கடந்த ஐ.பி.எல் 2022 சீசனில் 14 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7ல் வெற்றி, 7ல் தோல்வி என்று பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்தது இதன் எதிரொலியாக பஞ்சாப் அதன் கேப்டன் மயங்க் அகர்வாலை இந்த சீசனில் இருந்து கழற்றி விட்டது. தற்போது அந்த அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். மினி ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் சாம் கர்ரனை ரூ 18.5 கோடி கொடுத்து, அதிக விலைக்கு வாங்கியது.