IPL 2021 Tamil News: தனது 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 10 ரன் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, அதன் வீரர்கள் வரிசையில் எந்த மாற்றமும் செய்யாமல் களம் கண்டுள்ளது. லீக் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை கண்ட சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணி அதன் அணியில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
நான்கு வீரர்களை மாற்றங்களை கொண்டு வந்துள்ள ஹைதராபாத் அணியில், விருத்திமான் சஹா, ஜேசன் ஹோல்டர், ஷாபாஸ் நதீம் மற்றும் டி நடராஜன் ஆகியோருக்கு பதிலாக விராட் சிங், அபிஷேக் சர்மா, முஜீப் உர் ரஹ்மான் மற்றும் கலீல் அகமது ஆகியோரை சேர்த்துள்ளது.
நடராஜன் இடமில்லை
கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கெதிரான இரண்டு ஆட்டங்களிலும் 4 ஓவர்களை வீசிய யார்க்கர் மன்னன் நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)