ஐ.பி.எல் தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனில் நடந்த 14 போட்டிகளில் 6ல் வெற்றி. 8ல் தோல்வி என பட்டியலில் 12 புள்ளிகளுடன் 7வது இடம் பிடித்தது. கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் சிக்கியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அவர் தொடரின் முதல் பகுதியில் விளையாட வாய்ப்பில்லை. அவருக்கு பதில் அணியை யார் வழிநடத்துவார் என்பது பற்றி இன்னும் தெரிவிக்கப்படவில்லை.