Advertisment

பிளே ஆஃப் சுற்றில் சி.எஸ்.கே நுழைய முடியுமா? கூட்டல்- கழித்தல் கணக்குகள்

IPL 2022; what are the chances there for Chennai Super Kings to enter into Playoffs Tamil News: சென்னை அணி 'பிளே-ஆஃப்' சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள 3 போட்டிகளிலும் நல்ல 'ரன் ரேட்டில்' வெற்றி பெற வேண்டும்.

author-image
WebDesk
New Update
CSK’s Playoff Chances in ipl 2022 Tamil News

Chennai Super Kings

Chennai super kings (CSK) Tamil News: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டுக்கான தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இத்தொடருக்கான 70 லீக் போட்டிகள் மும்பை, புனே ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது அடுத்த சுற்றான பிளே-ஆஃப் சுற்று எங்கு மற்றும் எந்த தேதிகளில் நடக்கிறது என்ற விவரத்தை ஐபிஎல் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இதன்படி ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்று போட்டிகள்

Advertisment

மே 24 - குவாலிபையர் 1 - கொல்கத்தா

மே 25 - எலிமினேட்டர் - கொல்கத்தா

மே 27 - குவாலிபையர் 2 - அகமதாபாத்

மே 29 - இறுதிப்போட்டி - அகமதாபாத்

ஆகிய தேதிகளில் குறிக்கப்பட்ட மைதானங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும்.

9 அணிகளின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்புகள் எப்படி?

இதுஒருபுறமிருக்க, நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்புகளுடனும், சுவாரஷ்யங்களுடனும் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் கடந்த சனிக்கிழமை (மே 7) நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் பஞ்சாப் கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதனால் ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் நடப்பு தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்ட முதல் அணி ஆனது. அந்த அணி இதுவரை நடந்த 10 ஆட்டங்களில் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 16 புள்ளிகளைப் பெற்றுள்ளன. முதலிரண்டு இடத்தில் உள்ள அந்த அணிகள் ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளன. பட்டியலில் அடுத்த இரு இடங்களில் தலா 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் உள்ளன. அந்த அணிகள் மீதமுள்ள போட்டிகளில் ஒன்றில் வென்றாலே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடுவார்கள்.

டெல்லி கேபிடல்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 10 புள்ளிகள் மற்றும் +0.150 நெட் ரன்ரேட்டை கொண்டுள்ளது. அந்த அணி பிளேஆஃப் தகுதியைப் பெற மீதமுள்ள மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் 11 ஆட்டங்களில் விளையாடி 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அந்த அணியின் நெட் ரன்ரேட் -0.031 ஆக உள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி பிளே ஆஃப்களுக்குள் நுழைய மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வென்றாக வேண்டும்.

பஞ்சாப் கிங்ஸ் 11 ஆட்டங்களில் விளையாடி 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மேலும், அந்த அணியின் நெட் ரன்ரேட் -0.231 ஆக உள்ளது. மயங்க் அகர்வால் தலைமையிலான அந்த அணி 14 புள்ளிகளைப் பெற 2 ஆட்டங்களை வென்றாக வேண்டும்.

சென்னை அணியின் பிளேஆஃப் வாய்ப்பு எப்படி?

நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமாடி வரும் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை விளையாடிய 11 போட்டியில் 4ல் வெற்றி பெற்று, 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. அந்த அணியினருக்கு மகிழ்ச்சியான விஷயம் என்னெவென்றால் நெட் ரன்ரேட் தான். நெகடிவ்வில் இருந்த நெட் ரன்ரேட் தற்போது 0.028 என பாசிடிவ்வுக்கு மாறியுள்ளது.

சென்னை அணி 'பிளே-ஆஃப்' சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் (எதிரணி: மும்பை-மே 12, குஜராத்-மே 15, ராஜஸ்தான்-மே 20) நல்ல 'ரன் ரேட்டில்' வெற்றி பெற்றாக வேண்டும். அதன்பின் மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

அடுத்து வரும் போட்டிகளின் முடிவு இப்படி அமைந்தால் சென்னை அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு கிடைக்கலாம்.

ராஜஸ்தான் (எதிர்: டெல்லி, மே 11),

பஞ்சாப் (எதிர்: பெங்களூரு, மே 13),

கொல்கத்தா (எதிர்: ஐதராபாத், மே 14),

டெல்லி (எதிர்: பஞ்சாப், மே 16),

மும்பை (எதிர்: ஐதராபாத், மே 17),

குஜராத் (எதிர்: பெங்களூரு, மே 19),

மும்பை (எதிர்: டெல்லி, மே 21),

ஐதராபாத் (எதிர்: பஞ்சாப், மே 22) அணிகள் வெற்றி பெற வேண்டும். இப்படி நடக்கும் பட்சத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் தலா 14 புள்ளிகளுடன் 4வது இடத்தை பகிரும். அப்போது சென்னை அணி நல்ல 'ரன் ரேட்' உடன் இருந்தால், சென்னை அணி 'பிளே-ஆஃப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Super Kings Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Ms Dhoni Ipl 2022
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment