டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் கடந்த இறுதியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். அவர் தற்போது தனது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். அதனால், நடப்பு சீசனில் அவர் கலந்துகொள்ள போவதில்லை. எனவே, டெல்லி கேபிடல்ஸ் அணியை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் வழிநடத்துகிறார். அக்சர் படேல் துணை கேப்டனாக செயல்படுகிறார்.