2023 ஐ.பி.எல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத், சென்னை, லக்னோ உள்ளிட்ட அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
டெல்லி, ஹைதராபாத், பஞ்சாப், கொல்கத்தா உள்ளி்டட அணிகள் வெளியேறிவிட்டன. இந்த நிலையில், குஜராத்திடம் பெங்களூரு தோல்வியை சந்தித்ததால் மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் லீக் சுற்றுடன் ராஜஸ்தானும் நடையை கட்டியுள்ளது.
முன்னதாக கலகலப்பான வீரரான ரவிசந்திரன் அஸ்வின், ஒவ்வொரு போட்டியின்போது ஹல்லா போல கொஞ்சம் நல்லா போல் என மாற்று அணி வீரர்களை கலாய்த்துவந்தார்.
கடைசியாக சென்னை அணியையும் அவர் கலாய்த்துவிட்டார். இதனால் கடுப்பான ரசிகர்கள் அஸ்வினை வசைப்பாட தொடங்கிவிட்டனர்.
மறுபுறம், ராஜஸ்தான் அணி தோல்விகளையும் சந்தித்து வந்தது. இந்த நிலையில், மும்பை, ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின்போது, ஹைதராபாத் வெல்ல வேண்டும் என அஸ்வின் நினைத்தார்.
ஏனெனில் ஹைதராபாத் வெற்றி பெற்றால் அது ராஜஸ்தான் அணிக்கு வாய்ப்பாக அமையும். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.
இதற்கெல்லாம் அஸ்வினின் வாய்தான் காரணம் என ரசிகர்கள் கலாய்க்க தற்போது ஹல்லா போல் கொஞ்சம் டல்லா போல் என வசனத்தை மாற்றி போட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“