Advertisment

RR vs MI Highlights: வெற்றிக்கணக்கை தொடங்கிய மும்பை; 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது!

IPL 2022 match 44, Rajasthan Royals vs Mumbai Indians(RR vs MI) match highlights in tamil: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று, முதல் வெற்றியை ருசித்தது.

author-image
WebDesk
New Update
IPL 2022 RR vs MI  Live Score online

ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

IPL 2022, RR vs MI Highlights in tamil: 15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நேற்றிரவு 7:30 மணிக்கு தொடங்கிய 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

Advertisment

ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், 3 பவுண்டரிகளை ஓடவிட்ட படிக்கல் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட கேப்டன் சஞ்சு 16 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த டேரில் மிட்செலுடன் தொடக்க வீரர் பட்லர் ஜோடி அமைத்தார். விக்கெட் சரிவை தடுக்க நிதானமாக விளையாடிய இந்த ஜோடியில் மிட்செல் 17 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஹிருத்திக் ஷோக்கீன் வீசிய 16 வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட பட்லர் அரைசதம் விளாசினார். தொடர்ந்து வீசப்பட்ட 3 பந்துகளையும் சிக்ஸர் அடித்தார். 5வது பந்தை டாட் பால் விட்ட அவர் 6வது பந்தில் சூர்யகுமார் வசம் கேட்ச் கொடுத்து 67 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளை விரட்டிய அஸ்வின் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை சேர்த்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மும்பை அணி தரப்பில் ரித்திக் ஷோக்கீன் மற்றும் ரிலே மெரிடித் தலா 2 விக்கெட்டுகளையும், டேனியல் சாம்ஸ் மற்றும் குமார் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 159 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னிலும், தொடக்க வீரர் இஷான் கிஷன் 26 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பிறகு அணிக்கு வலுவான ரன்களை சேர்த்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடியில், அதிரடி காட்டி அரைசதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்த திலக் வர்மா ரியான் பாரக் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

களத்தில் இருந்த கீரன் பொல்லார்ட் - டிம் டேவிட் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்ல போராடினர். மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. 20வது ஓவரை சந்தித்த கீரன் பொல்லார்ட் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தில் மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில், பின்னர் வந்த டேனியல் சாம்ஸ் வீசப்பட்ட 2வது பந்திலே சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். ஒரு சிக்ஸர் 2 பவுண்டரிகளை விரட்டிய டிம் டேவிட் 20 ரன்கள் எடுத்தார்.

பரபரப்பான ஆட்டத்தில் பந்துவீச திணறி வந்த ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று முதல் வெற்றியை ருசித்தது. வெற்றிக்கணக்கை தொடங்கிகியுள்ள அந்த அணி 2 புள்ளிகளுடன் 10 வது இடத்திலே நீடிக்கிறது. தோல்வி கண்ட ராஜஸ்தான் 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஆடும் லெவன்:

ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்

மும்பை இந்தியன்ஸ் ஆடும் லெவன்:

இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ரித்திக் ஷோக்கீன், டேனியல் சாம்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“



  • 23:39 (IST) 30 Apr 2022
    வெற்றிக்கணக்கை தொடங்கிய மும்பை; 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று, முதல் வெற்றியை பதிவு செய்தது.



  • 23:32 (IST) 30 Apr 2022
    மும்பை அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 4 ரன்கள் தேவை!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை சேர்த்துள்ளது.

    மும்பை அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 4 ரன்கள் தேவை.



  • 23:26 (IST) 30 Apr 2022
    மும்பை அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 12 ரன்கள் தேவை.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை சேர்த்துள்ளது.

    மும்பை அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 12 ரன்கள் தேவை.



  • 23:20 (IST) 30 Apr 2022
    மும்பை அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 25 ரன்கள் தேவை!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 25 ரன்கள் தேவை.



  • 23:09 (IST) 30 Apr 2022
    திலக் வர்மா அவுட்!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய வந்த திலக் வர்மா 2 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



  • 23:06 (IST) 30 Apr 2022
    அரைசதம் அடித்த சூர்யகுமார் அவுட்!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்களை சேர்த்துள்ளது.

    அதிரடி காட்டி அரைசதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    மும்பை அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 37 ரன்கள் தேவை.



  • 22:59 (IST) 30 Apr 2022
    அரைசதம் விளாசிய சூர்யகுமார்; வெற்றியை நோக்கி மும்பை!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்களை சேர்த்துள்ளது.

    அதிரடி காட்டி வரும் சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசி, 51 ரன்களுடனும், திலக் வர்மா 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    மும்பை அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 46 ரன்கள் தேவை.



  • 22:38 (IST) 30 Apr 2022
    அதிரடி காட்ட முயற்சிக்கும் மும்பை நிதானம் ஆட்டம்; 10 ஓவர்கள் முடிவில்!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 75 ரன்களை சேர்த்துள்ளது.

    சூர்யகுமார் யாதவ் 32 ரன்களுடனும், திலக் வர்மா 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    மும்பை அணியின் வெற்றிக்கு 60 பந்துகளில் 84 ரன்கள் தேவை.



  • 22:14 (IST) 30 Apr 2022
    2 விக்கெட்டுகளை இழந்த மும்பை; பவர் பிளே முடிவில்...!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 41 ரன்களை சேர்த்துள்ளது.

    மும்பை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்னிலும், தொடக்க வீரர் இஷான் கிஷன் 26 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.



  • 21:33 (IST) 30 Apr 2022
    அரைசதம் அடித்து அதிரடி காட்டிய பட்லர்; மும்பைக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு!

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக அரைசதம் அடித்த பட்லர் 67 ரன்கள் குவித்தார்.

    மும்பை அணி தரப்பில் ரித்திக் ஷோக்கீன் மற்றும் ரிலே மெரிடித் தலா 2 விக்கெட்டுகளையும், டேனியல் சாம்ஸ் மற்றும் குமார் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    மும்பை அணி 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த களமிறங்கும்.



  • 21:00 (IST) 30 Apr 2022
    4 தொடர் சிக்ஸர்களை பறக்கவிட்ட பட்லர் அவுட்!

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த பட்லர் 67 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒரு சிக்சருடன் 48 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் என 4 தொடர் சிக்ஸர்களை பறக்கவிட்டு 16 வது ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்



  • 20:56 (IST) 30 Apr 2022
    அரைசதம் அடித்த பட்லர்!

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் 15 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடி வந்த தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் தற்போது அதிரடியில் இறங்கியுள்ளார். மேலும், தனது அரைசதத்தையும் பதிவு செய்துள்ளார்.



  • 20:53 (IST) 30 Apr 2022
    டேரில் மிட்செல் அவுட்; 15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான்!

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் அதிரடி காட்ட முயற்சித்த டேரில் மிட்செல் ஒரு பவுண்டரியை விரட்டி 17 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    தற்போது ராஜஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 102 ரன்களை சேர்த்துள்ளது.



  • 20:26 (IST) 30 Apr 2022
    2 விக்கெட்டை இழந்த ராஜஸ்தான்; நிதான ஆட்டம்!

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் ஜோஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், படிக்கல் 15 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் சஞ்சு 16 ரன்னில் அவுட் ஆனார்.

    தற்போது ராஜஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 73 ரன்களை சேர்த்துள்ளது. தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 28 ரன்களுடனும், டேரில் மிட்செல் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • 20:07 (IST) 30 Apr 2022
    முதல் விக்கெட்டை இழந்த ராஜஸ்தானுக்கு நல்ல தொடக்கம்!

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் ஜோஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், படிக்கல் 15 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    தற்போது ராஜஸ்தான் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்களை சேர்த்துள்ளது.



  • 19:39 (IST) 30 Apr 2022
    ஆட்டம் இனிதே ஆரம்பம்!

    ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    அந்த அணியில் ஜோஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். முதல் ஓவரை பும்ரா வீசுகிறார்.



  • 19:35 (IST) 30 Apr 2022
    கோலி - ரஜத் அரைசதம் வீண்; பெங்களூருவை வீழ்த்திய குஜராத்துக்கு அசத்தல் வெற்றி!

    பெங்களூரு அணிக்கு எதிரான 171 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

    https://tamil.indianexpress.com/sports/ipl/ipl-2022-gt-vs-rcb-live-score-updates-447947/



  • 19:31 (IST) 30 Apr 2022
    டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு; ராஜஸ்தான் முதலில் பேட்டிங்!

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.



  • 19:31 (IST) 30 Apr 2022
    மும்பை இந்தியன்ஸ் ஆடும் லெவன்!

    இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ரித்திக் ஷோக்கீன், டேனியல் சாம்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித்



  • 19:29 (IST) 30 Apr 2022
    சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை தோனியிடம் ஒப்படைத்த ஜடேஜா!

    நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட ரவீந்திர ஜடேஜா தனது பொறுப்பை அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த எம்எஸ் தோனியிடமே ஒப்படைத்துள்ளார். ஜடேஜா வழிநடத்திய சென்னை அணி நடப்பு தொடரில் விளையாடிய 8 ஆட்டங்களில் 2 வெற்றியும் 6 தோல்வியும் கண்டுள்ளது. மேலும், அந்த அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.



  • 19:12 (IST) 30 Apr 2022
    ராஜஸ்தான் ராயல்ஸ் ஆடும் லெவன்!

    ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்



  • 18:26 (IST) 30 Apr 2022
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உத்தேச வீரர்கள் பட்டியல்!

    தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் பாடிக்கல், ரியான் பராக், நாதன் கவுல்டர் நைல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.



  • 18:26 (IST) 30 Apr 2022
    மும்பை இந்தியன்ஸ் அணி உத்தேச வீரர்கள் பட்டியல்!

    ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கீரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, பாசில் தம்பி, டைமல் மில்ஸ்.



  • 18:25 (IST) 30 Apr 2022
    மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!

    ரோஹித் சர்மா (கேப்டன்), அன்மோல்பிரீத் சிங், ராகுல் புத்தி, ராமன்தீப் சிங், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், அர்ஜூன் டெண்டுல்கர், பாசில் தம்பி, ஹிருத்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, ஜெய்தேவ் உனத்கட், ஜோஃப்ரா ஆர்ச்சர், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின். ரிலே மெரிடித், டைமல் மில்ஸ், கார்த்திகேயா சிங், டேனியல் சாம்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், ஃபேபியன் ஆலன், கீரன் பொல்லார்ட், சஞ்சய் யாதவ், ஆர்யன் ஜூயல் மற்றும் இஷான் கிஷன்.



  • 18:24 (IST) 30 Apr 2022
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!

    சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், ஷுபம் கர்வால், துருவ் ஜூரல், குல்தீப் யாதவ், குல்தீப் சென், தேஜஸ் பரோகா, அனுனய் சிங், கே.சி. கரியப்பா, ரஸ்ஸி வான் டெர் டுசென், நாதன் கவுல்டர் நைல், ஜிம்மி நைல், , டேரில் மிட்செல், கருண் நாயர், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.



  • 18:23 (IST) 30 Apr 2022
    7:30 மணிக்கு தொடங்கும் ஆட்டம்!

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.



  • 18:22 (IST) 30 Apr 2022
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ராஜஸ்தான் - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.



Ipl Live Cricket Score Live Updates Ipl Cricket Ipl News Ipl Live Score Live Updats Live News Mumbai Indians Rajasthan Royals Ipl 2022 Mi Vs Rr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment