Advertisment

CSK vs MI Highlights: பெஸ்ட் ஃபினிஷர் என நிரூபித்த டோனி; சி.எஸ்.கே 2-வது வெற்றி

IPL 2022 match 33, Mumbai Indians vs Chennai Super Kings (MI vs CSK) Check match highlights in tamil: மும்பை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி திரில் வெற்றியை ருசித்தது.

author-image
WebDesk
New Update
Mumbai Indians vs Chennai super Kings , Match 33,IPL 2022,சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் ஹெட்-டு-ஹெட் ரெக்கார்டு,ஐபிஎல் 2022

Mumbai Indians vs Chennai super Kings Head to Head,MI VS CSK Head to Head Records

IPL 2022 MI vs CSK match Highlights in tamil: 15வது ஐபிஎல் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 33வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

Advertisment

மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா - இஷான் கிஷன் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருவரையும் பூஜ்ஜிய ரன்னில் பெவிலியனுக்கு வழியனுப்பினார். மீண்டும் 3வது ஓவரை வீசிய அவர் டெவால்ட் ப்ரீவிஸை 4 ரன்னுடன் ஆட்டமிழக்க செய்தார். அடுத்த டுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை பவர் பிளேயில் ரன் சேர்க்க தடுமாறியது.

சிறிது நேரம் விக்கெட் சரிவை தடுத்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடியில் ஒரு சிக்ஸர் 3 பவுண்டரியை துரத்திய சூர்யகுமார் 32 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ஹிருத்திக் ஷோக்கீன் 25 ரன்களிலும், பொல்லார்ட் 14 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

இதற்கிடையில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த திலக் வர்மா அரைசதம் விளாசினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய அவர் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார். அவருடன் மறுமுனையில் இருந்த ஜெய்தேவ் உனத்கட்19 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை சேர்த்தது. இதனால் சென்னனை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்கம் முதல் பந்துவீச்சில் மிரட்டிய சென்னை அணியில் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர், மகேஷ் தீக்ஷனா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 156 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பூஜ்ஜிய ரன்னில் நடையை கட்டினார். 2 பவுண்டரிகளை விரட்டிய மிட்செல் சான்ட்னர் 11 ரன்னில் அவுட் ஆனார். சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த மற்றொரு தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 25 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளை விரட்டி 30 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட துபே 13 ரன்னில் அவுட் ஆனார்.

களத்தில் இருந்த அம்பதி ராயுடு - கேப்டன் ஜடேஜா ஜோடியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பதி ராயுடு 2 பவுண்டரிகள் 3 சிக்ஸரை பறக்க விட்டு 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜடேஜா 3 ரன்னில் அவுட் ஆனார்.

சென்னையின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் இருந்த தோனி - பிரிட்டோரியஸ் ஜோடியில், அதிரடியாக விளையாடிய பிரிட்டோரியஸ் 22 ரன்கள் எடுத்து உனத்கட் வீசிய முதல் பந்தில் ஆட்டமிழந்தார். 2வது பந்தை சந்தித்த பிராவோ ஒரு ரன் எடுக்க, ஸ்ட்ரைக்கை வசப்படுத்திய தோனி 3வது பந்தில் சிக்ஸர் பறக்க விட்டார். 4வது பந்தில் பவுண்டரி துரத்தி, 5வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார்.

இப்போது சென்னையின் வெற்றிக்கு 1 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தில் ஏற்கனவே தொற்றி இருந்த பரபரப்பு மீண்டும் உச்சத்திற்கு சென்று இருந்தது. ஆனால், களத்தில் கூலாக இருந்த தோனி உனத்கட் வீசிய லோ-ஃபுல் டாஸ் பந்தை பைன் லெக் திசையில் பவுண்டரி கோட்டிற்கு விரட்டி தனது ஸ்டைலில் ஆட்டத்தை முடித்து வைத்தார். 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்திய சென்னை அணி திரில் வெற்றியை ருசித்தது.

இந்த அசத்தலான வெற்றியின் மூலம் சென்னை அணி நடப்பு தொடரில் அதன் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. தொடர் தோல்வியில் துவண்டு வரும் மும்பைக்கு இது 7வது தோல்வியாகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகேஷ் சவுத்ரி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். எல்லா காலத்திலும் தான் ஒரு சிறந்த ஃபினிஷர் என்பதை சென்னையின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“



  • 23:30 (IST) 21 Apr 2022
    வெளுத்து வாங்கிய தோனி; மும்பை வீழ்த்திய சென்னை திரில் வெற்றி!

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 156 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடைசி ஓவரை வெளுத்து வாங்கிய தோனி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மும்பையை வீழ்த்திய சென்னை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.



  • 23:18 (IST) 21 Apr 2022
    சென்னையின் வெற்றிக்கு 6 பந்துகளில் 17 ரன்கள் தேவை!

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 156 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை சேர்த்துள்ளது.

