Advertisment

ஐ.பி.எல் பிளே ஆஃப்: 4வது இடத்திற்கு முட்டி மோதும் 5 அணிகள்!

IPL 2022 Playoffs qualification scenario: 5 teams wrestling for 4th place Tamil News: தற்போதைய நிலவரப்படி, நடப்பு தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கு முதலில் முன்னேறிய அணியாக குஜராத் உள்ளது. அதேவேளையில், முதலில் வெளியேறிய அணியாக மும்பை உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ipl 2022 playoffs; 5 teams fighting for 4th place

IPL 2022 Playoffs qualification scenario

ipl 2022 playoffs Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்று வரும் 15 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கிளைமேக்சான பிளே ஆஃப் சுற்றுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது. நடப்பு தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதியதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் களமாடி வரும் நிலையில், புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.

Advertisment

16 புள்ளிகளுடன் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் 2வது இடத்திலும், தலா 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் 3 மற்றும் 4ஆவது இடத்திலும் உள்ளன. ​

இந்த பட்டியலில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 12 புள்ளிகளுடன், ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலா 10 புள்ளிகளுடன் முறையே 7 மற்றும் 8 வது இடத்திலும் உள்ளன.

இதுவரை நடந்துள்ள 12 ஆட்டங்களில் 4 வெற்றி, 8 தோல்வி என 8 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது இடத்திலும், 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளன.

தற்போதைய நிலவரப்படி, நடப்பு தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கு முதலில் முன்னேறிய அணியாக குஜராத் உள்ளது. அதேவேளையில், முதலில் வெளியேறிய அணியாக மும்பை உள்ளது. அந்த அணியுடன் சென்னை அணியும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

மீதமுள்ள ஆட்டங்களில் லன்கோ அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றுவிட்டால், பிளேஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துவிடும். மீதமுள்ள ஆறு அணிகளும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்கிற சூழல் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Ipl Ipl Cricket Ipl News Ipl 2022
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment