கடந்த சீசனில் அறிமுகமான மற்றொரு அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்சை கேஎல் ராகுல் வழிநடத்தினார். அந்த அணி எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரிடம் தோல்வி கண்டு வெளியேறியது. மினி ஏலத்தில் நிக்கோலஸ் பூரனை ரூ 16 கோடி கொடுத்து வாங்கியது
லக்னோ அணியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ், குயின்டன் டி காக் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர். வேகப்பந்துவீச்சத்திற்கு ஜெய்தேவ் உனட்கட், அவேஷ் கான், துஷ்மந்த சமீர போன்ற வீரர்களும், சுழலுக்கு ரவி பிஷ்னோய், க்ருணால் பாண்டியா போன்ற வீரர்களும் வலு சேர்க்கிறார்கள்.