IPL 2023, Chennai vs Hyderabad Match 29 Live Score Updates in tamil: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 29-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
Indian Premier League, 2023MA Chidambaram Stadium, Chennai 28 May 2023
Chennai Super Kings 138/3 (18.4)
Sunrisers Hyderabad 134/7 (20.0)
Match Ended ( Day – Match 29 ) Chennai Super Kings beat Sunrisers Hyderabad by 7 wickets
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க முதலே சென்னையின் பந்துவீச்சை சமாளிக்க திணறிய ஐதராபாத் வீரர்கள் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 34 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்தது. இதனால், சென்னை அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சென்னை அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் சிங், மதீஷா பத்திரனா மற்றும் மகேஷ் தீக்ஷனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 135 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியில் 2 பவுண்டரிகளை விரட்டிய ருதுராஜ் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி வரை களத்தில் இருந்த தொடக்க வீரர் கான்வே அரைசதம் விளாசி 57 பந்துகளில் 12 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 77 ரன்கள் எடுத்தார். இறுதியில், சென்னை அணி 18.4 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்தது.

இந்த அசத்தல் வெற்றியின் மூலம் சென்னை 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை தக்கவைத்துளளது. அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் 33வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 135 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தியது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் கான்வே அரைசதம் விளாசி 77 ரன்கள் எடுத்தார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 135 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. அதிரடியான ஆட்டத்தை சென்னை வீரர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். தொடக்க வீரர் கான்வே அரைசதம் விளாசியுள்ளார்.
வெற்றியை நோக்கி பயணித்து வரும் சென்னை அணிக்கு 18 பந்துகளில் 13 ரன்கள் தேவை.
சென்னை சூப்பர் கிங்ஸ் – ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதி வரும் இன்றைய ஆட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சி.எஸ்.கே ஜெர்ஸியில் கண்டு களித்து வருகிறார். இதேபோல், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனும் சேப்பாக்கத்தில் இருந்து கண்டு களித்து வருகிறார்.
#inpics || சென்னை சூப்பர் கிங்ஸ் – ஐதராபாத் சன்ரைசர்ஸ் மோதல்: சென்னை ஜெர்ஸியில் முதல்வர் ஸ்டலின்!https://t.co/gkgoZMHWlc | 📸 @Pugazh_Murugan | #cskvssrh | #cskvsrh | #cmmkstalin | @mkstalin | @Udhaystalin pic.twitter.com/CVSXoLAclx
— Indian Express Tamil (@IeTamil) April 21, 2023
Watching…CSK vs SRH… at chennai…. pic.twitter.com/hQVkakDT8L
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) April 21, 2023
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் செய்தது. தொடக்க முதலே சென்னையின் பந்துவீச்சை சமாளிக்க திணறிய ஐதராபாத் வீரர்கள் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 34 ரன்கள் எடுத்தார். சென்னை அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் சிங், மதீஷா பத்திரனா மற்றும் மகேஷ் தீக்ஷனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்துள்ளது. இதனால், சென்னை அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Aiden Markram ✅Mayank Agarwal ✅Maheesh Theekshana & @imjadeja with the breakthroughs and @msdhoni with his magic 😉Follow the match ▶️ https://t.co/0NT6FhLcqA#tataipl | #cskvsrh pic.twitter.com/8YqdnUE3ha
— IndianPremierLeague (@IPL) April 21, 2023
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை பந்துவீச்சை சமாளிக்க திணறி வரும் அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.
ஐதராபாத் அணி 13.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்துள்ளது.
சச்சின் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் 5 சதம் உட்பட 87.60 சராசரியுடன் 876 ரன்களை எடுத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 34 ரன்னில் அவுட் ஆனார்.
ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் – ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்ற அணி சென்னை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே, ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக ஹாரி புரூக் – அபிஷேக் சர்மா ஜோடி களமிறங்கியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், மதீஷா பத்திரனா
மாற்று வீரர்கள்: அம்பதி ராயுடு, ஷேக் ரஷீத், எஸ் சேனாபதி, டுவைன் பிரிட்டோரியஸ், ஆர் ஹங்கர்கேகர்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்
மாற்று வீரர்கள்: டி நடராஜன், விவ்ராந்த் சர்மா, க்ளென் பிலிப்ஸ், மயங்க் டாக
சென்னை சூப்பர் கிங்ஸ் – ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்ற அணி சென்னை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே, ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யும்.
ஐதராபாத் சன் ரைசர்ஸ்:
ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ஹென்ரிச் கிளாசென், மார்கோ யான்சென், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி.நடராஜன்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ரஹானே, ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்) துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா அல்லது பென் ஸ்டோக்ஸ், பதிரானா.
சென்னை – ஐதராபாத் அணிகள் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13-ல் சென்னையும், 5-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன. கடைசியாக மோதிய அந்த அணிக்கு எதிரான 5 ஆட்டங்களில் 4-ல் சென்னை அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதல் 2 ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோவிடம் பணிந்தது. அடுத்த 2 ஆட்டங்களில் பஞ்சாப், கொல்கத்தா அணிகளை அதட்டியது. கடந்த லீக் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் மயங்க் அகர்வால் (48 ரன்கள்), ஹென்ரிச் கிளாசென் (36 ரன்கள்), மார்க்ரம் (22 ரன்) ஆகியோர் மட்டுமே ஓரளவு பங்களித்தனர்.
ஐதராபாத்தை பொறுத்தமட்டில் நிலையற்ற பேட்டிங் அந்த அணிக்கு பாதகமாக உள்ளது. பெரிய அளவில் சோபிக்காத தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சொந்த ஊரில் ஜொலித்து தனது அணிக்கு பலம் சேர்ப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சென்னை அணியின் கேப்டன் தோனி முட்டி வலியால் அவதிப்பட்டாலும், அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடி வருகிறார். உள்ளூர் ரசிகர்கள் முன்பு களம் இறங்குவதால் 'ரிஸ்க்' எடுக்க அவர் தயாராக உள்ளார். அவர் களம் இறங்குவதை சென்னை அணியின் பவுலிங் ஆலோசகர் எரிக் சிமன்ஸ் நேற்று உறுதி செய்தார். 'எப்போதும் போல் தோனி நல்ல உடல் தகுதியுடன் தான் இருக்கிறார். அவர் நாளைய (இன்றைய) ஆட்டத்தில் விளையாடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை' என்று அவர் தெரிவித்தார்.
குதிகால் காயத்துடன் போராடிக்கொண்டிருக்கும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து தனது நான்காவது போட்டியில் இருந்து விளையாடும் வாய்ப்பை இழக்க உள்ளார். இதற்கிடையில், நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் நோயில் இருந்து மீண்டு, விளையாட தயாராக உள்ளார்.
நடப்பு சீசனில் சென்னை அணி இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூருவுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 6 புள்ளிகள் பெற்றுள்ளது. பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ரஹானே, ஷிவம் துபேவும், பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, தீக்ஷனா, பதிரானாவும் வலுசேர்க்கிறார்கள்.
முதல் 3 ஆட்டங்களில் அசத்திய தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 2 ஆட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டியது அவசியமானதாகும். முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிராக சென்னை அணி 226 ரன்கள் குவித்தும் 8 ரன் வித்தியாசத்தில் தான் வெற்றியை வசப்படுத்தியது. அந்த அளவுக்கு அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் பலவீனமாக இருந்தது. அந்த தவறை சரிசெய்தால் சென்னனை அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.