Advertisment

தோனி சொன்ன ஒத்த வார்த்தை.. 19 பந்துகளில் அரை சதம்.. வான்கடே ராஜா ரகானே சீக்ரெட்

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 19 பந்துகளில் அரை சதம் விளாசினார் ரகானே.

author-image
WebDesk
New Update
Play to your strength Ajinkya Rahane reveals MS Dhonis instructions

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி காட்டிய ரகானே.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் 19 பந்துகளில் அரை சதம் கடந்தவர் ரகானே. இது குறித்து அவர் கூறுகையில், “நான் இயல்பான விளையாட்டை விளையாடினேன். இது எனக்கு உற்சாகம் கொடுத்தது.

Advertisment

ஒவ்வொரு வீரரும் வித்தியாசமானவர்கள், அவர்களின் பலம் வேறுபட்டது. நான் வேறொருவராக இருக்க விரும்பவில்லை, ரகானோ ஆகவே இருக்க விரும்புகிறேன்.

அவர்களின் பந்து வீச்சை கவனித்தேன். ஒரு 150க்கு மேல் டார்கெட்டை துரத்தும் போது முதல் 6 ஓவர்கள் முக்கியம். அதை சிறப்பாக விளையாட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, தோனி கொடுத்த ஊக்கம் குறித்து பேசிய ரகானே, “அவரின் ஊக்கம், ஆலோசனைகள் மிகவும் எளிமையானவை. நீங்கள் பழைய பார்முக்கு மாறுங்கள். வேறு ஏதேனும் முயற்சிப்பதை விடுத்துவிட்டு உங்கள் பலத்துக்கு விளையாடுங்கள்” என்றார்.

தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி பேசிய ரகானே, “முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை தேர்வு செய்தது அறிந்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.

சி.எஸ்.கே. அணியின் குணநலன்கள் எனக்கு தெரியும். அது ஒரு குடும்பம் போன்றது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ipl Cricket Mi Vs Csk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment