Advertisment

ஐபிஎல் 2022: பட்லருக்கு 60 லட்சம்… டி.கேவுக்கு டாடா பஞ்ச் கார்… பரிசுத்தொகை பட்டியல் இதுதான்!

Full list of IPL 2022 prize money details in tamil: 863 ரன்களுடன் இந்த சீசனை முடித்த பட்லர், ஆறு தனிநபர் பரிசுகளையும் மொத்தமாக அறுபது லட்சம் ரொக்க பணத்தையும் பெற்றார்.

author-image
WebDesk
New Update
IPL 2022 Tamil News; list of prize money details of players and teams

Dinesh Karthik - Jos Buttler - Hardik Pandya

IPL 2022; Details of all the cash prize that were handed to players IN TAMIL: 15வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் அரங்கேறியது. இதில் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரம்மாண்ட ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. நடப்பு தொடரில் அறிமுக அணியாக களமாடிய அந்த அணியை கேப்டன் ஹர்திக் பாண்டியா திறம்பட வழிநடத்தினார். அவர் இந்த ஆட்டத்தில் கேப்டன்சியில் மட்டுமல்லாது, பந்துவீச்சு, பேட்டிங் என தனது ஆல்ரவுண்டர் முத்திரையை பதித்திருந்தார்.

Advertisment

ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. 131 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய குஜராத் அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 18.1 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது. பந்துவீச்சில் மிரட்டி 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்த கேப்டன் பாண்டியா பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என பறக்க விட்டு 34 ரன்கள் என்கிற நல்ல பங்களிப்பை அணிக்கு வழங்கி இருந்தார்.

பரிசுத்தொகையை அள்ளி குவித்த வீரர்கள்…

இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வென்ற அணிக்கு வெற்றிக்கு கோப்பை வழங்கிய பிறகு, நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பரிசுகளும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. அவ்வகையில், எந்தெந்த வீரர்கள் எவ்வளவு பரிசுத் தொகையை பெற்றனர் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

ஜோஸ் பட்லர்

ராஜஸ்தான் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் நடப்பு தொடரில் அதிக ரன்களை குவித்தவர் என்கிற பெருமையைப் பெற்றார். 863 ரன்களுடன் (17 ஆட்டங்கள்) சீசனை முடித்த பட்லர், ஆறு தனிநபர் பரிசுகளையும் மொத்தமாக அறுபது லட்சம் ரொக்க பணத்தையும் பெற்றார்.

நடப்பு தொடரில் பட்லர் மொத்தம் 45 சிக்ஸர்களை விளாசினார். இது ஒரு தனிநபரின் அதிகபட்சமாக சிக்ஸர் ஆகும். இந்த அசத்தலான சாதனைக்காக அவருக்கு ரூ. 10,00,000 பரிசு வழங்கப்பட்டது. பவுண்டரிகளின் அடிப்படையில், பட்லர் 83 பவுண்டரிகளை விளாசினார். இது மீண்டும் ஒரு தனிநபரின் அதிகபட்சமாக இருந்தது. இந்த சாதனைக்காக அவருக்கு மேலும் ரூ10,00,000 வழங்கப்பட்டது.

அதிக எண்ணிக்கையிலான சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை அடித்ததைத் தவிர, சீசனின் கேம்சேஞ்சராக இருந்ததற்காக பட்லருக்கு மேலும் ரூ.10,00,000 வழங்கப்பட்டது. சீசனின் பவர் பிளேயராக இருந்ததற்காக அவருக்கு மேலும் ரூ.10,00,000 வழங்கப்பட்டது.

இவை தவிர, நடப்பு தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை பட்லர் வென்றதற்காக அவருக்கு ரூ.10,00,000 மற்றும் சீசனின் மிகவும் மதிப்புமிக்க வீரராக இருந்ததற்காக ரூ.10,00,000 வழங்கப்பட்டது.

லாக்கி பெர்குசன்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் இறுதிப் போட்டியில் மணிக்கு (ஸ்பீடோமீட்டரில்) 157.3 கிமீ வேகத்தில் பந்து வீசினார். இந்த சீசனின் வேகமான டெலிவரி இதுவாகும். இது அவருக்கு ரூ10,00,000 வெல்வதற்கு உதவியது.

உம்ரான் மாலிக்

22 வயதான அதிவேக பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு சீசனின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதுடன் ரூ. 10,00,000 வழங்கப்பட்டது.

யுஸ்வேந்திர சாஹல்

நடப்பு தொடரில் தனது மாயாஜால சுழல் மூலம் 17 ஆட்டங்களில் 27 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக உள்ளார். அவருக்கு ஊதா நிற தொப்பி வழங்கப்பட்ட நிலையில், அவர் ரூ.10,00,000 ரொக்க பணத்தையும் பரிசாக பெற்றுக்கொண்டார்.

எவின் லூயிஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பிளே-ஆப் போட்டியில் இருந்து வெளியேற்றிய லக்னோ அணியின் எவின் லூயிஸின் கேட்ச் சீசனின் சிறந்த கேட்சாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அவருக்கு ரூ10,00,000 ரொக்கப் பரிசு கிடைத்தது.

அணிகளைப் பொறுத்தவரை, இரண்டாம் இடத்தைப் பிடித்ததற்காக சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.12.5 கோடி வழங்கப்பட்டது. அதேசமயம், சாம்பியன் குஜராத் அணிக்கு ரூ. 20 கோடி கிடைத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தினேஷ் கார்த்திக் 183.33 ஸ்ட்ரைக் ரேட்டுடன் போட்டியை முடித்ததற்காக 'சூப்பர் ஸ்டிரைக்கர்' (பஞ்ச் ஸ்ட்ரைக்கர்) விருதைப் பெற்றார். அதற்காக அவர் இந்த சீசன் முழுவதும் மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட டாடா பஞ்ச் காரை வென்றார். இந்த பரிசை குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பெற்றுக்கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Gujarat Titans Hardik Pandya Ipl 2022 Dinesh Karthik Jos Buttler
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment