சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புதுப்பொலிவுடன் களமாடுகிறது. அந்த அணி கேன் கேப்டன் வில்லியம்சனை நீக்கி விட்டு, தென் ஆப்பிரிக்க வீரர்ஐடன் மார்க்ராமை நியமித்துள்ளது. மினி ஏலத்தில் இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் (ரூ. 2 கோடி), தென் ஆப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் (ரூ. 5.25 கோடி), இந்திய வீரர் மயங்க் அகர்வால் (ரூ. 8.25 கோடி), இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் (ரூ. 13.25 கோடி) போன்ற முன்னணி வீரர்களை வசப்படுத்தியது.