    சென்னையின் வெற்றிக்கு 6 பந்துகளில் 17 ரன்கள் தேவை.



  • 23:12 (IST) 21 Apr 2022
    சென்னையின் வெற்றிக்கு 12 பந்துகளில் 29 ரன்கள் தேவை!

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 156 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது சென்னை அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்களை சேர்த்துள்ளது.

    சென்னையின் வெற்றிக்கு 12 பந்துகளில் 29 ரன்கள் தேவை.



  • 22:59 (IST) 21 Apr 2022
    ராயுடு அவுட்; 15 ஓவர்கள் முடிவில் சென்னை!

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 156 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்களை சேர்த்துள்ளது.

    சென்னை அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 பவுண்டரிகள் 3 சிக்ஸரை பறக்க விட்ட அம்பதி ராயுடு 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சென்னையின் வெற்றிக்கு 30 பந்துகளில் 54 ரன்கள் தேவை.



  • 22:42 (IST) 21 Apr 2022
    துபே அவுட்; 13 ஓவர்கள் முடிவில் சென்னை!

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 156 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது சென்னை அணி 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 88 ரன்களை சேர்த்துள்ளது.

    சென்னை அணியில் ஒரு சிக்ஸரை பறக்க விட்ட ஷிவம் துபே 13 ரன்னில் ஆட்டமிழந்தார்.



  • 22:25 (IST) 21 Apr 2022
    உத்தப்பா அவுட்!

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 156 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 66 ரன்களை சேர்த்துள்ளது.

    சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த ராபின் உத்தப்பா 25 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளை விரட்டி 30 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.



  • 22:18 (IST) 21 Apr 2022
    பவர்பிளே முடிவில் சென்னை அணி!

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 156 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 46 ரன்களை சேர்த்துள்ளது.

    ருதுராஜ் கெய்க்வாட் பூஜ்ஜிய ரன்னிலும், மிட்செல் சான்ட்னர் 11 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.



  • 21:24 (IST) 21 Apr 2022
    அரைசதம் விளாசிய திலக் வர்மா; சென்னைக்கு 156 ரன்கள் வெற்றி இலக்கு!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை சேர்த்துள்ளது. இதனால் சென்னனை அணிக்கு 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா அரைசதம் விளாசினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடி அவர் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார்.

    தொடக்கம் முதல் பந்துவீச்சில் மிரட்டிய சென்னை அணியில் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர், மகேஷ் தீக்ஷனா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.



  • 21:09 (IST) 21 Apr 2022
    அரைசதம் விளாசிய திலக் வர்மா!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது மும்பை அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்களை சேர்த்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் 42 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளை விரட்டி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் திலக் வர்மா அரைசதம் விளாசினார்.



  • 20:57 (IST) 21 Apr 2022
    கீரன் பொல்லார்ட் அவுட்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது மும்பை அணி 17 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்களை சேர்த்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியை ஓடவிட்ட கீரன் பொல்லார்ட் 14 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.



  • 20:47 (IST) 21 Apr 2022
    15 ஓவர்கள் முடிவில் மும்பை!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது மும்பை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்களை சேர்த்துள்ளது.



  • 20:37 (IST) 21 Apr 2022
    5 விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது மும்பை அணி 13.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்களை சேர்த்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் 3 பவுண்டரிகளை ஓடவிட்டு 25 ரன்கள் சேர்த்த ஹிருத்திக் ஷோக்கீன் பிராவோ பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



  • 20:14 (IST) 21 Apr 2022
    பந்துவீச்சில் மிரட்டும் சென்னை; தடுமாறும் மும்பை... பவர் பிளே முடிவில்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது மும்பை அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 52 ரன்களை சேர்த்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் 21 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளை ஓடவிட்டு 32 ரன்கள் சேர்த்த சூர்யகுமார் யாதவ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



  • 20:10 (IST) 21 Apr 2022
    சூர்யகுமார் யாதவ் அவுட்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் 21 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளை ஓடவிட்டு 32 ரன்கள் சேர்த்த சூர்யகுமார் யாதவ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



  • 20:05 (IST) 21 Apr 2022
    பந்துவீச்சில் மிரட்டும் சென்னை; தடுமாறும் மும்பை... பவர் பிளே முடிவில்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது மும்பை அணி 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 42 ரன்களை சேர்த்துள்ளது.

    மும்பை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா -இஷான் கிஷன் பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்தனர். டெவால்ட் ப்ரீவிஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.



  • 19:41 (IST) 21 Apr 2022
    மும்பை அணியின் தொடக்க ஜோடியை காலி செய்த முகேஷ் சவுத்ரி!

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீசி வருகிறது. முகேஷ் சவுத்ரி வீசிய முதலாவது ஓவரில் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா - இஷான் கிஷன் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். இருவரும் பூஜ்ஜிய ரன்னில் நடையை கட்டியது குறிப்பிடத்தக்கது.



  • 19:37 (IST) 21 Apr 2022
    கேப்டன் ரோகித் அவுட்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரின் 2வது பந்தில் பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.



  • 19:36 (IST) 21 Apr 2022
    ஆட்டம் இனிதே ஆரம்பம்!

    15வது ஐபிஎல் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கிய 33வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா - இஷான் கிஷன் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.



  • 19:13 (IST) 21 Apr 2022
    டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு; மும்பை அணி முதலில் பேட்டிங்!

    15வது ஐபிஎல் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் 33வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.



  • 19:01 (IST) 21 Apr 2022
    மும்பை அணியில் 2 வீரர்கள் அறிமுகம்!

    மும்பை இந்தியன்ஸ் அணியில் ரித்திக் ஷோக்கீன் மற்றும் ரிலே மெரிடித் ஆகிய வீரர்கள் அறிமுக வீரர்களாக இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகின்றனர். அவர்களுக்கு கேப்டன் ரோகித் மும்பை அணியின் தொப்பியை வழங்கினார்.



  • 18:56 (IST) 21 Apr 2022
    நேருக்கு நேர்; ஹெட்-டு-ஹெட்!

    மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் மும்பை 13 ஆட்டங்களிலும், சென்னை 13 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

    முந்தைய ஆட்டம் முடிவு!

    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் இந்த இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

    கடைசி ஐந்து ஆட்டங்களின் முடிவுகள் பின்வருமாறு:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

    மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

    மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

    மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



  • 18:32 (IST) 21 Apr 2022
    ஐபிஎல்லின் "எல் கிளாசிகோ"

    'எல் கிளாசிகோ' என்பது ஸ்பெயினில் நடைபெறும் "லா லிகா" கால்பந்து தொடரில் பார்சிலோனா அணியும், ரியல் மாட்ரிட் அணியும் மோதும் ஆட்டத்தை தான் "எல் கிளாசிகோ" என்று அழைப்பார்கள். ஏனென்றால், இவ்விரு அணிகளும் கால்பந்து உலகில் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளாக வலம் வருகின்றன.



  • 18:30 (IST) 21 Apr 2022
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!

    ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி



  • 18:27 (IST) 21 Apr 2022
    ஆடம் மில்னேவுக்கு பதில் மதீஷா பத்திரன!

    சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஆடம் மில்னே காயம் காரணமான நடப்பு தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால், அவருக்கு பதிலாக 19 வயதான மதீஷா பத்திரன என்கிற இலங்கை கிரிக்கெட் இளம் வீரர் சென்னை அணியில் இணைந்துள்ளார். மதீஷா இலங்கை மண்ணில் ஜூனியர் லசித் மலிங்கா’ என்று அழைக்கப்படுகிறார். தவிர, இவர் கடந்த 2020 முதல், டீனேஜர் ரிசர்வ் பிளேயராக சென்னை அணியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார்.



  • 18:20 (IST) 21 Apr 2022
    மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!

    ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, டைமல் மில்ஸ்



  • 18:17 (IST) 21 Apr 2022
    சென்னை சூப்பர் கிங்ஸ்!

    ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்எஸ் தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, அம்பதி ராயாடு, ராபின் உத்தப்பா, மிட்செல் சான்ட்னர், கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, டெவோன் கான்வே, சிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், ராஜவர்தக்ஷானா, ராஜவர்தக்ஷானா ஹங்கர்கேகர், துஷார் தேஷ்பாண்டே, கேஎம் ஆசிப், சி ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், சுப்ரான்ஷு சேனாபதி, கே பகத் வர்மா, பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி.



  • 18:16 (IST) 21 Apr 2022
    மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!

    ரோஹித் சர்மா (கேப்டன்), அன்மோல்பிரீத் சிங், ராகுல் புத்தி, ராமன்தீப் சிங், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், அர்ஜுன் டெண்டுல்கர், பாசில் தம்பி, ஹிருத்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, ஜெய்தேவ் உனட்கட், ஜோப்ரா ஆர்ச்சர், மயங்க் மார்கண்டே , ரிலே மெரிடித், டைமல் மில்ஸ், அர்ஷத் கான், டேனியல் சாம்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், ஃபேபியன் ஆலன், கீரன் பொல்லார்ட், சஞ்சய் யாதவ், ஆர்யன் ஜூயல் மற்றும் இஷான் கிஷன்.



  • 18:16 (IST) 21 Apr 2022
    7:30 மணிக்கு தொடங்கும் ஆட்டம்!

    15வது ஐபிஎல் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 33வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.



  • 18:13 (IST) 21 Apr 2022
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.



Chennai Super Kings Sports Ipl Live Cricket Score Live Updates Ipl Cricket Ipl News Ipl Live Score Mumbai Indians Mi Vs Csk Ipl 2022
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment