ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணி, ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது. 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அணியின் நீண்ட கால கேப்டனாக இருக்கும் எம்.எஸ் தோனி கடந்த சீசனில் தனது பதவியை ஆல்-ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் வழங்கினார். ஆனால், அவரால் அணியை சிறப்பாக வழிநடத்த இயலவில்லை. இதனால், மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனியே ஏற்று வழிநடத்தினார்.
இருப்பினும், கடந்த சீசனில் நடந்த 14 போட்டிகளில் சென்னை அணி 10ல் தோல்வி, 4ல் வெற்றி என புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 9 இடத்துடன் விடைபெற்றது. இம்முறை அதை மாற்றும் வகையில் அணி நிர்வாகம் புதிய திட்டங்களை தீட்டியுள்ளது. அதற்கு ஏற்றார் போல், கடந்த இறுதியில் நடந்த ஐ.பி.எல் 2023 மினி ஏலத்தில் சில முக்கிய வீரர்களை வாங்கியது. குறிப்பாக, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்சை ரூ 16.25 கோடி கொடுத்து வாங்கியது.