Advertisment

SRH vs RR highlights: சுழல் வித்தை காட்டிய சாஹல்... ராஜஸ்தான் அபார வெற்றி!

IPL 2022: Match 5, Sunrisers Hyderabad vs Rajasthan Royals ( SRH vs RR) Check Live score and live updates Tamil News: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சில் மிரட்டிய ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
IPL 2022 Tamil News: SRH vs RR Live score updates

IPL 2022 Live Match SRH vs RR Highlights  Live score updates in tamil: 15-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரில் புனேயில் நேற்றிரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

Advertisment

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லர் ஜோடி அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்தது. இதில் 2 பவுண்டரி 1 சிக்ஸரை விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் களமிறங்கி அதிரடியாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 28 பந்துகளில் 3 சிக்ஸர் 3 பவுண்டரிகள் என 35 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.

அடுத்தடுத்த விக்கெட் இழப்பு இருந்தாலும், களத்தில் இருந்த கேப்டன் சஞ்சு சாம்சன் - தேவ்தத் பாடிக்கல் ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இந்த ஜோடியில் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 41 ரன்கள் சேர்த்த தேவ்தத் பாடிக்கல் உம்ரான் மாலிக் பந்துவீச்ச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

தனது பாட்னர்ஷிப் உடைக்கப்பட்டாலும் அதிரடியை கைவிடாத கேப்டன் சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு தனது 15 ஐபிஎல் அரைசத்தை பதிவு செய்தார். ஆனால், அவர் 55 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்களில், மிடில் ஆடர் வீரர் ஷிம்ரோன் ஹெட்மியர் 13 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் விளாசி 32 ரன்கள் சேர்த்த நிலையில் நடராஜன் வேகத்தில் சிக்கி போல்ட் அவுட் ஆனார்.

இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை சேர்த்தது. ஐதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக நடராஜன் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 211 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சன் ரைசர்ஸ் அணி ஐதராபாத் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது ராஜஸ்தான். ஐதராபாத் அணியின் முன்னணி வீரர்களான அபிஷேக் சர்மா (9), ராகுல் திரிபாதி (0), கேப்டன் கேன் வில்லியம்சன் (2) நிக்கோலஸ் பூரன் (0) போன்றோர் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர்.

பின்னர் வந்த வீரர்களில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 40 ரன்களும், ரொமாரியோ ஷெப்பர்ட் 24 ரன்களும் எடுத்தனர். இறுதிவரை களத்தில் நின்று விளையாடிய ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்து 57 ரன்கள் சேர்த்தார்.

தொடர் விக்கெட் சரிவால் தொடக்க முதலே திணறி வந்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சிறப்பான பந்துவீச்சால் ஐதராபாத் அணிக்கு தொடர் நெருக்கடி கொடுத்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழல் சுழல் மன்னர்களில் ஒருவரான யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிரெண்ட் போல்ட் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த அசத்தலான வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி தொடரில் அதன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:17 (IST) 29 Mar 2022
    61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சன் ரைசர்ஸ் அணி ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



  • 23:01 (IST) 29 Mar 2022
    பந்துவீச்சில் மிரட்டும் ராஜஸ்தான்; தொடர் விக்கெட் சரிவால் திணறும் ஐதராபாத்!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன் ரைசர்ஸ் அணி ஐதராபாத் அணி தற்போது வரை 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து ரன் சேர்க்க தடுமாறி வருகிறது. தற்போது அந்த அணி 16 ஓவர்களில் 81 ரன்கள் சேர்த்துள்ளது.

    ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 130 ரன்கள் தேவை.



  • 22:55 (IST) 29 Mar 2022
    சுழல் வித்தை காட்டிய சாஹல்!

    ஐதராபாத் அணிகு எதிரான ஆட்டத்தில் பந்து வீசி வரும் ராஜஸ்தான் அணி மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளது. அந்த அணியின் சுழல் மன்னர்களில் ஒருவரான யுஸ்வேந்திர சாஹல் அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகிய மூவரின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.



  • 22:51 (IST) 29 Mar 2022
    பந்துவீச்சில் மிரட்டும் ராஜஸ்தான்; தொடர் விக்கெட் சரிவால் திணறும் ஐதராபாத்!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன் ரைசர்ஸ் அணி ஐதராபாத் அணி தற்போது வரை 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து ரன் சேர்க்க தடுமாறி வருகிறது. தற்போது அந்த அணி 16 ஓவர்களில் 81 ரன்கள் சேர்த்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 130 ரன்கள் தேவை.



  • 22:50 (IST) 29 Mar 2022
    பந்துவீச்சில் மிரட்டும் ராஜஸ்தான்; தொடர் விக்கெட் சரிவால் திணறும் ஐதராபாத்!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன் ரைசர்ஸ் அணி ஐதராபாத் அணி தற்போது வரை 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து ரன் சேர்க்க தடுமாறி வருகிறது. தற்போது அந்த அணி 16 ஓவர்களில் 81 ரன்கள் சேர்த்துள்ளது.

    ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 130 ரன்கள் தேவை.



  • 22:27 (IST) 29 Mar 2022
    5 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஐதராபாத்!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன் ரைசர்ஸ் அணி ஐதராபாத் அணி

    தற்போது வரை 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து ரன் சேர்க்க தடுமாறி வருகிறது. தற்போது அந்த அணி 10.2 ஓவர்களில் 37 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.



  • 22:09 (IST) 29 Mar 2022
    அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; ரன் சேர்க்க தடுமாறும் ஐதராபாத்!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன் ரைசர்ஸ் அணி ஐதராபாத் அணி பவர் பிளே முடிவில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து ரன் சேர்க்க தடுமாறி வருகிறது. தற்போது அந்த அணி 6 ஓவர்களில் 14 ரன்கள் சேர்த்துள்ளது.



  • 21:53 (IST) 29 Mar 2022
    அடுத்த விக்கெட்!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன் ரைசர்ஸ் அணி ஐதராபாத் அணி அதன் 2வது விக்கெட்டை பறிகொடுத்துள்ளது. வில்லியம்சன் விக்கெட்டுக்கு பின் வந்த ராகுல் திரிபாதி பூஜ்ஜிய ரன்னில் நடையை கட்டினார்.



  • 21:49 (IST) 29 Mar 2022
    வில்லியம்சன் அவுட்!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன் ரைசர்ஸ் அணி ஐதராபாத் அணி அதன் முதல் விக்கெட்டை பறிகொடுத்துள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 2 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.



  • 21:28 (IST) 29 Mar 2022
    ரன்மழை பொழிந்த ராஜஸ்தான்; ஐதராபாத்துக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கு!

    ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. இறுதி வரை அந்த அணியின் வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை சேர்த்துள்ளது ராஜஸ்தான் அணி. இதனையடுத்து சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



  • 21:19 (IST) 29 Mar 2022
    ஹெட்மியர் அவுட்!

    ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியாக ரன்களை சேர்த்து வருகிறது. அந்த அணியின் மிடில் ஆடர் வீரர் ஷிம்ரோன் ஹெட்மியர் 13 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என 32 ரன்கள் சேர்த்த நிலையில் நடராஜன் வேகத்தில் சிக்கி போல்ட் அவுட் ஆனார்.



  • 20:59 (IST) 29 Mar 2022
    சஞ்சு அவுட்!

    ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியாக ரன்களை சேர்த்து வரும் நிலையில், 26 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு தனது 15 ஐபிஎல் அரைசத்தை பதிவு செய்த கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.



  • 20:57 (IST) 29 Mar 2022
    கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதம்!

    ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியாக ரன்களை சேர்த்து வருகிறது. இதில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு தனது 15 ஐபிஎல் அரைசத்தை பதிவு செய்தார். தற்போது அவர் 55 ரன்களுடன் களத்தில் உள்ளார்.



  • 20:54 (IST) 29 Mar 2022
    படிக்கல் அவுட்; 15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான்!

    ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. களத்தில் இருந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் தேவ்தத் பாடிக்கல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்த நிலையில், 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 41 ரன்கள் சேர்த்த தேவ்தத் பாடிக்கல் உம்ரான் மாலிக் பந்துவீச்ச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். தற்போது ராஜஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் சேர்த்துள்ளது.



  • 20:33 (IST) 29 Mar 2022
    ரன்மழை பொழியும் ராஜஸ்தான்; பந்து வீச திணறும் ஐதராபாத்!

    ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், களத்தில் உள்ள கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் தேவ்தத் பாடிக்கல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர். அந்த அணி 11 ஓவர்கள் முடிவில் 101 ரன்கள் சேர்த்துள்ளது.



  • 20:18 (IST) 29 Mar 2022
    பட்லர் அவுட்!

    ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் 2வது விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 3 சிக்ஸர் 3 பவுண்டரிகளை விளாசிய ஜோஸ் பட்லர் 33 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.



  • 20:06 (IST) 29 Mar 2022
    ஜெய்ஸ்வால் அவுட்!

    ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் முதல் விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்த நிலையில் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.



  • 19:34 (IST) 29 Mar 2022
    ராஜஸ்தான் பேட்டிங்; ஆட்டம் இனிதே ஆரம்பம்!

    ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.



  • 19:15 (IST) 29 Mar 2022
    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்!

    அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, கேன் வில்லியம்சன்(கேப்டன்), நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்



  • 19:14 (IST) 29 Mar 2022
    ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்!

    யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நாதன் கவுல்டர்-நைல், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா



  • 19:11 (IST) 29 Mar 2022
    டாஸ் வென்ற அணி ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு; ராஜஸ்தான் முதலில் பேட்டிங்!

    ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.



  • 18:52 (IST) 29 Mar 2022
    டாஸ் 7 மணிக்கு சுண்டப்படும்!

    ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சரியாக 7 மணிக்கு சுண்டப்படும்.



  • 18:16 (IST) 29 Mar 2022
    நேருக்கு நேர்:

    ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், இதுவரை 15 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 8-ல் ஐதராபாத்தும், 7-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன.



  • 18:15 (IST) 29 Mar 2022
    ராஜஸ்தான் ராயல்ஸ் VS சன்ரைசர்ஸ் ஐதராபாத்: உத்தேச வீரர்கள் பட்டியல்!

    ராஜஸ்தான் ராயல்ஸ்:

    தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), கருண் நாயர், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜிம்மி நீஷம், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்:

    கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் சர்மா, நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், டி நடராஜன், ஷ்ரேயாஸ் கோபால், கார்த்திக் தியாகி.



  • 17:54 (IST) 29 Mar 2022
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்கள் பட்டியல்!

    கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், பிரியம் கார்க், விஷ்ணு வினோத், கிளென் பிலிப்ஸ், ஆர் சமர்த், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்ட், மார்கோ ஜான்சன், ஜே சுசித் , ஷ்ரேயாஸ் கோபால், புவனேஷ்வர் குமார், சீன் அபோட், கார்த்திக் தியாகி, சௌரப் திவாரி, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, உம்ரான் மாலிக், டி நடராஜன்.



  • 17:52 (IST) 29 Mar 2022
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்!

    சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், ஷுபம் கர்வால், துருவ் ஜூரல், குல்தீப் யாதவ், குல்தீப் சென், தேஜஸ் பரோகா, அனுனய் சிங், கே.சி. கரியப்பா, ஜோஸ் பட்லர், ரஸ்ஸி வான் டெர் டுசென், நாதன் கவுல்டர் நைல், ஜிம்மி நைல், , டேரில் மிட்செல், கருண் நாயர், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.



  • 17:50 (IST) 29 Mar 2022
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

    15-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போரட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.



Sports Cricket Ipl Live Cricket Score Live Updates Ipl Cricket Ipl News Ipl Live Score Sunrisers Hyderabad Ipl 2022 Sanju Samson Kane Williamson Srh Vs Rr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment