PBKS vs KKR Live Score: மழையால் ஆட்டம் பாதிப்பு : டக்வொர்த் விதிப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 2வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்த லைவ் ஸ்கோரை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

pbks vs kkr live score ipl 2023 punjab kings vs kolkata knight riders today match 2 latest-scorecard updates in tamil
PBKS vs KKR IPL 2023: Punjab vs Kolkata at the IS Bindra Cricket Stadium in Mohali on Saturday (April 1)

PBKS vs KKR Live Score Updates IPL 2023 TAMIL NEWS: 16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்திய குஜராத் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

Indian Premier League, 2023Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow   29 May 2023

Lucknow Super Giants 193/6 (20.0)

vs

Delhi Capitals   143/9 (20.0)

Match Ended ( Day – Match 3 ) Lucknow Super Giants beat Delhi Capitals by 50 runs

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய பானுகா ராஜபக்ச அரைசதம் விளாசினார். அவர் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 6 பவுண்டரிகளை விரட்டிய கேப்டன் ஷிகர் தவான் 40 ரன்கள் எடுத்தார்.

கொல்கத்தா அணி தரப்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளையும், சுனில் நரைன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 192 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில், மந்தீப் சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து அனுகுல் ராய் 4 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய குர்பாஸ் 16 பந்துகளில் 22 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், சற்று அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் நித்தீஷ் ரானா 17 பந்துகளில் 24 ரன்கள் குவித்து விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், ரிங்கு சிங் 4 ரன்களில் வீழ்ந்தார். இதனால் 10 ஓவர்களில் கொல்கத்தா அணி 80 ரன்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனைத் தொடர்ந்து 6-வது விக்கெட்டுக்கு ரசல் களமிறங்கினார்.

வழக்கம்போல் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து ரசல் பவுண்டரி சிக்சருமாக விளாசினார். இதனால் கொல்கத்தா அணியின் ரன் விகிதம் எகிறிய நிலையில், 19 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 35 ரன்கள் குவித்த ரசல் சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா 146 ரன்கள் குவித்துள்ளது.

வெற்றிக்கு இன்னும் 24 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்ற நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் ஆட்டம் தடைபட்டுள்ளது. ஷெர்தல் தாகூர் 8 ரன்களிலும், நரேன் 7 ரன்களிலும் களத்தில் இருந்தனர். இதனிடையே மழை தொடந்து இடைவிடாமல் பெய்ததால் இந்த டக்வொர்த் விதி கடைபிடிக்கப்பட்டு பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

பஞ்சாப் கிங்ஸ்:

ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், சாம் குர்ரன், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), மன்தீப் சிங், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Pbks vs kkr live score ipl 2023 punjab kings vs kolkata knight riders today match 2 latest scorecard updates in tamil

Exit mobile version