Advertisment

கடன் சுமை, வீடு துடைக்கும் பணி… கொல்கத்தா வெற்றிக்கு உதவிய ரிங்கு சிங் பின்னணி என்ன?

IPL 2022: Uttar Pradesh all-rounder Rinku Singh, picked for Rs 80 lakh by Kolkata Knight Riders in the IPL auction Tamil News: ராஜஸ்தான் அணியினர் பந்துவீச்சில் தொடர் தாக்குதலை தொடுத்த போதிலும், அழுத்த முகத்தை வெளிப்படுத்தாத ரிங்கு சிங் அணியின் வெற்றிக்கு ராணாவுடன் சேர்ந்து முக்கிய பங்களிப்பை கொடுத்தார்.

author-image
Martin Jeyaraj
New Update
Rinku Singh Tamil News: who is Rinku Singh, wins match for KKR

Rinku Singh all-rounder for Kolkata Knight Riders

Rinku Singh Tamil News: 15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் கோலாகலமாக அரங்கேறி வருகிறது. இதில் நேற்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 47வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்ற வென்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

Advertisment

ராஜஸ்தான் அணியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசத்தை பதிவு செய்த கேப்டன் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்திருந்தார். கொல்கத்தா அணி தரப்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளையும், சிவம் மாவி, உமேஷ் யாதவ், அனுகுல் ராய் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

கொல்கத்தா அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வெற்றி இலக்கை துரத்த களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர்கள் ஜொலிக்கவில்லை. எனினும் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதில் கேப்டன் ஷ்ரேயாஸ் 34 ரன்கள் எடுத்திருந்தார்.

கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை சாய்க்க சிறப்பான விதத்தில் மட்டையை சுழற்றி பார்ட்னர்ஷிப் அமைத்த நிதிஷ் ராணா 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 48 ரன்களும், ரிங்கு சிங் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் எடுத்தனர். இந்த ஜோடியில் நிதிஷ் ராணா அனுபவமுள்ள வீரர். ஆனால், ரிங்கு சிங் கொல்கத்தா அணியில் புதுமுகம்.

publive-image

ராஜஸ்தான் அணியினர் பந்துவீச்சில் தொடர் தாக்குதலை தொடுத்த போதிலும், அழுத்த முகத்தை வெளிப்படுத்தாத ரிங்கு சிங் அணியின் வெற்றிக்கு ராணாவுடன் சேர்ந்து முக்கிய பங்களிப்பை கொடுத்தார். அவர் பவுண்டரிகளை துரத்திய போதெல்லாம், வர்ணனையாளர்கள் ரிங்கு சிங்குவின் பெயரை குறிப்பிட்டு மெச்சினர். இப்படி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் பார்வையையும் ஈர்த்த அந்த இளம் வீரர் ரிங்கு சிங் யார்? அவரின் பின்னணி தான் என்ன? என்பதை இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.

யார் இந்த ரிங்கு சிங்?

ஆல்ரவுண்டர் வீரரான ரிங்கு சிங் உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் நகரைச் சேர்ந்தவர். அங்கு எல்பிஜி சமையல் கேஸ் விநியோக செய்யும் நிறுவனத்தின் சேமிப்பு குவாட்டர்சில் தான் அவரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ரிங்குவின் தந்தை கான்சந்திரா வீடுகளுக்கு எல்பிஜி சிலிண்டர்களை டெலிவரி செய்பவர். மூத்த சகோதரர் ஆட்டோரிக்ஷா ஓட்டுகிறார், மற்றொரு சகோதரர் பயிற்சி மையத்தில் வேலை செய்கிறார்.

கடந்த பிப்ரவரியில் முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிங்குவின் பெயர் தோன்றியது. இந்த ஆல்ரவுண்டர் வீரரை வாங்க மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளின் நிர்வாகம் போட்டி போட்டுக்கொண்டனர். அவருக்கான விலை, ரூ.20 லட்சம் என்கிற அடிப்படை விலையில் இருந்து 80 லட்சம் என்கிற பெருந்தொகைக்கு முன்னேறியது. இந்த நிகழ்வை தனது வீட்டு டிவி நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த ரிங்குவிற்கு தனது நெடுநாள் கனவு நிறைவேறிக்கொண்டிருந்தது.

