ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளுள் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது. அந்த அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில், புதிய கேப்டனாக ஃபாஃப் டூ பிளஸிஸ் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான அணி தகுதிச் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோல்வி கண்டு வெளியேறியது.
பெங்களுரு அணி மினி ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லியை ரூ 1.9 கோடி வாங்கியது. பெங்களுரு அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளஸிஸ், முன்னாள் கேப்டன் விராட் கோலி தினேஷ் கார்த்திக் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் போன்ற வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. வேகப்பந்துவீச்சில் மிரட்ட ஹர்ஷல் படேல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு பேக்-அப் வீரராக ஜோஷ் ஹேசில்வுட் உள்ளார். சுழலுக்கு இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவை அந்த அணி பெரிதும் நம்பியுள்ளது.