இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த சீசனில் அதன் முதல் ஐ.பி.எல் தொடரில் களமாடிய, சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. அந்த அணி மினி ஏலத்தில் அயர்லாந்து வீரர் ஜோசுவா லிட்டில் (ரூ. 4.4 கோடி), சிவம் மாவி (ரூ. 6 கோடி), கே.எஸ்.பாரத் (ரூ. 1.2 கோடி), ஒடியன் ஸ்மித் (ரூ. 50 லட்சம்), கேன் வில்லியம்சன் (ரூ. 2 கோடி) உள்ளிட்ட முன்னணி வீரர்களை வாங்கியது.