"எனக்கு 20 லட்சம் தான் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் நான் 80 லட்சத்திற்கு எடுக்கப்பட்டேன்! இந்த பணத்தின் மூலம் எனது பெரிய அண்ணனின் திருமணத்திற்கு என்னால் பங்களிக்க முடியும். என் சகோதரியின் திருமணத்திற்காகவும் ஏதாவது சேமிக்க முடியும் என்பதே எனக்கு அப்போது மனதில் தோன்றிய முதல் எண்ணம்." என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் ரிங்கு சிங் கூறியுள்ளார்.

publive-image

ரிங்குவின் குடும்பம் சில கடினமான காலங்களைக் கண்ட நாட்கள் அது. மூன்று ஆண்டுகளுக்கு முன், அவரது குடும்பம், ஐந்து லட்சம் ரூபாய் கடனில், திருப்பி செலுத்த முடியாமல் தவித்தது. ரிங்கு படிப்பில் ஒன்றும் கெட்டிக்காரர் இல்லை. 9 ஆம் வகுப்பில் தோல்வி கண்ட அவருக்கு தெரிந்ததெல்லாம் கிரிக்கெட் விளையாடுவது தான்.

அப்போது உத்திரபிரதேச மாநில 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடி வந்த ரிங்கு தனக்கு தினசரி கொடுக்கப்படும் பேட்டா தொகையையும், மற்ற பரிசுத் தொகையையும் சேமித்தார். இந்த தொகையைக் கொண்டு பிறகு சிறிது சிறிதாக தனது குடும்ப கடனை அடைத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் 19 வயதுக்குட்பட்ட இந்தியா (U19) அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்புகள் இருந்தது. ஆனால் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பைக்கு ரிங்குவால் தேர்வாக முடியவில்லை.

publive-image

ரிங்கு சிங்

"மூத்த சகோதரனைப் போலவே தந்தையும் மாதம் 6-7 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தார். எனது குடும்பம் கொஞ்சம் பெரியது, கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்துவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. அந்த நாட்கள் மிகவும் போராட்டமானவைகளாக இருந்தன. அதற்கு இப்போது கடவுள் திருப்பிக் கொடுக்கிறார் என்று நினைக்கிறேன்." என்று ரிங்கு கூறியுள்ளார்.

குடும்பத்தினரின் நம்பிக்கையை எப்படி சம்பாதித்தார் ரிங்கு?

டெல்லியில் நடந்த ஒரு போட்டியில் தொடர் நாயகன் விருதை வென்ற பிறகு மோட்டார் சைக்கிளை வென்றதும் ரிங்குவின் குடும்பத்தினரும் அவரை நம்பத் தொடங்கினர். விரைவிலே அலிகார் முழுவதும் அவரது தந்தை சிலிண்டர்களை டெலிவரி செய்ய அந்த மோட்டார் சைக்கிளை பயன்படுத்த தொடங்கியும் இருந்தார். அதன் பிறகு ரிங்குவின் வாழ்க்கையில் ஏறுமுகம் என்று சொல்ல முடியாது.

வழக்கம் போல் அவரது போராட்டம் தொடர்ந்திருந்தது. ஒருமுறை அவர் தனது சகோதரரிடம் வேலை தேட உதவுமாறு கேட்டும் இருந்தார். "என் சகோதரி என்னை ஒரு வீட்டுப் பணியாளராக இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு வீடு துடைத்தல் மற்றும் கழுவுதல் போன்ற வேலையைக் கொடுத்தனர். அதன் பிறகு 'இனி நான் போக மாட்டேன் என்று அம்மாவிடம் சொன்னேன்." என்று ரிங்கு குறிப்பிட்டுள்ளார்.

publive-image

ரிங்கு சிங்

ரிங்கு சிங் ஒன்பது ரஞ்சி டிராபி ஆட்டங்களில், 49 சராசரியுடன் 692 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை அணியில் சேர்த்தது. ஆனால் அவர் பெஞ்ச்சிலே அமரவைக்கப்பட்டார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ட்ரையல்ஸ் கொடுக்க அழைத்தபோது அதிர்ஷ்டம் மீண்டும் திரும்பியது. அந்த ட்ரையல்ஸ் ஆட்டத்தில் ரிங்கு 31 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார்.

"அந்த ஆட்டம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று நான் நினைக்கிறேன். எனது உள்நாட்டு போட்டி சீசன்கள் நன்றாகப் போய்விட்டது. எனவே, எந்த அணியாவது எடுப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு பெரிய பணத்திற்கு நான் எடுக்கப்படுவேன் என்று நினைக்கவில்லை. என்னுடைய வம்சத்தில் இவ்வளவு பணத்தை யாரும் பார்த்ததில்லை." என்று கூறி நெகிழ்ந்துள்ளார் ரிங்கு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ipl Ipl Cricket Ipl News Ipl Live Score Ipl 2022 Kolkata
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment