2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய ஐபிஎல் தொடரின் தொடக்க சீசனில் கோப்பை முத்தமிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் மீண்டும் முத்தமிட துடிக்கிறது. கடந்த சீசனில் நடந்த இறுதிப்போட்டியில் கோப்பையை குஜராத்திடம் பறிகொடுத்த அந்த அணி, இம்முறை அதைக் கைப்பற்ற தீவிரமாக தயாராகி வருகிறது.
விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் கடந்த சீசனில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரின் நாயகன் விருதை (ஆரஞ்சு தொப்பி) வென்றார். இதேபோல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரருக்கான ஊதா நிற தொப்பியை சுழல் மன்னன் யுஸ்வேந்திர சாஹல் வசப்படுத்தினார்.