Advertisment

DC vs MI Highlights: ரோகித் அரை சதம், திலக் அதிரடி; டெல்லியை போராடி வென்ற மும்பை

வார்னர், அக்சர் அரை சதம் வீண்; பந்துவீச்சில் சொதப்பிய டெல்லி; ரோகித், திலக் அதிரடியால் டெல்லியை வென்றது மும்பை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Delhi Capitals (DC) and Mumbai Indians (MI) Tamil News

DC vs MI IPL 2023 Live Score: Delhi will take on Mumbai.

IPL 2023 Delhi Capitals vs Mumbai Indians Highlights in tamil: 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7:30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கும் 16 வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியயான மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

Advertisment

டாஸ் வென்ற மும்பை பவுலிங்; டெல்லி முதலில் பேட்டிங்

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அதன்படி, டெல்லி அணி முதல் பேட்டிங் செய்கிறது.

இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:

டெல்லி கேப்பிட்டல்ஸ்:

பிருத்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), மணீஷ் பாண்டே, யாஷ் துல், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான்

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹால் வதேரா, ரித்திக் ஷோக்கீன், ரிலே மெரிடித், அர்ஷத் கான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்

டெல்லி பேட்டிங்

டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இருப்பினும் பிரித்வி 15 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து மணீஷ் பாண்டே களமிறங்கி பவுண்டரிகளாக விளாசினார். மறுபுறம் வார்னர் நிதானமாக ஆடி ரன் சேர்த்து வந்தார். இந்தநிலையில், மணீஷ் பாண்டே 26 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்ததாக களமிறங்கிய யஷ் 2 ரன்களிலும், பவல் 4 ரன்களிலும், லலித் யாதவ் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 76 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்ததிருந்த நிலையில், 98 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து டெல்லி அணி தடுமாறியது. இந்தநிலையில் அக்சர் பட்டேல் களமிறங்கி சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இருப்பினும் அக்சர் பட்டேல் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 25 பந்துகளைச் சந்தித்த அக்சர் 5 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் விளாசினார். மறுபுறம் அரை சதம் அடித்திருந்த வார்னரும் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அபிஷேக் 1 ரன்னிலும், குல்தீப் ரன் எதுவும் எடுக்காமலும், நார்ட்ஜே 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 165 ரன்னுக்கு 6 விக்கெட் என்ற நிலையில் இருந்து 172 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் டெல்லி அணி இழந்தது.

டெல்லி அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்கள் சேர்த்தது. மும்பை தரப்பில் பெகண்ட்ரஃப் மற்றும் சாவ்லா தலா 3 விக்கெட்களையும், மெரிடித் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

மும்பை பேட்டிங்

மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இவரும் பவர்ப்ளேயில் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இஷான் கிஷன் பவுண்டரிகளாக விளாசினார். அணியின் எண்ணிக்கை 71 ஆக இருந்த நிலையில் இஷான் கிஷன் அவுட் ஆனார். அவர் 26 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். அடுத்ததாக திலக் வர்மா களமிறங்கினார். திலக் சிக்சர்களாக விளாசி டெல்லி பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.

இதற்கிடையில் ரோகித் சர்மா அரை சதம் கடந்தார். இதனால் அணியின் எண்ணிக்கை விரைவாக உயர்ந்தது. மும்பை 139 ரன்கள் எடுத்திருந்தப்போது திலக் அவுட் ஆனார். திலக் 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரி அடங்கும். அடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் கோல்டன் டக் ஆனார். அடுத்து டிம் டேவிட் களமிறங்கிய சிறிது நேரத்திலே, ரோகித் அவுட் ஆனார். அவர் 45 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து வந்த கேமரூன் கிரீன் அதிரடியாக ஆடினார். இருப்பினும் கடைசிக் கட்டத்தில் டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால், மும்பை அணி ரன் சேர்க்க தடுமாறியது. மும்பை அணி கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டி டெல்லியை வீழ்த்தியது.

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் அடித்து வென்றது. டேவிட் 13 ரன்களுடனும், கிரீன் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் முகேஷ் 2 விக்கெட்களையும், முஸ்தாபிஷூர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Ipl Live Score Delhi Capitals Mumbai Indians Dc Vs Mi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment