Advertisment

மிஸ்டர் ஐ.பி.எல் தினேஷ் கார்த்திக்... இந்திய அணிக்கு திரும்புவாரா?

2018-2019 காலகட்டத்தில் இந்தியாவுக்கு 6 ஆவது ஆர்டரில் களத்தில் இறங்கி 56.5 சராசரியை வைத்திருந்தவர் தினேஷ் கார்த்திக். ஸ்டிரைக் ரேட் 161.4 வைத்திருந்தார்.

author-image
WebDesk
New Update
மிஸ்டர் ஐ.பி.எல் தினேஷ் கார்த்திக்... இந்திய அணிக்கு திரும்புவாரா?

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களித்து வருகிறார்.

Advertisment

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 189 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அரை சதம் பதிவு செய்தார். மொத்தம் 34 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் பெங்களூரு அணி வெற்றி பெற தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டம் முக்கிய பங்கை வகித்தது.

அந்த ஆட்டத்தில் அவர் 44 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்தபோது தினேஷ் கார்த்திக் அதிக மன அழுத்தத்துக்கு ஆளானார்.

அதைத் தொடர்ந்து அவர் கேப்டன் பொறுப்பையும் விட்டுவிட்டார். இந்த ஐபிஎல் சீசனில் இவரை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

சில தினங்களுக்கு முன் தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில், நான் இன்னும் கிரிக்கெட்டில் நினைத்ததை செய்து முடிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

டெல்லி அணிக்கு எதிராக அவர் அரை சதம் கடந்ததும் கிரிக்கெட் ரசிகர்கள் இவர் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று ஒரு ரசிகரும், 26 பந்துகளில் அரை சதம் பதிவு செய்த தினேஷ் கார்த்தி சிறந்த ஆட்டக்காரர் என்பதை நிரூபித்துள்ளார் என்று மற்றொரு ரசிகரும் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

2018-2019 காலகட்டத்தில் இந்தியாவுக்கு 6 ஆவது ஆர்டரில் களத்தில் இறங்கி 56.5 சராசரியை வைத்திருந்தவர் தினேஷ் கார்த்திக். ஸ்டிரைக் ரேட் 161.4 வைத்திருந்தார்.

அந்த வரிசையில் இறங்கி இத்தகைய ஸ்டிரைக் ரேட்டையும் பேட்டிங் சராசரியையும் வேறு எந்தவொரு ஒரு வீரரும் வைத்திருக்கவில்லை. அதன் பிறகு அவர் சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடவில்லை என்று ரோஹித் சங்கர் என்ற ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

MI vs LSG Highlights: மும்பைக்கு 6வது தோல்வி; 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி!

மற்றொரு ரசிகர் அல்டிமேட்டாக உலகக் கோப்பை இந்திய அணியில் தினேஷ் கார்த்தியின் பெயரை 7ஆவது வரிசையில் சேர்த்து மகிழ்ச்சி அடைந்தார்.

இவ்வாறாக தமிழர் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sports Ipl 2022
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment