்டுகள்; சரிக்கட்டுமா சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

    ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ள நிலையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முன்னணி வீரர் டேவிட் வார்னர் பூஜ்ஜிய ரன்களுடன் நடையைக் கட்டினார்.

    அவருடன் மறுமுனையில் இருந்த விருத்திமான் சாஹா 1 சிக்ஸர் 2 பவுண்டரிகளை சிதறவிட்ட நிலையில் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    8 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 42/2



  • 19:38 (IST) 22 Sep 2021
    வார்னர் அவுட்!

    ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ள நிலையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முன்னணி வீரர் டேவிட் வார்னர் பூஜ்ஜிய ரன்களுடன் நடையைக் கட்டினார்.



  • 19:33 (IST) 22 Sep 2021
    ஆட்டம் இனிதே ஆரம்பம்!

    கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி டாஸ் வென்ற நிலையில், அந்த அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர், விருத்திமான் சாஹா ஜோடி பேட்டிங் செய்ய களம் கண்டுள்ளது.

    அன்ரிச் நார்ட்ஜே முதல் ஓவரை வீசுகிறார்.



  • 19:28 (IST) 22 Sep 2021
    இரு அணிகளின் சார்பில் களமிறங்கும் வீரர்களின் விபரம்:-

    டெல்லி அணி:

    பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர் / கேப்டன் ), மார்கஸ் ஸ்டோனிஸ், ஷிம்ரான் ஹெட்மியர், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான்

    ஐதராபாத் அணி:

    டேவிட் வார்னர், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), மணீஷ் பாண்டே, ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், கேதார் ஜாதவ், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது



  • 19:10 (IST) 22 Sep 2021
    டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் தேர்வு!

    டெல்லி - ஐதராபாத் அணிகள் மோதும் இன்றை ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி டாஸ் வென்ற நிலையில் அந்த அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.



  • 18:56 (IST) 22 Sep 2021
    பிட்ச் ரிப்போர்ட்!

    துபாய் மைதானத்தின் ஆடுகளம் சீமர்களுக்கு ஆரம்பத்தில் உதவியது. இது தொடர்ந்தால், இரு அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தலாம்.



  • 18:52 (IST) 22 Sep 2021
    7 தொடர் வெற்றிகள் தேவை!

    கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி பிளே- ஆப் சுற்றுக்கு முன்னேற அந்த அணிக்கு இன்னும் 7 வெற்றிகள் தேவை.



  • 18:49 (IST) 22 Sep 2021
    எழுச்சி பெறுமா ஐதராபாத்?

    டெல்லி - ஐதராபாத் அணிகள் ஏற்கனவே சென்னையில் சந்தித்த லீக் ஆட்டம் சமனில் (டை) முடிந்து அதன் பிறகு சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி கண்டது.

    இந்நிலையில் இன்றை ஆட்டத்தில் பதிலடி கொடுத்து எழுச்சி பெறுமா ஐதராபாத் அணி என்று பொறுத்திருந்து பாப்போம்.



  • 18:14 (IST) 22 Sep 2021
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்-க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் இன்று மாலை 7:30 மணிக்கு அரங்கேறும் 33-வது லீக் ஆட்டத்தில் இளம் வீரர் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.



Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Ipl Live Score Ipl 2021 Ipl 2021 Live
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment