Advertisment

காயமடைந்தாலும் விளையாட தயாராக இருந்தேன் : மனம் திறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா

3-வது டெஸ்ட் போட்டியில் காயமடைந்தாலும் வலி நிவாரணி எடுத்துக்கொண்டு 10 முதல் 15 ஓவர்கள் பேட்டிங் செய்ய தயாராக இருந்தேன் என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
காயமடைந்தாலும் விளையாட தயாராக இருந்தேன் : மனம் திறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி 3டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற இழந்த இந்திய அணி அடுத்து நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

Advertisment

இதில் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு சோதனைமேல் சோதனையாக முதல்தர வீரர்கள் பலரும் காயத்தால் போட்டியில் இருந்து விலகினர். முதல் போட்டியுடன் கேப்டன் விராட்கோலி நாடு திரும்பிய நிலையில், அதே போட்டியில் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி வெளியேறினார். தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் உமேஷ் யாதவ், 3-வது போட்டியில் அஸ்வின், விஹாரி, ஜடேஜா ஆகியோர் தொடர்ச்சியாக காயமடைந்து வெளியேறினார்.

ஆனாலும் இந்திய அணியில் அறிமுகமான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், நவதீப் சைனி ஆகிய இளம் வீரர்கள் தங்களது அசத்தல் ஆட்டத்தின் மூலம் வெற்றியை தேடி கொடுத்தனர். இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்ற நிலையில், சிட்னியில் நடைபெற்ற 3-வது போட்டி பெரும் பரபரப்புக்குள்ளானது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338 ரன்களும், இந்தியா 244 ரன்களும் எடுத்தது.

இந்த போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா பேட்டிங்கின்போது காயமடைந்து வெளியேறினார். இதனால் 2-வது இன்னிங்சில் பீல்டிங் செய்ய வரவில்லை. தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 312 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதனால் இந்திய அணி 407 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்திய  272 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் இந்திய அணி தோல்வியடையும் என கருதிய நிலையில், 6-வது விக்கெட்டுக்கு இணைந்த அஸ்வின் விஹாரி ஜோடி 256 பந்துகளை சந்தித்து போட்டியை டிரா செய்ய பெரிதும் உதவியது. இந்நிலையில், சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது கட்டைவிரல் எலும்பு முறிந்த போதிலும், வலி நிவாரணி ஊசி போட்டதால், 10-15 ஓவர்களில் பேட்டிங் செய்ய மனரீதியாக தயாராக இருப்பதாக ஸ்டார் இந்தியா ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்தள்ளார். மேலும் இந்த காயம் காரணமாக அவர் ஆறு வாரங்கள் ஓய்வு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால், வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்க உள்ள, இங்கிலாந்து அணிக்கு எதிரான  தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இந்நிலையில் சிட்னி டெஸ்ட் குறித்து அவர் கூறுகையில்,

சிட்னி டெஸ்ட் போட்டியில் காயமடைந்தாலும், பெயின் கில்லர் ஊசி எடுத்துக்கொண்டு, 10-15 ஓவர்கள் வரை பேட் செய்வேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இன்னிங்ஸ் எப்படி மாறும் என்பதை மனரீதியாகத் திட்டமிட்டு, எந்த ஷாட்களை விளையாட வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேன். ஏனென்றால் எலும்பு  முறிவு ஏற்பட்டுள்ள காரணத்தால், வலியால் எல்லா வகையான ஷாட்களையும் விளையாட முடியாது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும் நான் கணக்கிட்டுக் கொண்டிருந்தேன்.

ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி இருவரும் வலிமையான மனம் கொண்டவர்கள். அவர்களின் இடைவிடாத முயற்சியால், ஜடேஜா பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. 5 ஆம் நாள் 256 பந்துகளை எதிர்கொண்டு மறக்கமுடியாத ஆட்டத்தை விளையாடியுள்ளனர். மேலும் காயம் காரணமாக போட்டியை வெல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே நான் பேட் செய்வேன் என்று நிர்வாகத்துடன் ஒரு பேச்சு இருந்தது. புஜாரா மற்றும் ரிஷாப் பந்த் நன்றாக பேட்டிங் செய்து பார்ட்னர் ஷிப்பை உருவாக்கினர். இதனால் நாம் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்தோம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பந்த் 99 ரன்களில் வெளியேறியதால் நிலைமை மாறியது. இதனால் போட்டியை டிரா செய்யும் நோக்கில் விளையாடினோம் என்று தெரிவித்துள்ளார். அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் 36 ரன்களில் வீழ்ந்த இந்திய அணி, அதன்பிறகு எழுச்சி பெற்று தொடரை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அடிலெய்டின் தோல்விக்கு பிறகு, அதில் இருந்து மீண்டுவர சற்று கடினமாக இருந்தது. “முதல் டெஸ்டை மறந்துவிடுவோம், அந்த டெஸ்டைப் பற்றி பேசவோ, சிந்திக்கவோ பேசவோ கூடாது, என்று முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment