IPL 2022, KKR vs RR Highlights in tamil: 15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 47வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், 2 ரன்கள் எடுத்த படிக்கல் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் அவுட் ஆனார். 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்த பட்லர் டிம் சவுத்தி பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கருண் நாயர் 13 ரன்னிலும், ரியான் பராக் 19 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
களத்தில் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசி 1 சிக்ஸர் 7 பவுண்டரிகளை துரத்தி 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய ஷிம்ரோன் ஹெட்மியர் 27 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்களை சேர்த்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கொல்கத்தா அணி தரப்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளையும், சிவம் மாவி, உமேஷ் யாதவ், அனுகுல் ராய் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Innings Break!#KKR bowlers restrict #RR to a total of 152/5.#KKR chase coming up shortly. Stay tuned!
— IndianPremierLeague (@IPL) May 2, 2022
Scorecard – https://t.co/fVVHGJTNYn #KKRvRR #TATAIPL pic.twitter.com/ix06Tv0Zyq
Sanju Samson is our Top Performer from the first innings for his knock of 54 off 49 deliveries.
— IndianPremierLeague (@IPL) May 2, 2022
A look at his batting summary here 👇👇 #TATAIPL #KKRvRR pic.twitter.com/HDldBkxyu2
தொடர்ந்து 153 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கம் கிட்டவில்லை. தொடக்க வீரர் ஆரோன் பின்ச் 4 ரன்னிலும், 2 பவுண்டரியை விரட்டிய பாபா இந்திரஜித் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். களத்தில் இருந்த கேப்டன் ஷ்ரேயாஸ் – நிதிஷ் ராணா ஜோடி அணிக்கு வலுவான ரன்களை சேர்த்தது. இந்த ஜோடி 50 ரன்களை சேர்த்த நிலையில், 1 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த கேப்டன் ஷ்ரேயாஸ் கீப்பர் சஞ்சு வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
கொல்கத்தா அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், களத்தில் இருந்த நிதானம் கலந்த அதிரடியை நிதிஷ் ராணா – ரிங்கு சிங் ஜோடி வெளிப்படுத்தினர். சீரான இடைவெளியில் பவுண்டரிகளை ஓடவிட்டு அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர்.
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில், குல்தீப் சென் வீசிய 20 ஓவரை சந்தித்த நிதிஷ் ராணா முதல் பந்தையே சிக்சருக்கு பறக்க விட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார். இதனால், ராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை சுவைத்தது. கொல்கத்தா அணியின் வெற்றிக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த நிதிஷ் ராணா 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 48 ரன்களும், ரிங்கு சிங் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் எடுத்தனர்.
இந்த அசத்தலான வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் கடைசி 5 ஆட்டங்களில் தோல்வியுற்ற கொல்கத்தா அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருந்த அந்த அணி தற்போது 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தோல்வி கண்ட ராஜஸ்தான் 3வது இடத்திலே நீடிக்கிறது.
Nitish Rana with a maximum to finish it off as @KKRiders win by 7 wickets and add two much needed points to their tally.
— IndianPremierLeague (@IPL) May 2, 2022
Scorecard – https://t.co/fVVHGJTNYn #KKRvRR #TATAIPL pic.twitter.com/cEgI86p4Gn
For his match winning knock of 42* off 23 deliveries, Rinku Singh is our Top Performer from the second innings.
— IndianPremierLeague (@IPL) May 2, 2022
A look at his batting summary here 👇👇 #TATAIPL #KKRvRR pic.twitter.com/eTYUC9T1AE
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்:
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்:
ஆரோன் பின்ச், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, சிவம் மாவி
Indian Premier League, 2022Wankhede Stadium, Mumbai 27 May 2022
Kolkata Knight Riders 158/3 (19.1)
Rajasthan Royals 152/5 (20.0)
Match Ended ( Day – Match 47 ) Kolkata Knight Riders beat Rajasthan Royals by 7 wickets
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 153 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 153 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 18 ரன்கள் தேவை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 153 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 39 ரன்கள் தேவை.
நிதிஷ் ராணா 38 ரன்களுடனும், ரிங்கு சிங் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 153 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்களை சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணியில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 153 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 50 ரன்களை சேர்த்துள்ளது.
கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 20 ரன்களுடனும், நிதிஷ் ராணா, 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசத்தை பதிவு செய்த கேப்டன் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளையும், சிவம் மாவி, உமேஷ் யாதவ், அனுகுல் ராய் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். கொல்கத்தா அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த அணி வெற்றி இலக்கை துரத்த களமிறங்கியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 38 ரன்களை சேர்த்துள்ளது.
அந்த அணியில் 3 பவுண்டரிகளை துரத்திய தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது அந்த அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ரன்களை சேர்த்துள்ளது.
கேப்டன் சஞ்சு 21 ரன்களுடனும், தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
அந்த அணியில் ஜோஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், 2 ரன்கள் எடுத்த படிக்கல் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்
ஆரோன் பின்ச், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, சிவம் மாவி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 47வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ரியான் பராக், கே.சி கரியப்பா, நவ்தீப் சைனி, ஓபேத் மெக்காய், அனுனய் சிங், குல்தீப், குல்தீப், குல்தீப். , துருவ் ஜூரல், தேஜஸ் பரோகா, குல்தீப் யாதவ், ஷுபம் கர்வால், ஜேம்ஸ் நீஷம், நாதன் கவுல்டர்-நைல், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேரில் மிட்செல்.
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆரோன் பின்ச், அபிஜீத் தோமர், அஜிங்க்யா ரஹானே, பாபா இந்திரஜித், நிதிஷ் ராணா, பிரதம் சிங், ரின்கு சிங், அசோக் சர்மா, பாட் கம்மின்ஸ், ரசிக் தார், சிவம் மவி, டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் யாதவ் சகரவர்த்தி, அமன் கான், ஆண்ட்ரே ரசல், அனுகுல் ராய், சமிகா கருணாரத்னே, முகமது நபி, ரமேஷ் குமார், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 47வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.